அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி “அநீதி வீழும் அறம் வெல்லும்” என்று சொன்னதைப் போல, இன்றைக்கு “அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது” என திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஏழு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி. சைனி தன்னுடைய தீர்ப்பில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 17 பேரை விடுவித்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு. க. ஸ்டாலின்,

“திமுகவைச் சிதைக்கவும், பிளவுபடுத்தவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆதிக்க சக்திகள் கைகோர்த்துக் கொண்டு சூழ்ச்சி வலைகளைப் பின்னுவதுண்டு. ஒவ்வொரு முறையும் சூழ்ச்சி வலையை அறுத்தெறிந்து சுடர்முகம் தூக்கி முன்னேறி வருவதுதான் தலைவர் கலைஞர் தலைமையிலான கழகம். அந்த கைவரிசையில் நமது கட்சியை அவமானப்படுத்தி, அழிக்க வேண்டுமென்று கற்பனையாகக் “கருத்தியல் “( Notional Loss) அடிப்படையில் புனையப்பட்டு, 2009 ஆம் ஆண்டு போடப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வெளியாகி இருப்பது உள்ளபடியே திராவிட இயக்க ஆர்வலர்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வழக்கை பெரிய அளவில் ஊதிப் பெரிதாக்கிச் சித்தரித்து, பொய்க் கணக்குகளை எல்லாம் உண்மை போலக் காட்டி வானத்திற்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்து விளம்பரம் செய்து, கழகத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்கு நமது எதிராளிகள் எல்லாம் எவ்வளவோ முயன்றார்கள்.

ஆனால் நிரூபிக்கத் தேவையான முகாந்திரம் இல்லாததால்,இன்றைக்கு வழக்கிலிருந்து, அனைவருமே குற்றமற்றவர்கள் என டெல்லி தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. எனவே, திமுகவைப் பொறுத்தவரையில் இந்த வழக்கில் களங்கமற்றவர்கள் என்பதைத் தனி நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பின் மூலம் நிலைநாட்டி இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்று. பலமுறை புடம்போட்ட பத்தரைமாற்றுப் பொன் தான் கழகம் என்பது மீண்டும் உறுதியாகி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

One thought on “அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

  1. சபாஷ்! பெரும் காப்ரேட் நிறுவனங்களிடம் நல்லபெயர் வாங்குவதில் வெற்றிபெற்று விட்டீர்கள். நீங்கள் மட்டுமா வென்றீர்கள்? தொலத்தொடர்பு காப்ரேட் நிறுவனங்களும் வெற்றிபெற்றுள்ளன. இல்லை தவறு அவர்கள் வென்றுள்ளார்கள். அவ்வெற்றியின் பலன்கள் வாய்க்கால் வழியோடி உங்களையும் சேர்ந்துள்ளது. மறத்தின் பாரிய வீழ்ச்சியை கொண்டாடும் அளவுக்கு நீங்கள் தரம் தாழ்ந்தவர்கள் (அரசியல் பதர்கள்) என்பது அம்பலமாகியுள்ளது. தொலைத்தொடபு நிறுவனங்களுக்கிடையே கூர்மையடைந்துவரும் கூரிய முரண்பாட்டில் நீங்கள் யாருடன் நிற்கப்போகிறீர்கள் என்ற பிரச்சனை உங்கள் முன்னால் உள்ளது. இதைப் பொறுத்துத்தான் உங்கள் அரசியல் எதிர்காலம் அமையும்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.