எழுத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் மதவாதம்’ என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்வொன்றை ஒருங்கிணைக்கிறது ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு. இன்று நடைபெறும் உரையாடல் குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்காக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் சென்று மன்னிப்புக் கேட்டிருப்பதை அறிவீர்கள். ஒரு பத்திரிகை ஆசிரியர், தான் வெளியிட்ட கட்டுரை ஒன்றுக்காக கேட்டிருக்கும் இந்த மன்னிப்பு பத்திரிகை சுதந்திரம், எழுத்து சுதந்திரம், மதச்சார்பின்மை, ஜனநாயகச் செயல்பாடு முதலானவற்றை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. ஒரு பத்திரிகை ஆசிரியர் மதவாதிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து மன்னிப்புக் கேட்கும் அந்தக் காட்சி ஊடக அறத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட பத்திரிகையாளர்களை பதற வைத்திருக்கிறது. தமிழக இதழியல் வரலாற்றில் அது ஒரு தலைகுனிவான தருணம்.

மதவெறியின் பேரில் சமீப காலமாக பத்திரிகையாளர்கள் – அறிவுத் துறையினர் கொல்லப்படுவதையும், அச்சுறுத்தப்படுவதையும் காண்கிறோம்.இதை மக்களும், ஜனநாயக சக்திகளும் ஒன்று பட்டு முறியடிக்க வேண்டியது அவசியமில்லையா?
‘குரல்’ பத்திரிகையாளர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள உரையாடல் நிகழ்வுக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கைக் கொண்டோர் அனைவரையும் அழைக்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக
ஆர்.விஜய்சங்கர், ஆசிரியர், ஃப்ரண்ட்லைன்
கோவி.லெனின், பொறுப்பாசிரியர், நக்கீரன்
அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்
அசீப், மாற்றத்துக்கான ஊடகவியலாளர்கள் மையம்
மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
நாள்: 2018 ஜனவரி 31, புதன் கிழமை
நேரம்: மாலை 5.00 மணி முதல்.
நேரம்: மாலை 5.00 மணி முதல்.
இடம்: சி.ஐ.டி.யு அரங்கம், நம்பர் 11, லாயர் ஜெகந்நாதன் தெரு, கிண்டி, சென்னை – 32
(சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி செல்லும்போது, லீ மெரிடியன் ஹோட்டலுக்கு முன்பு உள்ள பாலாஜி மருத்துவமனையை ஒட்டி உள்ளே செல்லும் தெரு…)