வெக்கமற்ற அரசியல் ஆட்டம்!

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

1

வெக்கமற்ற அரசியல் ஆட்டம்

அண்மைக்கால தமிழக அரசியல் நிகழ்வுகள், கேலிச் சித்திரமாக மக்கள் முன்னே தோன்றியுள்ளது. ஜெ மறைவிற்கு பின்பாக தமிழக அரசியல் அதிகார மையத்தை கைப்பற்றுவது என்ற அச்சை சுற்றி நடைபெறுகிற இந்த சம்பவத் தொகுப்புக்கள்,சின்னத்திரை நாடகங்களையும் பெரியத்திரை சினிமாக்களையும் சில நேரத்தில் பின்னுக்கு தள்ளுகிறது.அம்மாவிற்கு பின்னான அரசியல் அதிகார கைப்பற்றல் நாடகத்தில், சின்னம்மா, ஒ பி எஸ், ஈ பி எஸ், டி டி வி, ஸ்டாலின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், மோடி அமித் சாக்கள் மறைமுக கதாபாத்திரங்களிலும் திறம்படவே நடித்தி வருகின்றனர். இடையே நீதிமன்ற தீர்ப்பு, சிறை, சபதம், தியானம், சிறை மீண்டல், தீர்மானம், பொதுக்கூட்டம் என திரைக்கதையில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

தனது சொந்த வரலாற்றை உருவாக்குவதற்காக சின்னம்மாவும் ,ஒ பி எஸ்சும்,ஈ பி எஸ்சும்,டி டி வியும்,ஸ்டாலினுன் யதார்த்த சூழலுடன் மல்லுக்கு நிற்கின்றனர். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான உணர்ச்சிகரமான வேகத்தில் உள்ளவர்கள், இறுதித் தீர்ப்பிற்காக முன்பு ஆளுநர் மாளிகையில்,பின்பு தேர்தல் ஆணையதில், நீதிமன்றத்தில், பிரதமர் அலுவலகத்தில் கோவில் பூசாரியின் அருள்வாக்கிற்கு காத்து நிற்கிற பக்தர்கள் போல நிற்கிறார்கள்.

அதிகாரத்திற்கான இந்த போட்டியில்; வெற்றியடைவதற்காக நடத்துகிற சாதிய, பணபல அரசியல் சதுரங்க காய் நகர்த்தலால் இவர்கள் யாவரும் தங்களது எதிராளியை மட்டும் வீழ்த்துவதில்லை. பதவி அதிகாரத்திற்கான தங்களின் இழிவான செயல்களின் வழி நடைமுறையில் உள்ள முதலாளித்துவ ஜனநாயகத்தையும் அதன் உண்மை நடத்தைகளையும், தங்களுக்கு அறியாமலேயே துகில் உரிக்கிறார்கள். நாடகத் தன்மை வாய்ந்த காட்சிகளில், உண்மையற்ற வெற்றுரைகளில் உணர்ச்சியற்ற நாடகங்களில் முதலாளித்துவ ஜனநாயக முகமுடிகள் கழண்டு விழுகின்றன.

நிகழ்கால அதிகார மையத்திற்கான இப்போட்டியில், கடந்த கால அதிகார மையங்களின் கல்லறை ஆன்மாக்கள் துணைக்கழைக்கப்படுகிறது. எம் ஜி ஆரும், ஜெயலலிதாவும், ஒட்டு வங்கி அரசியலுக்காக பேனர்களிலும் ஒளி விளக்குகளிலும் உயிர் கொடுக்கப்படுகிறார்கள். முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஒட்டு வங்கி அரசியலுக்காக செத்துப்போனவர்களின் ஆவிகளையும் பெயர்களையும்முழக்கங்களையும் கடந்த காலத்தில் இருந்து கடன் பெறப்படுகிறது. புரட்சித் தலைவி அம்மா, டாக்டர் இதய தெய்வம் எம் ஜி ஆர், அம்மாவின் ஆணைக்கினைங்க என்ற சொற்களின் வழி, செத்துப்போனவர்களின் அனுமதியுடன் ஆட்சியில் அமர்ந்துகொண்டு மக்கள் சொத்தை சூறையாடி வருகின்றனர். டாஸ்மாக்கை திறக்கிறார்கள், டெண்டர்களில் கொள்ளை அடிக்கின்றார்கள், இயற்கை வளத்தை கொள்ளை அடிக்கிறார்கள், பதவிக்காக மத்திய அரசின் அடிமையாக வெக்கமின்றி வலம்வருகிறார்கள்.

பத்திரிக்கையாளர் சந்திப்புகளில், கூட்டங்களில் உணர்ச்சிகள் அற்ற உண்மைகளையும் உண்மைகள் அற்ற உணர்ச்சிகளையும் மிகத் தீவிரமாக பரிமாறிக் கொள்கின்றனர். சின்னம்மா, டி டி வி பின்னால் நின்ற ஒ பி எஸ்சும்,ஈ பி எஸ்சும் அதிகார பேரத்திற்காக தங்களுக்கு இடையே சண்டையிட்டுக் கொள்கின்றனர். பேரம் படிவது போல தெரிவதால் ஈ பி எஸ் ஆட்சிக்கு எதிரான கண்டனக் கூட்டத்தை ஓபிஎஸ் தள்ளிவைத்துள்ளார். அப்பல்லோவில் நாட்கணக்கில் இருந்தவர், அம்மாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என பேரத்திற்காக அடம் பிடிக்கிறார். ஒரு கிணற்றை ஊருக்கு கொடுக்க வக்கற்றவர் “நீதி” வேண்டி தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். அநேகமாக ஒரு அமைச்சர் பதவியோ கட்சிப் பதவியோ இந்த தர்ம யுத்தத்தை முடித்து வைக்கும் என நினைக்கிறன்!

துணைப் பொதுச் செயலாளர் நியமனத்தின்போதும், முதல்வராக பதவி ஏற்கும் போதும் டிடிவியிடமும் சின்னம்மாவிடமும் பவ்யம் காட்டியவர், ஆர் கே நகர்த்த தேர்தலின் போது “கவாஸ்கர்” தோப்பி போட்டு டி.டி.விக்கு வாக்கு சேகரித்தவர், லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சிக்க வைக்கப்பட்டு சிறை சென்று மீள்வதற்குள் தனி அணியை உருவாக்குகிறார். சிறை மீண்டவரோ, காட்சியும் கோலமும் மாறியது கண்டு கொதிப்படைந்த தூது விட, இறுதியில் ஒருவக்கொருவர் மாறி மாறி 420 பட்டங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். பெங்களூரு சிறை தொட்டு திருவண்ணாமலை மூக்குப்போடு சித்தர் வரையிலும் கட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை கட்டுப்படுத்தவும் ஆசி அருள் கோரி அலைகிறார் டி டி வி. அரசியல் அதிகார போட்டியில் வெக்கம் கூச்சத்திற்கு இடமில்லை என அமைதிப்படை அமாவாசையின் நிஜ பாத்திரமாக டிடிவி அலைந்து திரிகிறார்.

டிடிவின் அருளால் நகரப் பொறுப்பு முதல் அமைச்சர் பொறுப்பு வரை கிடைக்கும் என்ற பதவி அதிகார ஆசையில் டிடிவின் பொதுக் கூடத்திற்கு ஆட்களை கூட்டுவதற்கு கோடிக் கணக்கில் முதலீடு போடப்படுக்கிறது. இந்த முதலீடுகள் அனைத்தும் வீண் போகாது, இவை யாவையும் வட்டியும் முதலுமாக ஒரு டெண்டரில் எடுத்து விடலாம் என உடன் பிறப்புக்கள் டிடிவின் பேச்சுக்கு விசில் அடித்து மலர் தூவுகின்றனர்.

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ ஜனநாயகமானது; தனி நபர்களின் சாமர்த்தியமான அசட்டுத் தனங்களாலும், தான்தோன்றித்தன நடத்தைகளாலும் தனது சொந்த முரண் இயல்புகளால் அழிக்கப்பட்டுவருகிறது. மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு வருகிறது!

2

“பொது மக்கள்” ஆட்டத்தின் பார்வையாளர்களா? ஆட்டத்தை மாற்றியமைக்கப் போகிறவர்களா?

மக்கள் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்துகிற இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் யாவும் பிரேக்கின் செய்திகளாக,நேர்பட பேசுவாக, காலத்தில் குரலாக உடனுக்குடன் சுடச் சுட விவாதத்திற்கு வருகின்றன. பரபரப்பு உச்சமடைந்து தணிகிற வரையில் பிரேக்கின் செய்திகளுக்கும் விவாதங்களுக்கும் பஞ்சமில்லை. சில நாட்களுக்கு மக்கள் பிக் பாஸிடம் இருந்து சற்றே விடுபெற்று தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்கின்றனர்.

சட்டமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த இம்மக்கள், கோட்டை சர்வாதிகார ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளில் ஏதேனும் அதிசயம் நிகழாதா என பரப்படைகின்றனர்.ஏதும் நடைபெறாததால் பின்பு சலிப்படைகின்றனர்.அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகிற கும்பலோ உலகைக் காப்பதாக கூறிக் கிளம்பி தனது சொந்த நலனுக்காக அற்ப சூழ்ச்சிகளில் அனுதினமும் ஆழ்ந்துள்ளது. மக்கள் நலனுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தனிநபர் அதிகார பேர சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருள்கின்றனர்.பிரதிநிதிகள்தானா பகடைக்காய்கள்தானா என சட்டமன்றத்திற்கு அனுப்பிய மக்களோ செய்வதறியா பார்வையாளர்களாக சில நேரத்தில் உணருகின்றனர்!

அரை நூற்றாண்டு அரசியல் சாசனமும், சட்டமன்றமும், புனிதக் குடியரசு ஜனநாயகமும், உரிமைக்கான மக்கள் போராட்டங்களும் அரை நாளில்,மந்திர உலகில் திடுமென காணாமல் போய்விட்டதபோன்றதொரு அரசியல் பிரம்மை பூதங்கள் மக்களை அச்சுறுத்துகிறது. மாயவித்தை சம்பங்களாக நிஜ உலகில் கண்முன்னே நிகழ்ந்துவருகிற இம்முரண்பாடுகளை, மோசடிக் கட்சிகளும் மோசடிக்காரர்களும் போட்டு போட்டுக்கொண்டு எவ்வாறு சூழ்ச்சிகளின் ஊடாகவே அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்!!

சட்டமன்ற பிரதிநிதிகளை வாக்கெடுப்பின் மூலமாக தேர்தெடுத்த மக்களோ, அலுப்பூட்டுகிற இந்த பரபரப்புகளால் சலிப்படைகிறார்கள். சட்டமன்ற பிரதிநிதிகளோ மக்கள் மனங்களில் உடல்களற்ற நிழல்களாக,உண்மையற்ற உருவங்களாக வந்து போகின்றனர். நாம் எவ்வாறு ஓட்டுபோட்டு பின், மோசடிகாரர்களின் இந்த புனித குடியரசு ஆட்சிமுறையில் இருந்து விளக்கி வைப்பட்டுள்ளோம் என சமகால நிலைமைகளில் பொறுத்தி புரிந்துகொள்ளவேண்டும்!!

பாட்டாளி வர்க்கத்தின் மீதான துரோகத்தின் மேல் எழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசு, அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற வடிவங்கள் இன்று அதற்கெதிராக திரும்பியுள்ளது.

சட்டமன்ற ஆட்சி முறைகள், தேர்தல் அரசியல் முறைகள் கோல்டன் பே ரிசார்ட்டில், பெங்களூர் ரிசார்ட்டில் அடமானம் வைக்கப்பட்டது.ஆளுநர் மாளிகையும், போயஸ் கார்டனும், கிரீம்ஸ் ரோடுகளும்,தலைமை கழகமும் அரசியல் சதிகளால் நிரம்பி வழிகிறது. அதன் நாற்றத்தை மக்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை!

தற்போது,முதலாளித்துவ நாடாளுமன்ற வடிவங்கள், சட்டமன்ற வடிவங்களின் அறுபதாண்டுகால தேன்நிலவு கட்டம் நிறைவை எட்டுகிற நிலைக்கு வருகிறது.உத்தராகண்டில், அருணாச்சல பிரதேசத்தில், குஜராத்தில், தமிழ்நாட்டில் பதவி அதிகாரத்திற்கான முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் அருவருப்பான அரசியல் சதுரங்க ஆட்டத்தை மக்கள் யதார்த்த உண்மையில் கண்டுகொண்டார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அகழிகளுக்குள்ளே கமுக்கமாக மக்கள் அறியா வண்ணம் அரங்கேற்றப்பட்ட அரண்மனை சதிகள்,தற்போதைய நவீன முதலாளித்துவ குடியரசு கட்டத்தில் வெட்ட வெளிச்சமாக காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.வாக்கு உரிமையால் மட்டுமே முதலாளித்துவ ஜனநாயகத்தை மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆளும் வர்க்கத்திற்குள்ளாக நடைபெறுகிற அதிகாரத்திற்காக இப்போட்டியை உழைக்கும் மக்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பதில்லை.வருங்கால மக்கள் குடியரசு ஜனநாயகத்திற்கான புரட்சிகர சேமிப்பு சக்திகளாக மக்களின் மனங்களிலே இம்முரண்பாடுகள் பதியப்படுகிறது!

அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

4 thoughts on “வெக்கமற்ற அரசியல் ஆட்டம்!

  1. அருமை. திரு.அருன் நெடுஞ்செழியன் அவர்கள் சில்லறைப் பயல் சீமானை பற்றியும் இப்படி தீப்பொறி பறக்க எழுதினால் மகிழ்ச்சி.

    Like

  2. அருமை. திரு.அருன் நெடுஞ்செழியன் அவர்கள் சில்லறைப் பயல் சீமானை பற்றியும் இப்படி தீப்பொறி பறக்க எழுதினால் மகிழ்ச்சி

    Like

  3. // புரட்சித் தலைவி அம்மா, டாக்டர் இதய தெய்வம் எம் ஜி ஆர், அம்மாவின் ஆணைக்கினைங்க என்ற சொற்களின் வழி, செத்துப்போனவர்களின் அனுமதியுடன் ஆட்சியில் அமர்ந்துகொண்டு மக்கள் சொத்தை சூறையாடி வருகின்றனர். டாஸ்மாக்கை திறக்கிறார்கள், டெண்டர்களில் கொள்ளை அடிக்கின்றார்கள், இயற்கை வளத்தை கொள்ளை அடிக்கிறார்கள், பதவிக்காக மத்திய அரசின் அடிமையாக வெக்கமின்றி வலம்வருகிறார்கள். //
    ——————

    மேல்ஜாதி ஆளும்வர்க்கத்தின் வப்பாட்டியாக அவர்களுக்கு உருவிவிட்டு ஒரு பாப்பார தேவ்டியாள் ஆட்சியை பிடித்தாள். “அவனுகளுக்கு முந்தானை விரித்து உங்களுக்கு நான் கஞ்சி ஊத்தறேன்… விழுங்கடா எனது காலில்” என அவள் ஒரு அதட்டல் போட்டதும், மானம், மரியாதை, சூடு, சொரண கெட்ட தமிழன் அவளுடைய காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். இன்று அந்த தேவ்டியாள் செத்ததும், இந்த அயோக்கியனுக அத்துனை பேரும் தேவ்டியான்களாக மாறி மோடிக்கு வேட்டியை விரிக்கின்றனர். த்தூ… மானங்கெட்ட நாய்கள்…

    தந்தை பெரியார் சொன்ன திராவிட நாட்டை நாம் அன்று பாக்கிஸ்தானோடு சேர்ந்து உருவாக்கியிருந்தால், இந்நேரம் நமது திராவிட நாட்டில் “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல்”, பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்.

    “ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ”

    Like

  4. அருண் தோழர் கட்டுரை அருமை. தமிழக அரசியல் சதுரங்கத்தில் சூழ்ச்சியும் நாடகமும் அரங்கேற்றத்தின் நோக்கத்தை தத்ரூபமாக கலைநய, நையாண்டி வடிவத்தில் அம்பலப்படுத்தியுள்ளீர்கள். சீரழியும் ஜனநாயகம் குறித்து விளாசி, அதிகாரம் ஆட்டம் காண்கிறது… ஓட்டரசியல் ஆதிக்கம் ஆளும் வர்க்கமும்
    மக்களிடம் வெட்கி தலை குனிந்துள்ளது என்பதை வலுவாக முன்வைத்துள்ளீர்.
    அருமை..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.