பிரபாகரன் அழகர்சாமி
- சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தின் அடிப்படையில் சி.பி.எஸ்.ஈ நிறுவனமே இந்த தேர்வை நடத்துவதால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 95% மாணவர்களுக்கு இழப்பு.
-
கடந்த ஆண்டுவரை பொதுப்போட்டியில் கணிசமான எண்ணிக்கையில் இடம்பிடித்துவந்த, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்து மாணவர்களுக்கு பெரும் இழப்பு!
-
லட்சக்கணக்கில் செலவுசெய்து கோச்சிங் வகுப்புகளுக்கு போகமுடியாத அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இழப்பு!
-
நல்ல கோச்சிங் சென்டர்கள் பெரிதும் பெருநகரங்களிலேயே இருப்பதால், சிறு நகரங்களையும், கிராமங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு இழப்பு!
-
கடந்த ஆண்டுவரை மருத்துவக் கல்லூரிகளில் பெரிய அளவில் மாணவிகளே இடம்பிடித்திருந்தனர். ஆனால் இனி, லட்சக்கணக்கில் செலவுசெய்து பெண் பிள்ளைகளை நீட் கோச்சிங் அனுப்ப பெற்றோர்கள் தயங்குகிறார்கள் என்பதால், கணிசமான அளவிலான மாணவிகள் பெற்றுவந்த இடங்கள் பறிபோகும். எனவே பெண் பிள்ளைகளுக்கு இழப்பு!
-
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 140 இடங்களில் வெறும் 5 இடங்கள் மட்டுமே இந்த ஆண்டு நிரப்பப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இழப்பு!
-
நீட் தேர்வினை ஒரு மாணவர் மூன்று முறைகூட முயற்சி செய்யலாம் என்பதால், நடப்பு ஆண்டில் +2 எழுதுகிற மாணவர்களுக்கு இழப்பு.
-
இந்த ஆண்டு தமிழ் வழியில் நீட் தேர்வினை எழுதியவர்களுக்கு, பொதுவான கேள்வித்தாள் இல்லாமல், தனி கேள்வித்தாள் கொடுக்கப்பட்ட சதிச்செயலின் மூலம், தமிழ் மீடியம் மாணவர்களுக்கு இழப்பு.
-
தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளில் கணிசமான அளவு இடம்பிடித்துவந்த முதல் தலைமுறையாக கல்லூரி செல்கின்ற மாணவர்களுக்கு இழப்பு!!
-
போலி இருப்பிடச் சான்றிதழ்களின் மூலம் நூற்றுக்கணக்கான வேற்று மாநில மாணவர்கள் குறுக்குவழியில் திருட்டுத்தனமாக இடம்பிடிக்க முயல்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கே இழப்பு!
பிரபாகரன் அழகர்சாமி, சமூக -அரசியல் விமர்சகர்.