”அம்மாக்களே போராடத் தெருவுக்கு வாருங்கள்!”: குட்டிரேவதி

குட்டிரேவதி

இங்கே எந்த அம்மாவும் தெருவிற்கு வந்து போராடுவதில்லையோ, அழகேசன்களை, யஷ்வந்த்களை வளர்த்து சமூகத்திற்குத் தாரை வார்த்துவிடுகிறார்கள்.  அம்மாக்கள் எல்லோரும் தம் கணவர்களுடன் தான் போராடிக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ.

Three billboards outside ebbing, Missouri என்றொரு படம். இந்த முறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற படம். பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட தன் மகளுக்காகப் போராடும் தாய் பற்றிய படம். உலகெங்கிலும் நடக்கும் சம்பவங்களின் உணர்வுத்தொகுப்பு போல் இருந்தது. தாயின் போராட்டத்தை மடக்கும், எதிர்க்கும், தடுக்கும் தொடர் நிகழ்வுகளையெல்லாம் முறியடித்துக் கொண்டே இருக்கும் ஒரு தாய். அவ்வளவு தான்.

இயக்கப் பண்பாடு இன்னும் நம்மிடம் பற்றியெரியாததற்குக் காரணம், நம் சாதி, மத, வர்க்க எல்லைகள், அவை தரும் போலியான மிடுக்குகள் தாம். நம் முன்னே அற்புதம் என்ற பேரறிவாளனின் தாய் உதாரணத்திற்கு இருந்த போதும், தனக்குக் கிடைத்ததை பகட்டாக்கி வாழும் அபத்தமான, அற்பமான சமூகங்களுக்குள் பெண்கள் இனியும் தம்மைப் புதைத்துக்கொள்ளக் கூடாது.

இந்தச் சமூகத்திற்குக் காதலிக்கத் தெரியவில்லை. ஒருவேளை, காதலைச் சொல்லிக்கொடுக்கும் முன்னுதாரண பெற்றோர்கள் இல்லாமல் இருக்கலாம், காதலின் நயம் சொல்லும் திரைப்படங்கள் இல்லாமல் இருக்கலாம். இன்னொரு பெண்ணையும் மனிதராகச் சுட்டிக்காட்டும் தாய் தந்தை இல்லாதிருப்பது காரணமாக இருக்கலாம். காதல் என்பது சாதியச்சமன்பாடுகள் கற்றுக்கொடுக்கும் ஆதிக்கவெறியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தொடர் வன்கொலைகள் நம்மிடம் தொடர்ந்து வலியுறுத்துவது எல்லாம் இதை ஒட்டுமொத்தமாக நிறுத்த ஏதேனும் செய்யுங்கள் என்பது தான். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயாக இருந்தாலும், கொலை செய்த ஆணின் தாயாக இருந்தாலும் தெருவிற்கு வாருங்கள், தாய்மார்களே! போராடும் ஒற்றைக்குரலாகவேனும் மாறுங்கள்!

குட்டி ரேவதி, எழுத்தாளர். திரைப்பாடலாசிரியர்; இயக்குநர்.

One thought on “”அம்மாக்களே போராடத் தெருவுக்கு வாருங்கள்!”: குட்டிரேவதி

  1. ஒற்றைத் தாயக தெருவுக்கு வாருங்கள் என்ற அறைகூவல் வரவேற்கத்தக்கது. நீதிமன்றம் செல்லுங்கள், கட்சிகளிடம் புகராளியுங்கள் என்று சொலவதுதான வழமையாக உள்ள அரசியல் அரங்கில் இது ஒரு புதுக்குரல். அரசியல்வாதிகள் விரும்பாத குரல். இதுதான் எதிர்காலத்தின் பொதுக்குரலாக மாறவேண்டும். மாறுமா?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.