மாநிலங்களின் உரிமைக் குரல் : பிற மாநிலங்களில் நடப்பதென்ன? – கருத்தரங்கம்.
இன்று (16.09.2017 சனிக்கிழமை) மாலை 5 மணி.
ஆஷா நிவாஸ் சமூக சேவா மையம்,
9 ரூத் லேண்ட் கேட்,
5ஆவது தெரு,
ஆயிரம் விளக்கு,
சென்னை – 600 006.
(அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை – உத்தமர் காந்தி சாலையிலுள்ள தாஜ் கோரமண்டல் விடுதிக்கு எதிப்புறச் சாலையில் சென்றால் இடத்தை அடையலாம்)
தொடர்புக்கு – +919487485266.
அனைவரும் கலந்துகொள்வோம்.
உரிமை மீட்பு போராட்டத்தில் நாகலாந்தில் நடந்த முக்கிய நகர்வு
நாகலாந்து போராட்ட இயக்கங்களுக்கும் இந்திய அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பகிரும் இறையாண்மை (shared sovierinity) அடிப்படையில் நாகலாந்துக்குத் தனிக்கொடி, தனி நாடாளுமன்றம் போன்ற சிறப்புரிமைகள் கொடுக்க இந்திய ஆளும் பா.ச.க. அரசு ஒப்புக் கொண்டிருப்பதாக அரசல் புரசலான செய்திகள் வந்துள்ளன. இது உண்மையா?
இப்போது நாகலாந்தில் உண்மையில் நடப்பதுதான் என்ன என்பதைப் புரிந்து கொள்ள ஒரு கருத்தரங்கம் நடத்தலாம் என புதிய குரல் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதற்கு நாகலாந்து போராட்ட அரசியல் நன்கு தெரிந்த ஒரு நாகலாந்துக்காரரே சென்னையில் பேசினால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கண்டடையப்பட்ட நாகலாந்துகாரர்தான் அன்பர் வபாங் தோஷி (Wapang Toshi). களத்தில் நடப்பதை நேரடியாக வந்து பேசவுள்ளார்.
காலத்தின் தேவையான இந்த கருத்தரங்கிற்கு அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
- இளந்தமிழகம் இயக்கம்.