இயேசு-இளையராஜா சர்ச்சை: எதிர்வினையாற்ற என்ன இருக்கிறது?

 

அன்புசெல்வம்

அன்பு செல்வம்

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என இளையராஜா சொன்னதில் எதிர் வினையாற்றும் அளவுக்கு கருத்தியல் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை. இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்கிற நம்பிக்கை அவரை ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது. தான் உயிர்த்தெழுந்தேன் என்பதை அவரை நம்பியவர்களுக்கும், நெருங்கிப் பழகியவர்களுக்கும் மட்டுமே காட்சியளித்து நிரூபித்தார் என பைபிள் நற்செய்தி கூறுகிறது.

இயேசுவுக்குப் பின் வந்த தூய பவுல் அடிகளார் “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று உங்கள் உள்ளத்தில் விசுவாசியுங்கள், அவர் ஆண்டவர் என அறிக்கை செய்யுங்கள்” என்கிறார். இயேசுவை விசுவாசிக்கிற‌ கிறிஸ்தவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ளலாம். அவரை விசுவாசிக்காத மற்றவர் ஏற்க வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை.

ரமண மகரிஷி தனது 16 -ஆவது வயதில் உயிர்த்தெழுந்தார் என்கிற‌ நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் எப்படி ஏற்பதில்லையோ அதுபோல மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுந்தார் என்கிற‌ கிறிஸ்தவ இறை நம்பிகையை மற்றவர் ஏற்க வேண்டும் என எதிர் பார்க்க முடியாது. அதை நிராகரிக்கவும், விமர்சிக்கவும், மறு விளக்கம் அளிக்கவும் உரிமை உண்டு. அறிவியல் அடிப்படையிலும், இறை நம்பிக்கையின் அடிப்படையிலும் மத ரீதியானக் கருத்தை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் அவரவர் விருப்பம். கிறிஸ்தவத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட பலர் அவ்வாறு அணுகி இருக்கிறார்கள். Bertrand Russel, Norman Mailer, Holger Kersten , Jose Saramago, Nikos Kazantzakis, Paul Zachariah, Dhyanchand Carr என பலரை குறிப்பிடலாம். கிறித்தவத்தின் மீதான விமர்சனம் என்பது தலித் இறையியலையும், பெண்கள் இறையியலையும் கடந்து பயணிக்கிற காலத்தில் இருக்கிறோம்.

சிறுபான்மை சுகத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு இங்கே ஒரு பிரச்சனை என்றால், கடவுளை நம்பாத, கடவுள் மறுப்புக் கோட்பாட்டாளர்கள் குரல் கொடுக்கும் மதச்சார்பற்ற‌ நாட்டில் வாழ்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து, சிலுவையில் படுகொலை செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து அகில உலக இரட்சகர். துன்பப்படுகிற மக்களின் போராட்டக் குறியீடு. அவருடைய பெயரைக் காப்பாற்ற கிறிஸ்தவர்கள் மட்டும் குத்தகை உரிமை கொண்டாடி, வீதியில் கிளம்ப வேண்டாம். இயேசுவைப் போல வீதிக்கு வந்து போராட ஓராயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் அக்கறை காட்டுங்கள்.

ஒரு கிறிஸ்தவர் தனது இறை நம்பிக்கையில் விடாப்பிடியாக இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் வகுப்புவாதமாக மாறிவிடக்கூடாது. இந்த இறையியல் வேறுபாட்டைப் புரிந்து கொண்டு இளையராஜா போன்றோரை விமர்சிக்க வேண்டும்.

அன்புசெல்வம், எழுத்தாளர்; சமூக செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.