மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த, தமிழக தொழிலாளி முருகனின் குடும்பத்தாரை, முதல்வர் பிணராயி விஜயன் இன்று சந்தித்தார்.முருகன் குடும்பத்தாருக்கு அவசியமான உதவிகளை அரசு வழங்கும் எனவும், அவர்களின் இழப்பிலும் துயரத்திலும் கேரள மக்கள் பங்குகொள்வதை தெரிவித்தார்.
முன்னதாக, மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் உறவினர்களிடம் கேரள மக்களின் சார்பாக முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சையளிக்க தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.