மோடி அரசில் ரூல் ஆஃப் லா வெத்து காகிதமாகிவிட்டது: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

ஆர்.எஸ். எஸ். எனும் அரை ரகசிய அடிப்படைவாத அமைப்பின் வெகுசன அரசியல் கட்சியான பாஜக மோடி அரசானது, காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தை தீர்க்கப்படவே கூடாத அரசியல் சாசன சிக்கலாக மாற்றி விட்டது ..

ஆளும்அதிமுக அரசோ நாடாளுமன்றத்தில் நாடக போராட்டம் நடத்தி, பாஜகவை எதிர்கட்சிகளின் தாக்குதலில் இருந்து நாடாளுமன்றத்தில் காப்பாற்றினார்கள். ஆறு வாரம் பொறுப்போம் என ஆருடம் கூறினார்கள். தற்போது வெட்கமற்ற வகையில் உண்ணாவிரத நாடகம் நடத்தபோகிறார்கள். இது எப்படி உள்ளதென்றால் தப்பிச் செல்கிற திருடனே, ‘திருடன்.. திருடன்’ என கத்திச் சென்ற கதையாக உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மோடி அரசின் நிலைப்பாடானது, முதலாளித்துவ ஜனநாயக நிறுவனங்களான நாடாளுமன்றத்தையும் நீதிமன்றத்தையும் செங்கல்செங்கல்லாக பெயர்த்து வருகிற இந்த ஆட்சியின் மற்றொரு உதாரணமாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக இந்திய ஜனநாயகம் காக்கப்படவேண்டும் என மக்களிடத்தில் கோரிக்கை வைத்த உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், இரு தினங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், உச்ச நீதிமன்றத்தில் ஆர். எஸ். எஸ். ஊடுருவ முயற்சிக்கிறது என குற்றம் சாட்டுகிறார். ராணுவத்தை காவி மயப்படுத்துகிற முயற்சிகள் மற்றொருபுறம் நடக்கிறது. மோடி அரசில், அரசியல் சாசன அடிப்டையிலான ‘ரூல் ஆஃப் லா’ வெத்து காகிதமாகிவிட்டது.

இந்த நிலையில் கர்நாடக தேர்தலை உத்தேசித்து தனது சொந்த கட்சியின் தேர்தல் வெற்றிக்காக ஏழு கோடி தமிழக மக்களின் தார்மீக குடிமைச் சமூக உரிமையை ஆளும் அரசாங்கமும் நீதிமன்றமும் பலாத்காரமாக பறித்து விட்டது.

வேளாண்மையில் பொதுத்துறை முதலீட்டின் சரிவு, வேளாண் பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம், அது விளை பொருட்களின் விலையில் ஏற்படுத்தும் வீழ்ச்சி , அதிகரித்த நீர்பாசன செலவு, காவிரி ஆற்றுப் படுகையில் பேரழிவு திட்டங்கள், ஆற்று மணல் கொள்ளை என தமிழக உழவர்களின் கழுத்தை சுற்றிய சுறுக்குக் கயிறுகளாக உழவர்களின் வாழ்க்கை நிலைமை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி கொத்து கொத்தாக தற்கொலை செய்துகொள்கிற நிலையில் மோடி அரசின் இந்த அரசியல் சாசன மீறல் அடிப்படை ஜனநாயக விரோதமானது.

மக்கள் நல அரசு என சொல்லிக்கொள்கிற, தேசிய இனங்களை பலவந்தமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள இந்திய ஒன்றிய அரசு அதன் சொந்த முதலாளித்துவ ஜனநாயக அம்சங்களையே ஏற்றுக் கொள்ளாத கட்சியின் தலைமையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்ற அதிகாரப்பூர்வ அலுவல் இயந்திரங்களாலும், மைய முதலாளிய அரசாலும் காவிரி நீர் உரிமைக்கான பிரச்சனைகளுக்கு (அறிவியல் பூர்வ அணுகுமுறை மற்றும் தேசிய சிக்கலாக உருவாகிற வாய்ப்புகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன்) நீண்டகால தீர்வினை தெளிவாக முன்வைக்க இயலாத/முயலாத தன்மைகள் அம்பலப்பட்டுவருகின்றன.

ஆனால், இந்த மோசமான நடைமுறைகளுக்கு நாம் கொடுக்கிற விலையோ பெரிதாக உள்ளது!

அருண் நெடுஞ்செழியன், அரசியல்-சமூக செயல்பாட்டாளர்; எழுத்தாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

One thought on “மோடி அரசில் ரூல் ஆஃப் லா வெத்து காகிதமாகிவிட்டது: அருண் நெடுஞ்செழியன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.