‘அந்தக்காலத்துலயே திராவிடம் பாருங்க!’: நொய்யல் ஆற்றங்கரையில் ஒரு வரலாற்றுப் பயணம்

பிரவீன் குமார்

பிரவீன் குமார்

இந்த ஆடி பதினெட்டு விடுமுறையில்லாத அலுவல் நாள். காலை வழமைபோல ஏழரைக்கு திருப்பூர் வளம் பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது, தூரத்தில் பார்வைக்கு ஒரு பூணூல் முதுகும், இரண்டு வெற்று மேலுடம்பு ஆட்களும் தெரிந்தனர். கிட்டே வந்து பார்த்தபோது, அவர்கள் திவசம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. எள்ளுத்தண்ணீரை ஆற்றில் கரைத்து மரியாதை செய்து விட்டு, கையை மேலே கூப்பி கும்பிட்டுக் கரையேறியதும் நான் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். எந்த ஆற்றில் நீத்தார் கடன் செய்தார்கள்? ஒரு நாள் கரும்பச்சை நிறத்திலும், மறுநாள் கருஞ்சிவப்பும் கருநீலமும் சாக்கடைக்கருப்பும் கலந்தும், இப்படி தினம்தினம் புதுநிறங்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும், கெமிக்கல்களின் குடல்குமட்டும் நாற்றமும் நிறைந்த நொய்யலாறு. சாயப்பட்டறைகளின் தொழில்வீச்சைப் பொறுத்து கணுக்கால் அளவில் இருந்து இடுப்புயரம் வரை கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும், வலசை வந்த கொக்குக்கூட்டத்தைப் போன்ற பாலிதின் பைகளின் தீவுகள் சூழ்ந்த நொய்யலாறு. “இடுதுளை” என்ற வார்த்தையை அப்போது யோசித்தேன். வெகு சமீபத்தில் கற்றுக்கொண்ட வார்த்தை. நாள்முழுதும் அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்தேன்.

மந்தமான, ஆனால் இறுக்கமான ஒரு பகற்போதில் ஒரத்துப்பாளையம் அணைக்கட்டிற்கு சென்றிருந்தோம். ஏற்கனவே அரசாணமலை என்ற சிறு செக்குத்தான குன்றின் மேலே ஏறி இறங்கியிருந்ததால் சோர்வுற்று நிறைய தாகம் எடுத்துக்கொண்டேயிருந்தது. அபிமான லெமன் சோடா கிடைக்காமல் போகவே நிறைய தண்ணீர் அருந்த வேண்டியிருந்தது. அணைக்கட்டு என்னை விட ஒரு வயது மூத்தது. சிதிலமாகிக்கிடந்த முகப்பைத் தாண்டி அணை மேல் ஏறினோம். அங்கே ஒருத்தர் மதகின் முன் மெல்லிய நூலொன்றை நீருக்குள் போட்டு நின்றிருந்தார். அந்த நுனியைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த்து அவர் தியானித்துக் கொண்டிருப்பதாக எண்ண வைத்தது. “இந்த மீன்கள் விஷமில்லையா? உடம்புக்கு ஒன்னும் ஆகாதா?” என்று கேட்டேன். “நான் ரொம்ப நாளாக இங்கே மீன் பிடித்துக் கொண்டிருக்கிறேன். அதை விற்றுக்கொண்டுமிருக்கிறேன். எதுவும் ஆனது மாதிரி தெரியலையே” என்றார். படியேறும் போது பார்த்தேன். ஒரு பெரிய்ய்ய மணி விரல் மீன், நுரைத்த நீருக்குள்ளிருந்து, வெயிலில் சிறு மின்னல்கீற்றைப் போல துள்ளிக்குதித்து அணை மதகுச்சுவற்றில் சொத்த்தென்று மோதி விழுந்தது. மேலே ஏறிப் போனதும் திருப்பூரின் பிரம்மாண்டமான பாவக்கிடங்கை 360 கோணங்களிலும் பார்த்தோம். எத்தனை அற்புதமான நம்பிக்கை, வாழ்க்கை செத்துப் போன காட்சி. தெரிவதெல்லாம் பச்சை தானென்றாலும், அவை வெறும் நீருஞ்சும் முட்செடிகள். கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும் சுற்றுச்சுவரும், அந்த முள்ளுச்செடிகளும், ஆங்காங்கே கெட்ட நாற்றமிடித்துக்கொண்டு தேங்கிக்கிடந்த நுரைத்த தண்ணிருமாய் இருந்தது காட்சி.ஆங்காங்கே மாடுகளும், ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்க்க மனம் பதறியது. மங்கலத்தில் இருந்து கொடுமணல் வரையிருக்கும் 50+ கிமி தூரத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளிலிருந்து வற்றாமல் ஊறிக் கொண்டேயிருக்கும் சாயக்கழிவுகள் வந்து அணை மண்ணை காயவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. அணைக்கு எதிரே பெரிய பெரிய நிலப்பரப்பில் தென்னைத்தோப்புகளும், அந்த நீரை அருந்தியபடி ஆநிரைகளும், தரைப்பாலமும் இருக்கும் காட்சி.
வரலாறு நமக்கு சில கடமைகளை தந்திருக்கிறது. நாம் நமது கடப்பாடுகளுக்கு பாத்தியப்பட்டவர் ஆகிறோம். எந்த கணத்திலும் அதை விட்டு விலகிவிடாமல் செய்து முடித்திடவேண்டிய பொறுப்புணர்வு நமக்கிருக்கிறது. ஆகையால் எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் ரெண்டு ஃபோட்டோவும், நாலு செல்ஃபியும் எடுத்துக் கொண்டு கீழிறங்கினோம். அப்போது எனக்கு எழுத்தாளர் சோமனூர் செல்லப்பனின் கதை ஞாபகம் வந்தது.

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும், வாசகர் வட்டம் நடத்தும் வாராந்திர கூட்டமொன்றில் கதை வாசிப்புப் பகுதியில் தோழர் செல்லப்பன், தன்னுடைய கதையை வாசித்துக்காட்டினார். ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு மிக அபாயகரமானதாக ஆகி இழுத்துமூடப்பட்ட காலங்களில், தோழர் அங்கே களப்பணிக்காக சென்றிருக்கிறார். சென்ற இடத்தில் தான் திருப்பூரிலிருந்து வருவதாக சொல்லி மிகவும் ஏச்சுப்பேச்சுக்களும், தூசனைக்கும் உள்ளாக்கப்பட்டதாகவும், குடி தண்ணீர் கூட விருந்தோம்ப மறுக்கப்பட்டதாகவும், அடுத்தடுத்த நாட்களில், வேறொரு ஊர் பெயர் சொல்லி தண்ணீர் வாங்கி குடித்த கதையை எல்லாம் வருத்தத்தோடு சொல்லிவிட்டு தன் கதையை வாசித்துக் காட்டினார். கூட்டம் முடிந்ததும் ஓடிச்சென்று இந்த புத்தகம் எனக்கொன்னு தருவீங்களா தோழர் என்று கேட்டேன். தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு மிகுந்த வாஞ்சையோடு அதே புத்தகத்தை எனக்கு அன்பளித்தார். அந்த புத்தகம் இப்போது அச்சிலிருக்க வாய்ப்பில்லை. (பிரம்ம ரகசியம்.) (அந்தக் கதையின் பெயர் “தண்ணி தண்ணி”.) இந்தக் கதையை யோசித்துக் கொண்டே வந்தும், பக்கத்து ஊரான கொடுமணலில் வெகுளித்தனமாக திருப்பூர்க்காரங்க என்று அறிமுகப்படுத்திக்கொண்டோம். தண்ணிரும் கிடைத்தது.

“தண்ணி தண்ணி” கதை ஒரத்துப்பாளையம் அணை கட்டத்துவங்கிய காலத்தைப் பற்றிய பதிவு. ஊர்மக்கள் தயங்கிய போது, அணை கட்டப்படுவதன் தேவையை, நல் அம்சங்களை எடுத்துச் சொல்லி ஆதரவளித்து, சம்மதிக்க வைத்தவர். பிறகந்த அணையால் தன் தோப்பு துரவு, மரியாதையிழந்து, வருமானமிழந்து எளியவாழ்க்கை வாழத் தள்ளப்பட்டவர். அந்த முதியவரின் கதை.”தாயைப் பழித்தாலும் தண்ணியப் பழிக்கக் கூடாது” என்று பழமை சொல்லிக்கொள்வார்.

ஒரத்துப்பாளையத்திலிருந்து அடுத்து கொடுமணல் சென்றோம். 2000+ ஆண்டுகள் முந்தி நொய்யலாற்றங்கரையில் வாழ்ந்த நாகரீகத்தின் எச்சங்கள் கிடைத்துக்கொண்டிருக்கக் கூடிய இடம். ஒரு இண்டஸ்ட்ரியல் டவுன் என்ற வகையிலே திருப்பூருக்கு தாத்தா. திருப்பூர் வழியாக ஒரத்துப்பாளையத்தில் வந்து நிறையும் நொய்யலில்லை இந்நொய்யல். இது புராதனமான காஞ்சிமாநதி. நொய்யலென்றாலென்ன காஞ்சிமாநதியென்றால் என்ன வெறும் மணல் தான் இருக்கிறது. ஊருக்குள் நுழைந்துமே முதலில் ஒரு பெரிய கூர்மையான முக்கோணக்கல்லும், அதனடியில் அதனடியில் பாறைகற்சுவர்களால் உருவாக்கப்பட்ட சிற்றறைகளும் இருக்கின்றன. என்னவென்றே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஊருக்குள் வந்தோம். வீடு வந்தபிறகு கொடுமணல் பற்றி இணையத்தில் வாசிக்கும் போது தான் இந்த “இடுதுளை” என்ற வார்த்தையை அறிந்தேன். இந்த கற்சுவற்றுக்குள் பிணங்களை போட்டு வைத்து வருடாவருடம் இடுதுளை வழியாக தர்ப்பணங்கள் மரியாதை செய்வார்களாம். அந்தக்காலத்து மனிதர்கள் மிகவும் குள்ளமாக அளவில் சிறியவர்களாக இருந்தார்களாம். எலும்புக்கூடுகள் சிறியனவாகத்தான் கிடைத்திருக்கின்றனவாம். துளை வெளியே அர்ப்பணங்கள் படையலிட வேண்டுமென்றால், நிச்சயம் அந்த பிணங்களை பதப்படுத்தி, துர்நாற்றம் வராமல் பக்குவம் செய்திருக்கவும் ஒரு வழமை இருந்திருக்கக் கூடும். நீத்தார் கடன் என்ற சடங்கிற்கு எத்தனையாயிரம் வருடபாரம்பரியம் கொண்டிருக்கிறோம். ஒரு பக்கம் கழிவுகளைக் கொட்டி மாசுப்படுத்தியதும் நாம் தான். மறுபக்கம், அதே சாக்கடைத் தண்ணீரில் புனிதம் கண்டு அர்ப்பணம் செய்து வணங்குவதும் நாம் தான். திரும்பத் திரும்ப அன்னை மடி தேடி ஓடும் பிள்ளைகள் நாம்.

இந்த எலும்புக்கூடு சங்கதியையும், ஈமக்கிரியை பற்றியும், இன்னும் பல செய்திகளையும் அடுத்தக்காட்சியில் வரும் தம்பி எங்களுக்குச் சொல்லப்போகிறார்.
இணையத்தில் பிராமி காலத்து தமிழ்மொழியின் லிபியில் “தமிளன் சிரப்பு வாள்க”,”காடு வித்து கஞ்சி காச்சி குடிப்பாளூம்” என்றெல்லாம் புளங்காகிதம் அடைந்து எழுதியிருந்த பல இணைப்புகளுல் ஒரு நல்ல pdf புத்தகத்தைப்பிடித்துப் படித்தேன். தமிழ்நாட்டு தொல்லியல் துறை வெளியிட்ட புத்தகம். – “கொடுமணல் அகழாய்வு” அந்தப்புத்தகத்தில் கண்டது தான் இடுதுளை என்ற வார்த்தை.

ஊருக்குள் தென்னைத்தோப்புகளும், நெருக்கமில்லாமல் அங்காங்கே இருக்கக்கூடிய வீடுகளும், வெறுமையான ரோடுகளுமே இருந்தன. இந்த தொல் எச்சங்கள் எங்கே எப்படி எந்த வடிவில் இருக்குமென்று கூட தெரியாமல் கிளம்பி சென்றுவிட்டோம். ஊரே வெறுமையாக இருப்பதைப் பார்த்து கடுப்பாகி திரும்பி விடலாமென்று வண்டியைத் திருப்பிய போது தான் அந்த தம்பியை பார்த்தோம். தென்னந்தோப்பு வைத்திருக்கும் உள்ளூர் காரர். தண்ணீர் வாங்கிக்குடிக்க நிப்பாட்டிய இடத்தில் எங்களுக்குக் கிடைத்த வழிகாட்டி துருவ நட்சத்திரம். கொஞ்சம் உப்பான தண்ணீர் தான் என்றாலும் வெக்கை தீர நிறைய நீர் அருந்தினேன். அவரது தோப்பில் அகழாய்வு நடந்திருக்கிறது. இந்த மாதிரி சுற்றிப்பார்க்க வருபவர்களை நிறைய கண்டிருப்பார் என்பது அவரது உடல் மொழி, விசாரிப்புகளிலேயே புரிந்துகொள்ள முடிந்தது. இதற்கெல்லாம் ரொம்ப பழக்கப்பட்டவராகவும், comfortable ஆகவும் இருந்தார். கல்லூரி மாணவர். நிறைய தகவல்களை செவிவழியாக தெரிந்து வைத்திருந்தார். இங்கே வருடாவருடம் அகழாய்வுக்கு வருவார்கள். பெட்டி பெட்டியாக அகழ்ந்தெடுந்த பொருட்களை கொண்டுபோகும் போது சில பொருட்கள் கழித்துவிடுவராம். அவற்றை இவர் சேமிப்பில் வைத்திருந்து எடுத்துக்காட்டினார்.

நாங்கள் வரும்வழியில் கண்ட கற்குவியல்கள் எல்லாம் 2000 2500 வருடங்கள் முந்தைய கல்லறை தொகுப்புகள் என்று அவர்சொன்ன போது தான் வாணலி சூடாவது போல எங்களுக்குள் ஒரு தீவிரம் வந்தது. நாங்கள் எப்படிப்பட்ட இடத்தின் மேல் நின்றுகொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. சரி கூட்டிட்டுபோய் காட்டுங்க தல என்று சொல்லி நடக்கத் துவங்கினோம். காலில் அடிக்கடி இரும்பைப்போன்ற கற்கள் இடறிக்கொண்டேயிருந்தது. ஒன்றைக் காலில் உதைத்தேன். இன்னொன்று தூக்கி தூர வீசிவிட்டு நகர்ந்தேன்.

கொடுமணல் கிராமத்தின் எந்த இடத்திலும் ஐந்தடி ஆறடி தோண்டினால் பழைய நகரத்தை அடைந்துவிடலாம். நொய்யல் காஞ்சிமாநதியாகிவிடும். ஐந்தடி ஆறடி தூரத்தில் 2300வருடங்களைத் தாண்டி பயணித்துவிடலாம். கைநிறைய சங்குவளைகள், மட்பாண்டங்கள், ஓடுகள், மிளிர்கற்கள் அள்ளியள்ளிஎடுக்கலாம். எனக்கு தாத்தன் சொன்ன “தொட்டனைத்தூறும் மணற்கேணி” என்ற அழகான phrase ஞாபகம் வருகின்றது. அத்தனை செறிவான இடம். அ.கா பெருமாள் நாட்டார் இலக்கியங்களை நாட்டார் வரலாற்றை ஒழுங்குபடுத்தும் போது நம் வரலாறு மாற்றம்காணும். இன்னும் துலக்கமாகும் என்று சொல்லியிருக்கிறார். இங்கே கைப்புண் போல இத்தனை நதிக்கரை நாகரீகப் பொக்கிஷங்களை வைத்துக்கொண்டு இன்னும் கண்ணாடி தேடிக்கொண்டிருக்கிறோம். sorry படுஅபத்தமான உவமை.

கொடுமணல் இரும்பு எஃகு பொருட்களுக்கான தொழிற்சாலைகள் கொண்டிருந்த நகரம். அதைவிட ஆச்சர்யமான விஷயம் அலங்கார நகைகளின் நகரமாகவும் இருந்திருக்கிறது. உயர்ரக கற்களை மணியில் கோர்க்க துளையிடும் தொழில்நுட்பத்தில் தலைசிறந்திருந்த நகரமாதலால் வெளிநாட்டிலிருந்து கற்கள் கொண்டுவந்து துளையிட்டு பெற்று சென்றிருக்கின்றனர். கடுகின் விட்டத்தில் ஒரு பட்டன் அந்த பட்டனின் பக்கவாட்டில் துளையிடப்பட்டிருந்தது. நடுவில் துளையிடுவது சுலபம். ஆனால் பக்கவாட்டில் துளையிடுவது மிகவும் நுணுக்கம் கோரும் வேலை. கண்ணைப்பறிக்கும் ஆரஞ்சு நிறத்தில் வெள்ளையில் கோடுகள் வரையப்பட்ட டிசைன்.வெகுநேரமாக இவர் நம் காலத்து கற்களை காட்டி பழைய கற்கள் என்று ஏமாற்றுகிறார் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் காட்டிய கற்களில் பலவற்றை இணையத்திலும் பல இடங்களில் கண்டபோதுதான் நம்பினேன்.

இங்கே கிடைக்கும் மட்பாண்டகள் உள்ளே கறுப்பு நிறத்திலும் வெளியே சிவப்பு நிறத்திலும், சில பளபளவென பீங்கானைப்போலவும், டிசைன்கள் வரையப்பட்டும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டும் கிடைக்கின்றன. இந்த நிறங்கள் மாறுபட்டுவருவதற்கு களிமண்ணை சூடுசெய்யும் treatmentஇல் வித்தியாசம் காட்டுவதில் வருவதாம். ஒரு ஓட்டுச்சில்லை எடுத்து, “அண்ணே திராவிட நிறம் இது பாத்தீங்களா?? அந்தக்காலத்துலயே திராவிடம் பாருங்க!! இந்தப்பக்கம் கறுப்பு இந்தப்பக்கம் சிவப்பு” என்றேன். வெறுப்புடன் “தம்பீ உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!” என்று உதட்டில் கைவைத்து அவர் ஒரு ஓட்டுச்சில்லைக் காட்டினார். அதில் இந்த பக்கம் சிகப்பு. இந்தப்பக்கம் கறுப்பு. நடுவில் வெள்ளையாக இருந்தது.  😌

கண்ணுக்கெட்டிய தூரம் வரை தோப்புகள் தான். . நடுகற்கள் பற்றி, ஒரு குறளை வாசித்திருக்கிறேன். “என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.” அந்தக் காலத்து பன்ச் டயலாக் போல.. ஆக திருக்குறள் காலத்திலேயும் நடுகல் வழக்கமிருந்திருக்கிறது. நண்பருடைய தோப்பிலும் ஒரு நடுகல் இருந்தது. அதைக்காட்டி விளக்கினார். அந்தக்கல்லில் ஒரு முதலை மனிதனை விழுங்கிக்கொண்டிருக்கிறது. முதலையை ஒரு திரிசூலம் குத்திகிழிக்கிறது. இந்த நடுகல் கொடுமணல் ஆற்றங்கரையெங்கும் நிறைந்திருக்கிறது. இது முதலைகள் இருப்பதைக்குறிக்கும் அபாய அறிவிப்புகள் என்றும், அல்லது இந்த முதலை சூலம் மனிதன் என்பது ஒரு புராணிக கதையை ஞாபகப்படுத்தும் கல்லென்றும் இருகூற்று இருப்பதாக சொன்னார். நிறைய கற்கள் அளவில் சிறியதும் பெரியதுமாக இருந்தன. மழுங்கிபோயிருந்தாலும், கள்ளிச்செடிக்குள் பிணைந்திருந்தாலும், நான் ஓடியோடி சென்று அவற்றை ஸ்பரிசித்துப் பார்த்தேன். அந்த தொடுதல் எனக்கு தேவைப்பட்டது. இந்த நடுகற்கள் கிடைக்குமிடம் மக்கள் வாழ்ந்த இடமாம். தனியாக இன்னோரு பகுதியில் கல்லறைத்தொகுதிகள். பள்ளி படிக்கும் போது ஹரப்பா மொகஞ்ச்தாரோ பற்றி படிக்கும் போது, மொகஞ்சதாரோ ஒரு கல்லறை நகரமென்று படித்திருக்கிறேன்.

ஊர்முகப்பில் நாங்கள் கண்ட உயரமான முக்கோணக்கல் ஒரு அடையாளக்கல். மன்னர் மந்திரி பூர்ஷ்வாக்களுக்கு அப்படியொரு சிறப்பு அறிமுகம் தான் அந்த அடையாளக்கற்கள். நம் போன்ற வர்க்கத்திற்கு என்றால் சாதிவாரியாக, குடும்பம் வாரியாக, கூட்டம்வாரியாக வட்டவட்டமாக புதைத்து அதன்மேல் உருளையான கற்களை போட்டு வைத்துவிடுவார்களாம். ஒரு கால்பந்து மைதானத்தின் முக்கால்வாசி இடத்தில் இதுபோல ஏழு எட்டு கல்லறைத்தொகுதிகள் இருக்கக் கண்டோம். இவை பலருடைய நிலங்களில் இருக்கின்றதால், எல்லாமே பொக்கிசமாக பாதுகாக்கப்படுமென்று சொல்ல முடியாது. இப்போது அந்தக்கல்லறைகளுக்கு தென்னை நிழல் மட்டுந்தான் துணை. இம்மக்கள் மனசுமாறி விவசாயம் மாற்றி பயிரிடத்துவங்கினால் நிச்சயம் இந்த அடையாளங்களெல்லாம் அப்புறப்படுத்தப்பட்டுவிடும்.

இரும்பு எஃகு தாமிரமெல்லாம் கட்டி கட்டியாகவும், ஆயுதங்களாகவும், வீட்டு உபயோகப்பொருட்களாகவும் ஏற்றுமதிசெய்யப்பட்டிருக்கின்றன. 2500ஆண்டுகளுக்கு முந்தி ஒரு தொழிற்சாலை!! 2500 முந்தியே weekend, appraisal, தீபாவளி போனஸ், பொங்கல் ethnic day cultural celebrations, QBRமீட்டிங் என்று வாழ்ந்திருக்கும் எம் தமிழ்ச்சமூகம். கால்கள் சோர்வடைய மிகப்பெரிய இடத்தை காலால் கடந்திருந்தோம். வந்ததற்கு ஞாபகார்த்தமாக எதாவது கல்லை எடுத்துச்செல்லலாம் என்று ஒரு நடுகல்லின் அடியில் கைவிட்டுத்துளாவினேன். என் காலில் இடறிக்கொண்டிருந்த அந்த இரும்புக்கல் தட்டுப்பட்டது. இது என்ன பாஸ் உங்க ஊர் கல்லு வித்தியாசமா இருக்குது என்று கேட்டேன். “இது கல்லில்லை. இரும்புத்தொழிற்சாலையில் இருந்து உருவாகி வந்த எஃகு கழிவு. அச்சில் ஊற்றி காய்ச்சும் போது வீணான இரும்புதான் இப்படி குழம்பாகி இறுகியிருக்கின்றன என்றார். தலை சுற்றுவது போல இருந்தது. முன்னே சொன்ன வாணலி கொதிநிலையடைந்தது. நான் சுற்றி வந்த அந்த கால்பந்து மைதான அளவு நிலமெங்கும் நிறைந்திருந்து சதா என் காலில் தட்டுப்பட்டுக் கொண்டிருந்த கற்களெல்லாம் இந்த இரும்புக்கழிவுகள் தான்.

One thought on “‘அந்தக்காலத்துலயே திராவிடம் பாருங்க!’: நொய்யல் ஆற்றங்கரையில் ஒரு வரலாற்றுப் பயணம்

 1. // பள்ளி படிக்கும் போது ஹரப்பா மொகஞ்ச்தாரோ பற்றி படிக்கும் போது, மொகஞ்சதாரோ ஒரு கல்லறை நகரமென்று படித்திருக்கிறேன். /
  ——————

  “இந்த உலகமே மனிதனுக்கு கல்லறைதான். வெறுங்கையோடு வந்தாய், வெறுங்கையோடு திரும்பி செல்வாய். உனது உடலில் இருக்கும் ஒரு ரோமத்தையும் எடுத்து செல்ல முடியாது” என திருக்குரான் உரைக்கிறது.

  ஹரப்பா மொகஞ்சதாரோ இருப்பது பாக்கிஸ்தானின் சிந்து நதிக்கரையில்.

  “அண்ணே ஒரு சின்ன டவுட்டு…. பைரவன் என்றால் ஆண் நாய். பைரவி என்றால் பெண் நாய். சிந்து பைரவி என்றால், பாக்கிஸ்தானின் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த பெண் நாயா?”
  —————–

  ஆர்யவர்த்தாவில் யோனி பூஜையை ஒழித்த மாவீரர் கஜினி முஹம்மத்:

  சோம்நாதரை 17வது முறையாக மொட்டையடித்து விட்டு ஆப்கான் திரும்ப தயாராகிக் கொண்டிருந்த மாவீரர் கஜினி முஹம்மதின் குதிரைக்கு முன்னால் மண்டியிட்டு:

  “ஆலம்பனா, சலாமலைக்கும். ஒரு சின்ன வேண்டுகோள். போன தடவ ஒங்க அழகையும் வீரத்தையும் பாத்ததுலேருந்து, எம்பொன்னு ஆண்டாள் கட்னா ஒங்களத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல பிடிவாதமா நிக்கறா. குரான்லாம் மனப்பாடம் பண்ணிட்டா. நல்லா பில்டர் காபி போடுவா. ஒங்களோட காபுலுக்கு இவள கூட்டிண்டு போங்கோ. கண்கலங்காம பாத்துக்கோங்கோ” என சோம்நாத் பூசாரி கெஞ்சினார்.

  ஆண்டாளின் அழகை பார்த்த கஜினி முஹம்மத், அங்கேயே நிக்காஹ் செய்து அவளுடன் காபூலுக்கு பயணமானார். காபூலை அடைய பார்ப்பனரின் தாய் பூமியான சிந்து சமவெளியை கடந்துதான் செல்ல வேண்டும். அப்பொழுது:

  ஆண்டாள்: சுல்தான்… இங்கே அக்ரஹாரத்தில் என்னுடைய தோழி இருக்கிறாள்.. கடைசியாக அவளை ஒரு முறை சந்திக்க விரும்புகிறேன்..

  கஜினி முஹம்மத்: சரி பேகம்.. அதிக நேரம் எடுக்காதே… நான் காத்திருக்கிறேன்..

  (அப்பொழுது அக்ரஹாரத்து பார்ப்பனர்கள், திண்ணையில் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கு யோனி பூஜை செய்வதை கண்டார்)

  கஜினி முஹம்மத்: ஓ பார்ப்பனா !!. இதென்ன வேடிக்கை?. என்ன செய்கிறாய்?

  பாப்பான்: நாங்க பாரத்மாதாவுக்கு யோனி பூஜை செய்யறோம் சுல்தான்…

  கஜினி முஹம்மத்: ஓ அப்படியா.. முட்டாள் பார்ப்பனா… யோனியை இறைவன் எதற்காக படைத்தான்?. பூஜை செய்யவா?. இனவிருத்தி செய்யவா?.

  பாப்பான்: பூஜை செய்வது எங்களுடைய சாஸ்திர சம்ப்ராதயம்…

  கஜினி முஹம்மத்: அப்படியானால் இனவிருத்தியை யார் செய்வது?.

  பாப்பான்: பகவான் கிருஷ்ணன் செய்வார்… அவன்தான் புனித பசுக்களின் கோ-விந்தன், கோ-வரதன்..

  கஜினி முஹம்மத்: ஏன் நீ செய்யமாட்டாயா?

  பாப்பான்: அய்யய்யோ… அபச்சாரம் அபச்சாரம்… வேதம் கற்ற பார்ப்பனர் இனவிருத்தி போன்ற கீழ்நிலை காரியங்கள் செய்வது மஹா தப்பு…

  (அப்பொழுது ஆண்டாளும் தனது தோழியை சந்தித்து விட்டு அங்கே வந்து விடுகிறார். கஜினி முஹம்மதுக்கும் பாப்பானுக்கு நடக்கும் சம்பாஷனையை கேட்டு கலகலவென சிரிக்கிறார்)

  கஜினி முஹம்மத்: என்ன பேகம் சிரிக்கிறாய்.. இந்த பாப்பான் சொல்வது உண்மைதானா?

  ஆண்டாள்: ஆம் சுல்தான்…. இந்த மாங்கா மடையன்களுக்கு எத எப்படி செய்யனும்னே தெரியாது.. என்னுடைய தோழிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும், இன்னமும் அவளுடைய ஆத்துக்காரன் யோனி பூஜை செய்து கொண்டிருக்கிறான்… என்னிடம் பல முறை சொல்லி அழுதிருக்கிறாள்.. ஆகையால்தான் உங்களை போன்ற ஆண்மகனிடம் எனது மனதை பறிகொடுத்தேன்… நல்ல வேளை பிழைத்தேன்.. அல்லாஹ்வுக்கு மிக்க நன்றி…

  கஜினி முஹம்மத்: ஓஹோ.. அப்படியா… பேகம் இந்த மடையர்களை எப்படி திருத்துவது?

  ஆண்டாள்: இவனுகள திருத்தவே முடியாது… பேசாமல் இந்த பாப்பான்கள் அனைவருக்கும் விருத்தசேனம் செய்து மாட்டுக்கறி கொடுங்கள்.. எனது தோழி போல் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பார்ப்பன பெண்களை இந்த கொடுமையிலிருந்து காப்பாற்றுங்கள் சுல்தான்…
  ——————

  இந்த சம்பவத்துக்கு பிறகு, சிந்து சமவெளியில் வாழ்ந்த பார்ப்பன பெண்களிடையே சுன்னத், மாட்டுக்கறியின் மகிமை காட்டுத்தீ போல் பரவியது.. சுன்னத் செய்த பாப்பான்கள் இல்லற வாழ்க்கையின் இன்பத்தை உணர்ந்தனர்.. நாளடைவில் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினர். இந்த தூய பூமிதான், 1947ல் பாக்கிஸ்தானாக பிறந்தது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.