‘நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை’

ராஜசங்கீதன்

ராஜசங்கீதன்

Belittling என ஒரு வார்த்தை இருக்கிறது. சிறுமைப்படுத்துதல் என அர்த்தம்.

சிறுமைப்படுத்துதல் என்பது பொதுவாக தகுதிக்குறைவை சுட்டிக்காட்ட செய்யப்படும் விஷயம். இதில் தகுதி என்பது எது, அதை யார் முடிவு செய்வது என்பதெல்லாம் மிகப்பெரிய அரசியல்.

தகுதிகள் என பார்க்கப்படுபவற்றின் பெரும்பான்மை சாதி, மதம், பாலினம், பணம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கப்படுவதே. சிறுமைப்படுத்துதலிலும் அவ்வாறே.

சிறுமைப்படுத்துதல் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகைகளில் நிகழ்ந்திருக்கின்றன.

கறுப்பின அடிமைமுறை, free thinking பெண்களை வாடிகன் கொன்றது, விதவைகள், பெண் தெய்வங்கள், இரட்டை குவளை முறை, பர்தா முறை என தொடங்கி, பின் வளர்ந்து, இட ஒதுக்கீட்டில் படிப்பவன் திறமையற்றவன், வெளிநாட்டவன் குளிக்க மாட்டான், கறுப்பினத்தவன் முரடன், மாட்டுக்கறி தின்றால் உடல் நாறும், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, மாதவிடாய் ரத்தம் மிருகங்களை வரவழைக்கும் என்பது வரை belittling பல வழிகளில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் பெண்ணை ‘அழகாக இருக்கிறாய்’ என்பதும்.

பெண் அழகு இல்லையா…? நிச்சயமாய் அழகுதான்.

பெரும்பாலான ஜீவராசிகளில் ஆண் ஜீவன்கள்தான் அழகு சூடியிருக்கும். தோகை, தந்தம், பிடரிமயிர் போல். மனித ஜீவராசியில் மட்டும் பெண்தான் அழகு. ஆண் ஜீவராசி அழகு கிடையாது. அதிகபட்சம் போனால், பெண் ஜீவராசியை பார்த்து, வியர்த்து விறுவிறுத்து, உடல் நடுங்கி, நாக்குழறி, தப்பு தப்பாக கவிதை பாடி, காதல் சொல்லும். அவ்வளவுதான் ஆண் ஜீவராசிக்கு சாத்தியம். இது உயிரியல் ரீதியானது. ஆகவே பெண்ணை அழகு என வர்ணிப்பதில் தவறே இல்லை. மனித ஆண், தோகை விரிக்கும் பாணி, அது மட்டும்தான்.

ஆனால் பெண்ணை அழகு என எங்கு சொல்வது என்பது ரொம்பவே முக்கியம்.

முகநூலில் தோழியர் புகைப்படங்களை பதிவிடுகையில் அழகை கொண்டாடலாம். புகைப்படத்துக்கான நோக்கமே அதுதான். புது உடை தரிப்பு, நீண்ட நாள் பிரிவுக்கு பின்னான சந்திப்பு போன்ற நேரங்களில் சொல்லலாம். மோகம் கொள்கையில், காதல் புரிகையில், பார்வையில் தொலைகையில், கண்கள் நிறைகையில் இன்னும் பல தருணங்களில் கூட சொல்லலாம். ஆனால் காவிரி நீரை பற்றி பேசுகையில்?

நிச்சயமாக சொல்லக்கூடாது. அது முழுக்க முழுக்க belittling மட்டுமே. ‘நீ பெண். உனக்கு தேவை அழகு மட்டும். அது உன்னிடம் இருக்கிறது. அதை நான் பார்க்கிறேன். ரசிக்கிறேன். அதை உன்னிடம் தெரிவிக்கிறேன். அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை’ என்பது மட்டும்தான் அந்த ஸ்டேட்மெண்ட்டுக்கான அர்த்தம்.

இந்தியா இந்த வகை belittling-ஐ பெண்களை பொறுத்தவரை பல நூற்றாண்டுகளாகவே செய்து வருகிறது. ஒரு பெண்ணை அவளின் வெளித்தோற்றமாக மட்டுமே எல்லா நேரங்களிலும் பார்ப்பது sick mindset-க்கான அடையாளம். பெண்ணை வெளியே செல்லக்கூட அனுமதிக்காத நிலப்பிரபுத்துவத்திலிருந்து அவளை முழு போகமாக மட்டுமே காட்ட விழையும் கார்ப்பரெட்டுகளின் காலம் வரை பெண் எப்போதுமே belittling செய்யப்பட்டுதான் வருகிறார்கள்.

பெண் கடவுளும் தேவையில்லை. பெண் அடிமையும் தேவையில்லை. நமக்கு தேவை நம் சகாவாக, பெண். அதற்கான காலமும் சமூகமும் உருவாகும்போது மட்டும்தான் பெண் விடுதலை ஆவாள். அங்கு மட்டும்தான் அவள் சக உயிராக மதிக்கப்படுவாள், அழகாக!

ராஜசங்கீதன், ஊடகவியலாளர்; சொக்கட்டான் தேசம் நூலின் ஆசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.