“தலித்” எங்கிற சொல்லுக்கு அரசியல் சட்டத்தில் விளக்கம் இல்லை!

பிரபாகரன் அழகர்சாமி

தலித் என்கிற சொல்லையே கேரளா அரசு தடை செய்துவிட்டதாக ஒரு வீண்சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.

உண்மையில் நடந்தது என்ன?

கேரள மாநிலத்தின் மக்கள் தொடர்புத் துறை ஒரு உத்தரவை, தன்னுடைய துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு மட்டும் பிறப்பித்துள்ளது. அதாவது, தலித் என்கிற சொல்லுக்கு பதிலாக “பட்டியல் சாதி” (Scheduled Caste) என்கிற பெயரைதான் பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.

உண்மையிலேயே இது புதிதாக, கேரளா அரசு தானாக எடுத்திருக்கும் முடிவா என்றால், கிடையாது! இது ரொம்ப பழைய செய்தி! அனேகமாக கேரளா இதை தாமதமாக நடைமுறைபடுத்துகிற மாநிலமாக இருக்கலாம் ! தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் இது பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருக்கும் ஒரு விசயம்தான்!

இங்கு அரசு , “தலித்” என்கிற சொல் இழிவானதா? மேன்மையானதா? என்கிற விவாதத்திற்குள் போகவே இல்லை! சட்டப்படி இந்த பெயருக்கு என்ன விளக்கம் என்பதன் அடிப்படையிலேயே இதை அனுகுகிறது!

2008ஆம் ஆண்டே, பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Castes) , தலித் என்கிற சொல்லுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடையாது, எனவே அந்த சொல்லை அரசு ஆவணங்களில் பயன்படுத்தக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

The National Commission for Scheduled Castes has asked the state governments not to use the word ‘Dalit’ in official documents, saying the term was “unconstitutional”. (Times of India – 18th Jan 2008)

2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் கூடி இது குறித்து விவாதித்திருக்கிறார்கள். அதில் எடுக்கப் பட்ட முடிவுதான், தலித் என்கிற சொல்லை அரசு ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது எனபது. அதற்கு அவர்கள் விளக்கமும் கொடுத்திருக்கிறார்கள்.

The full meeting of the Commission concludes that the phrase “Dalits” has “no legal sanctity” and despite the wide currency and political connotation it now has, it is “Scheduled Castes” which must be used officially. It is the Law Ministry’s opinion that “the word Dalit is neither defined under the Constitution nor under any law in force.” The Law Ministry is of the view that as the expression “Scheduled Castes” is defined by Article 336 of the Constitution to denote “castes, races or tribes or parts of or groups within such castes, races or tribes as are deemed under article 341 to be Scheduled Castes for the purposes of this Constitution.”

The Law ministry also takes recourse to the definition of Dalit as listed in the New Oxford English Dictionary and says that as Dalit denotes more than just those presumed to be at the bottom of the caste ladder and “therefore, it is assumed that expression the constitutional order specifying the caste under the Scheduled Caste List is wider and may include all the lowest castes but all the castes specified under the constitutional order may not be termed as Dalit.
(Indian Express – New Delhi – 13th July 2008)

பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிற, கேரள மாநில பட்டியல் சாதியினருக்கான ஆணையம் வழங்கிய வழகாட்டுதலின்படிதான், கேரளாவின் மக்கள் தொடர்புத்துறை, தலித் என்கிற சொல்லுக்கு பதிலாக பட்டியல் சாதி என்கிற பெயரை பயன்படுத்தவேண்டும் என்கிற உத்தரவை பிறபித்துள்ளது.

As per the order, the word Scheduled Caste should be used in its place. The order was issued on the basis of a directive from Kerala State Commission for Scheduled Castes and Scheduled Tribes chairman Justice P.N. Vijayakumar.
(Deccan Chronicle – Thiruvananthapuram – 16th July 2017)

பிரபாகரன் அழகர்சாமி, சமூக-அரசியல் விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.