புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது. இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ என பேசினார்.
இந்நிலையில் மரு. கிருஷ்ணசாமி சட்டசபையில் என்ன பேசினார், தன் மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற விடயத்தை சட்டசபையில் சொன்ன அதிமுக எம்.எல்.ஏ. யார் என வெளிபடுத்தியுள்ளார் வீடியோ பதிவர் ஸ்வரா வைத்தி..
கிருஷ்ணசாமி தன்னுடைய மகளுக்கு சீட் வாங்கிய விடயத்தை சொன்னவர் 2014-ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த ஓ. பன்னீர் செல்வம். இந்தச் செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இணைப்பு இங்கே: http://timesofindia.indiatimes.com/city/chennai/Minister-says-state-govt-never-discriminated-on-basis-of-caste/articleshow/38891516.cms