அன்புசெல்வன்

தற்காலத்துக்கு முன்பும் – பின்புமான வரலாற்று மரபுகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் “தலித் மொழிதல்” எல்லா சமூக அரசியல் தளங்களிலும் பெருங்கோரிக்கைகளைச் சுமந்து, பின் தொடர்ந்து வருகிறது. தமிழ்ச்சூழலில் இது குறித்து விவாதிக்கப்பட வேண்டிய பல தருணங்களில் கூட மேலோட்டமான பேச்சுக்கள் சடங்காகவும் எழுவதில்லை. ஏதோ ஒரு வகையில் கவனத்துடன் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட தலித் மொழிதலின் பெருங்கோரிக்கைகள் ஆதிகால உள்ளூர் அளவில் பண்டிதர் அயோத்திதாசரையும், நவீன கால தேசிய அளவில் புரட்சியாளர் அம்பேத்கரையும் வடுபாகமாகக் கொண்டு தவிர்க்க முடியாத உரையாடலைத் தொடங்கி விட்டது.
சமகால தலித் விடுதலைக்கான கருத்தியலில் அது “தமிழ் – தலித் – திராவிடன் – கம்யூனிசம் – பௌத்தம்” போன்ற கருதுகோளை மறுநிர்மானிக்கும் உரையாடலாக நீட்சி பெற்று வருவது கண்கூடு. கருத்தாலும், காலத்தாலும் குறுக்கிட முடியாத தலித் மொழிதலின் இத்தகைய பெருங்கோரிக்கைகள் தொடரும் என்பதற்காகவே “அயோத்திதாசரின் மொழி”எனும் இக்கட்டுரைத் தொகுப்பு.
விடுதலைச் சிறுத்தைகளின் கரிசல் பதிப்பகம் வெளியீடு !