புதிய பார்வை இதழின் ஆசிரியரும் வி.கே. சசிகலாவின் கணவருமான ம. நடராசன் காலமானார். இதுகுறித்து வெளியான சில அஞ்சலி பதிவுகள்…
ஊடகவியலாளர் செந்தில்குமார்
பின்னால் இருந்து கொண்டே இயக்கியதால் அரசியலில் முன்னுக்கு வராமல் போனவர் மதிப்பிற்குரிய ம.நடராசன் அவர்கள். ஜெயலலிதாவின் அத்தனை அரசியல் தந்திரங்களுக்கும் பின்னால் இருந்த மந்திர சக்தி இவர். நம் அரசியல் தந்திரங்களின் சூத்திரதாரி இவர்தான் என்று மக்களுக்கு தெரிந்து விட்டால் தன்னுடைய அரசியல் வளர்ச்சி பாதிக்கப் படும் என்பதால் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர். கற்றுக்கொண்டதே கருணாநிதியிடம் தான் என்றாலும் கடைசிவரை அவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா வாக இருந்தாலும் அவரின் அத்தனை காய் நகர்த்தல்களிலும் எங்கிருந்தோ நடராஜனின் பங்கும் இருக்கும். நவீன அரசியல் சாணக்கியன் ..நாம் இப்போது வாய்பிளந்து பார்க்கும் டிடிவி தினகரனுக்கு இவர் உறவில் மட்டுமல்ல அரசியலிலும் அப்பன். அதனால்தான் இவர் அதிகாரத்தில் இல்லா விட்டாலும் இவரை சுற்றி எப்போதும் அரசியல் பருந்துக்கள் பறந்து கொண்டே இருக்கும்.. எவ்வளவு சர்வ வல்லமை கொண்டிருந்தாலும் காலத்தின் காலடியில் சரணடைந்து தானே ஆக வேண்டும்…
மூத்த அரசியல்வாதி ம.நடராசனுக்கு கண்ணீர் அஞ்சலி…
எழுத்தாளர் ஜி. கார்ல் மார்க்ஸ் எழுதிய பதிவு…