கவிதா சொர்ணவல்லி

டிடிவி ஜெயிப்பார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆர்கேநகர் நிலவரங்களை தொடந்து கவனிக்க… வேண்டாம் வேடிக்கை பார்த்திருந்தால் கூட இது தெரிந்திருக்கும். அவருக்கு அங்கு எதிரிகளே இல்லை. அதுதான் உண்மை.
இந்த இடைதேர்தல் என்பது, வென்றேயாக வேண்டியது என்ற கட்டாயம் தினகரனுக்கு மட்டுமே இருந்தது.அவர் அதில் முழு முனைப்புடன் இறங்கினார். அவருக்காக, அவருடைய ஆட்கள் அங்கே உயிரைக் கொடுத்து பணியாற்றினார்கள்.
ஈபிஎஸ்-ஒபிஎஸ் அணி மீது மக்களுக்கிருந்த அதிருப்திகளை வாக்குகளாக்குவதில் கோட்டை விட்டது திமுக. அவ்வளவு ஏன் ? திமுக என்கிற அணி, ஆர்கேநகரில் போட்டியில் இருக்கிறதா ? என்ற அளவுக்குத்தான் அவர்களின் பிரசார லட்சணம் இருந்தது. ஊடகங்களில் ஒரு செய்தி கிடையாது. தொண்டர் புடை சூழ/// இந்த காட்சியே கண்ணில் பட்டது கிடையாது. மருது கணேஷ் பலிஆடாகத்தான் அங்கு களமிறக்கப்பட்டாரோ என்கிற அளவுக்கான பரிதாப சூழல்தான்.
முதலமைச்சராக போட்டியிட்ட ஜெ..வுக்கு எதிராக காண்பித்த, முரட்டுத்தனமான பிரசாரத்தை கூட, மதுசூதனன் என்கிற அரசியலில் இருந்து ஒதுங்கிப்போன ஒருத்தருக்கு எதிராக திமுக காண்பிக்கவில்லை. ஸ்டாலின் அங்கு பிரசாரத்திற்கு போனாரா ? என்றால், மூளையை கசக்கித்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட, தினகரன் என்கிற தனிப்பட்ட மனிதனின் அணுகுமுறை மிக எளிமையானதாக, மக்களை கவரும் விதமாக இருந்தது மறுக்கவே முடியாது. அதிகபட்சமாக, தினகரனை திமுகவே கொண்டாடிக்கொண்டிருந்தது தினகரனும் அதை பயன்படுத்திக்கொண்டார்.
பணம் விளையாடவில்லையா ? என்றால்… பணம் பெரிய அளவில் விளையாண்டது. அதிமுகவும் அள்ளி இறைத்தது. தினகரனும் கொட்டி கொடுத்தார். மக்கள் எல்லோரிடமும் வாங்கிக்கொண்டார்கள். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்கள் முன்னமே தீர்மானித்திருந்தார்கள்.
இந்த தோல்வி என்பது கண்டிப்பாக திமுகவின் தோல்வி மட்டுமே. திமுக தன்னை சீர் செய்துகொள்ளவில்லை என்றால், மீதமிருக்கும் மூன்றரை வருடங்களில், தினகரன் அசாதரணமானவராகி இருப்பார். அடுத்த தேர்தலிலும் முதலமைச்சர் பதவி என்பது ஸ்டாலினுக்கு கானல் நீராகத்தான் ஆகி இருக்கும்.
கவிதா சொர்ணவல்லி, எழுத்தாளர்; அரசியல்-சமூக விமர்சகர்.
திமுக விழித்துக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.
இப்போதைய சூழலில் திமுக தான் மாற்று என்றும் கருதினால் அதனை செய்யவேண்டிய
பொறுப்பும் அனைவரையும் சாரும்.
திமுகவை எதிர்க்கும் பொது ஒன்று கூடும் இந்த/அந்த கூட்டம் ஆதரிக்கும் போதும் ஒன்று கூடவேண்டும்.
இது திமுகவின் தோல்வி “மட்டும்” என்று கூறமுடியாது… ஆளுகின்ற அரசுக்கு மாற்றாக திமுகவை
பரிந்துரைக்கும் அனைவர்க்கும் உண்டான தோல்வி…
LikeLike