தயாளன்
உதயகீதம் படத்திலன்னு நினைக்கிறேன். கவுண்டமணி செந்தில்கிட்ட கேப்பார். என்ன பண்னிட்டு ஜெயிலுக்கு வந்தன்னு கேப்பார். செந்தில் எட்டணா நாணயம் அடிச்சேன்னு சொல்வார். பளார்னு ஒன்னு விடுவார் கவுண்டமணி. கள்ள நோட்டு அடிக்கனும் முடிவு பண்ணிட்டு ஏண்டா எட்டணா அடிச்சே, ஐம்பது நூறுன்னு அடிக்கவேண்டியதுதான அப்படின்னு சொல்லிட்டு கோயம்புத்தூர் ஊர் பேரையே கெடுத்துட்டியேன்னு இன்னொரு பளார் விடுவார். அத மாதிரி மார்க் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. 1000, 2000ன்னு கொடுத்திற வேண்டியதுதானே சார். எதுக்கு சார் 50, 48 எல்லாம்…
தயாளன், ஊடகவியலாளர்.