அரசியல் சமூகம் தலித் ஆவணம்

17 வயது தலித் பெண்ணின் மருத்துவ கனவு தூக்கில் தொங்கவிடப்பட்டது…

மத்திய அரசின் அரக்கத்தனம், மாநில அரசின் கையாலாகாத்தனம் - இவை இரண்டும் மட்டுமா அனிதாவின் மரணத்திற்குக் காரணம்? நமக்குப் போதிய சுரணை எப்போது வரப் போகிறது?

பத்திரிகையாளர் அ.குமரேசன்:

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர் அரியலூர் பகுதியைச் சேர்ந்த குழுமூர் கிராமத்தின் மாணவி அனிதா. 12ம் வகுப்புத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண், மருத்துவக் கல்விக்கான மதிப்பெண் 196.75 எடுத்த அவரால் நீட் தேர்வில் 86 மட்டுமே எடுக்க முடிந்தது. இன்று அந்த 17 வயது தலித் பெண்ணோடு அவரது மருத்துவப் படிப்புக் கனவும் தூக்கில் தொங்கிவிட்டது.

இந்தச் செய்தியை யாருக்கு அர்ப்பணம் செய்வது? மத்திய அரசுக்கா, தமிழக அரசுக்கா, நீதிமன்றத்துக்கா?

ஜோஸ் ஆன்டன்:

சமூக சமத்துவத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கட்சி வேறுபாடுகளையெல்லாம் கடந்து, கடந்த ஒரு சில ஆண்டுகளாக அரசியல் தலைவர்களையெல்லாம் சந்தித்து நீட்டுக்கு எதிராக ஆதரவை திரட்டிகொண்டிருந்தார். ஆனால் அவருடைய முயற்சிகளுக்கு போதிய ஆதரவை அரசியல் தலைவர்கள் வழங்கவில்லை. இனியாவது எதிர்கட்சித் தலைவர்கள் வேறுபாடுகளை கட்ந்து ஒன்று திரண்டு நீட்டுக்கு நிரந்தர முடிவுகட்ட முன்வர வேண்டும்.

நாச்சியாள் சுகந்தி:

பூணூல் போட்டவங்க வீட்டுப் பிள்ளைகள் பாதிக்கபப்ட்டிருந்தா இப்படியா இருப்பாங்கா …பதில் சொல்லுவாங்க எல்லாரும்?
அரசு ஒடுக்கப்படட்வர்கள் மீது திட்டமிட்டு நடத்திய கொலை இது. ஏழைகள் என்பதால் தானே இப்படி எகத்தாள பதில் தருகிறார்கள்…

அருள் எழிலன்:

அனிதாவின் உடலை மெரினாவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்க வேண்டும்!

 

பிரதாபன் ஜெயராமன்:

தமிழ்நாட்டில் 1176 மதிப்பெண் எடுத்த குழந்தைக்கே மருத்துவ கல்லூரி இடமில்லை எனில், இனி என் தமிழ் குழந்தைகள் மருத்துவரே ஆக முடியாதா???
தர்மம் வென்றது என சொன்ன ஹெச்.ராஜா எனும் கேடுகெட்ட உயிரினத்தை என்ன செய்வது?
பிறந்த வர்க்கத்துக்கே துரோகம் செய்து, பிழைப்பு நடத்தும் கிருஷ்ணசாமியை என்ன செய்வது?
நல்ல முடிவு வரும் என ஏமாற்றிய நிர்மலா சீதாராமனை என்ன செய்வது?
நயவஞ்சகன் நரேந்திர மோடிக்கு எடுபிடியாகிப்போன பழனிச்சாமி என்ன செய்வது?
நின்று வேடிக்கைத்தான் பார்க்கப்போகிறோமா?
மெரினா கூடல் மாட்டுக்கு மட்டுமா?
நீட்டுக்கு இல்லையா?
நந்தன், ஏகலை, ரோகித் வெமுலா, முத்துகிருஷ்ணன் போல அனிதா!

விஜயானந்த்:

என்னை உதாசினப்படுத்தலாம் நீ
எனது கோரிக்கைகளை நிராகரிக்கலாம் நீ
எனது போராட்டத்தை ஒடுக்கலாம் நீ
என்னை அழிக்கலாம் நீ
இனி நீ
என் பிணத்திற்கு
பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்
என்னை மறைக்க முடியாது
தவிர்க்கவும் முடியாது

 

One comment

  1. எதுவும் செய்யமுடியாதென்று தெட்டத்தெழிவாகத் தெரிந்தபின்னரும் தமது கோழைத்தனத்தின் காரணத்தாலேயோ, கையாலாகத்தனத்தின் கார்ணத்தாலேயோ, சொந்த லாபம்கருதியோ ‘கோயில் மணியை அடித்துக் கொண்டிருக்கும்’ பூசாரிகள் நமக்குத் தேவையில்லை. தனது உயிரையும் உடலையும் அர்ப்பணித்தாவது நிலவுகின்ற தடைகளை உடைக்க முடியுமா என்று சிந்திக்கும் முத்துக்குமார், அனிதா போன்ற போராளிகள்தான் தேங்கிநிற்கும் இச்சமுகத்தின் இன்றைய தேவைகளாகும். தேக்கத்தை உடைக்கவும் முன்சொன்ன “பூசாரிகளை” நிலை குலையப்பண்ணவும் வேறுவழியேதாவது உண்டா. வெளிப்படையாக விவாதிக்கவாருங்கள். முறைப்படுத்தப்பட்ட த்ற்கொலைப்படையொன்றின் அமைவுக்கான ஆரம்ப உரைகளாக அமையும் இப் போராளிகளையும், அவர்களின் வழிமுறைகளையும் போற்றி வங்குவோம். சிறகைப் போல் சாகாமல் மலையைப் போல் சாகத் தயாராவோம்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: