பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பொதுக்கருத்தை இந்தியா உருவாக்கக்கோரி கையெழுத்து இயக்கம்: ஆர். நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்!

சர்வதேச அளவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பொதுக்கருத்தை இந்தியா உருவாக்கக்கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் மூத்த அரசியல் தலைவர் ஆர். நல்லக்கண்ணு.

இஸ்ரேல் அரசுடனான இராணுவ தொடர்புகளை கைவிட வேண்டும்;
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சர்வதேச பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசு முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர். நல்லக்கண்ணு இணையவழி விண்ணப்பத்தை change. org என்ற இணையத்தில் முதல் கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார்.

அவர் தனது கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது :

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பொதுக்கருத்தை உருவாக்குக !

அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றுவது என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவானது எதேச்சதிகாரமானது ; கண்டிக்கத்தக்கது.

இது பன்னாட்டு சட்டங்களுக்கும், ஐக்கிய நாடுகளின் பல தீர்மானங்களுக்கும் எதிரானது. இது அரபுநாடுகளின் அமைதியையும் ,வளர்ச்சியையும் பாதிக்கும்.

ஐக்கிய நாடுகளின் பொதுசபை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை ஆதரிக்கும் அமெரிக்க அரசின் முடிவை நிராகரித்து உள்ளது. அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி 128 உறுப்பு நாடுகள் அமெரிக்காவிற்கும் , இஸ்ரேலுக்கும் எதிராக வாக்களித்து உள்ளனர். இந்தியாவும் அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்து வாக்களித்து உள்ளது.

இந்திய மக்கள் எப்போதுமே பாலஸ்தீன மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது நடத்தும் தொடர்ச்சியான சித்திரவதைகளையும் கைதுகளையும் கொலைகளையும் கண்டித்து வருகின்றனர்.

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி  இந்திய அரசின் சார்பாக உறுதியான நிலையை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஜனநாயக சக்திகள் எழுப்ப வேண்டும் என்று கோருகிறோம்:

இந்த விண்ணப்பத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்பாத்துரை, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நா.பெரியசாமி, ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன், பத்திரிக்கையாளர்கள் இளங்கோவன் ( ப்ரண்ட்லைன்) மு.வி.நந்தினி (த டைம்ஸ் தமிழ்.காம்), இளசை கணேசன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக மாநில செயலாளர் வீ.ராஜமோகன், மனித உரிமை ஆர்வலர் இராதாகிருஷ்ணன் ,சாக்கோ அறக்கட்டளை மாபூபாஷா,பேராசிரியர். அ.மார்க்ஸ், தொழிற்சங்க தலைவர்கள் தி.ம.மூர்த்தி (ஏஐடியுசி), ராஜவேலு(ஹூண்டாய்),நாவலாசிரியர் தமிழ்மகன், தினேஷ்(மாணவர் பெருமன்றம்), ஜி.ஆர். இரவீந்திரநாத் (சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், பாஸ்கர் ( பாட்டாளி படிப்பு வட்டம்) இரகுபதி( வங்கி ஊழியர் சங்கம்), சங்கையா( சிந்தனையாளர் பேரவை ) உள்ளிட்ட பலர் கையெழுத்து இட்டுள்ளனர். கையொப்பம் இட வேண்டிய இணைய தள சுட்டி :

https://www.change.org/p/prime-minister-of-india-mobilise-public-opinion-in-support-of-palestine/w?source_location=notifications_page

வாசகர்கள் தங்கள் இமெயில் அல்லது முகநூல் மூலம் கையொப்பம் இடலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.