அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் வாசகசாலை இணைந்து “தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்” வாராந்திர தொடர் நிகழ்வை நடத்தி வருகிறது. இன்று திருநங்கைகளை மைய கதாபாத்திரமாக கொண்டு எழுதப்பட்ட மூன்று சிறுகதைகள் குறித்த உரையாடல் நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறுகிறது.
அபிமானியின் ‘வானத்தை நேசிக்கும் நட்சத்திரங்கள்’ குறித்து தாமோதிரன், கி.ராஜநாராயணனின் ‘கோமதி’ குறித்து சதாத், ப.மதியழகனின் ‘அரவான்’ ஆர். ஸ்ரீனிவாஸ் பேசுகின்றனர்.
ஞாயிறு மேடையில் செயல்பாட்டாளர் த.ஜீவலட்சுமி பேசுகிறார்.
