அன்புள்ள மோடிஜீ… ஒரு மூத்த குடிமகனின் வலிமிக்க கடிதம்!

மாதவராஜ்

மாதவராஜ்

இந்தக் கடிதம் பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பக்கத்திலேயே ஒருவரால் எழுதப்பட்டு இருக்கிறது. நிதியமைச்சருக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. மிக எளிமையான வார்த்தைகளும் உண்மைகளாலும் எழுதப்பட்ட இந்தக் கடிதம் உலுக்குகிறது. நீங்களும் படியுங்கள் பிரஜைகளே!

எழுதியவர் கையில் 40 லட்சம் இருக்கிறது. இந்த நாட்டில் மரியாதையாகவும், உத்திரவாதமாகவும் வாழும் நிலை அவருக்கு இல்லை.

இதுதான் நிலைமை என்றால் கோடானுகோடி அன்றாடம் காய்ச்சிகளின் நிலைமை?

மோடியின் அரசு எங்கே அழைத்துச் செல்கிறது?


மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜீ!
மதிப்பிற்குரிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜீ!

உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை இதைப் படிப்பதற்காக செலவிட்டு இந்த விஷயத்தில் சரியான ஒரு முடிவு எடுப்பீர்கள் என்னும் நம்பிக்கையில் நன்றி சொல்லிக்கொள்கிறேன் முதலில்.

நான் இந்த நாட்டின் மூத்த குடிமகன். 1.8.2012 அன்று அரசுடமை வங்கியில் 40 லட்சம் ஐந்து வருடங்களுக்கு டெபாசிட் செய்தேன். ஒவ்வொரு மாதமும் எனக்கு ரூ. 35,352/- கிடைத்தது. எந்தப் பிரச்சினையுமில்லாமல் என் வாழ்க்கையை நடத்த முடிந்தது. 5 வருடம் முடிந்ததும், இப்போது மீண்டும் அந்தப் பணத்தை டெப்பாசிட் செய்தேன். இப்போது மாதம் ரூ.26489/- தான் கிடைக்கிறது. ஏற்கனவே வாங்கியதை விட ரூ.8863/-, அதாவது 25% குறைவான தொகை இது. இந்த இழப்பை எப்படி சரிக்கட்டுவது அல்லது மருந்து, காய்கறி, பருப்பு இவைகளில் எதைத் தியாகம் செய்வது என நீங்களே சொல்லுங்கள்.

2014ல் நீங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு எதையும் நீங்கள் செய்யவில்லை. புதிதாக எந்த வசதிகளையும் செய்து தரவில்லை. ஆனால் இருப்பதையும் குறைத்து விட்டீர்கள். எந்தப் பொருட்களின் விலையும் 2014ல் இருந்தது போல் இல்லை. உங்களால் புள்ளி விபரங்களைக் குறைக்க முடிந்திருக்கிறதே தவிர விலைகளை குறைக்க முடியவில்லை. பருப்பு, உப்பு, வெங்காயம், இப்போது தக்காளியென தினசரி பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. சமயங்களில் சில பொருட்களை எட்டி கூடப் பார்க்கக் கூட திராணி இல்லை எங்களுக்கு.

இந்த வட்டி விகிதக் குறைப்பிற்கு Demand மற்றும் supply ஐக் காட்டி அரசியல் மட்டும் கோட்பாட்டு ரீதியான காரணத்தை உங்களால் சொல்ல முடியும். ஆனால் பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணங்களைச் சொல்ல முடியாது. முதலீட்டாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க தாங்கள் விரும்பினால், அது டெபாசிட் செய்கிறவர்களின் தலையில் கை வைப்பதாய் இருக்கக் கூடாது. வராக்கடன்கள் என்னும் எரிமலைகளின் மீது வங்கிகள் இயங்குகின்றன.

தங்கள் பொன்னான காலங்களை எல்லாம் பல நிறுவனங்களுக்கும், தேசத்துக்கும் சேவை செய்து வாழ்ந்த எங்களைப் போன்ற மூத்த குடிமக்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பது அரசின் கடமையல்லவா? இந்த 25 % இழப்பினை எப்படி ஈடு கட்ட முடியும் என்பது எங்களுக்குத் தெரிகிறது. எந்த அமைச்சரோ, எம்பியோ, எம்.எல்.ஏவோ தங்கள் வருமானத்தை குறைத்துக் கொள்ள முன் வருவார்களா? இல்லையென்றால் மூத்த குடிமக்கள் மட்டும் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்?

உங்களைப் போல எங்களின் ஊதியத்தை நாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. எந்த விவாதமும் இல்லாமல் உங்கள் ஊதியத்தை நிர்ணயிக்க உங்களுக்கு இரண்டு நிமிடங்கள் போதும். ஆளும் கட்சி மேஜைகளில் இருப்பவர்களும், எதிர்க் கட்சி மேஜையில் இருப்பவர்களும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும். பற்றாக்குறை, பொருளாதாரம் மற்ற எல்லாக் காரணங்களையும் உங்களால் கடந்து விட முடியும்.

மூத்த குடிமக்களுக்கான இந்த டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் ஆரம்பத்தில் 9.20 சதவீதமாக இருந்தது. ஜூலை, 2014ல் அது 8.3 சதவீதமாக குறைந்தது. அதுவும் 15 லட்சம் வரைதான். இந்த வட்டி விகிதம் ஓய்வு பெறுகிற ஒருவருக்கு கிடைப்பதைப் போல 12 சதவீதமாக இருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் பொருளாதார ரீதியான மரியாதையோடு தலை நிமிர்ந்து வாழ்வதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். எங்களின் சேமிப்பு மூலமாக வாழும் அவலநிலையில் நாங்கள் இருப்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நான் எதுவும் தவறாகச் சொல்லி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

மரியாதையோடும், நன்றியோடும்

மாதவராஜ், எழுத்தாளர்; தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

2 thoughts on “அன்புள்ள மோடிஜீ… ஒரு மூத்த குடிமகனின் வலிமிக்க கடிதம்!

 1. மதீனாவில் பெருமானார்(ஸல்) எப்படி வட்டியில்லா வங்கியை நிறுவி வறுமையை ஒழித்தார்?:

  இஸ்லாம் வர்ணதர்மத்தை வேரறுக்கும் என்பதை உணர்ந்துகொண்ட மெக்கா குரைஷி பார்ப்பனர், இறுதியில் பெருமானாரை(ஸல்) கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த சமயத்தில், மதீனா அன்சாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அங்கே ஜாதி வெறி தாண்டவமாடியது. ஒருவரை ஒருவர் வெட்டிக்கொன்றனர். மெக்காவில் பல ஜன்ம விரோதி குழுக்களுக்கு இடையே பெருமானார்(ஸல்) நிலைநாட்டிய சமரச உடன்படிக்கைகளை கேள்விப்பட்ட அன்சாரிகள், தங்களுடைய பிரச்னையை தீர்க்க பெருமானாரை மதீனாவுக்கு அழைத்தனர்.

  இனி மெக்காவில் இருந்தால், குரைஷி பார்ப்பனர் தன்னை கொன்றுவிடுவரென்பதை அறிந்து கொண்ட பெருமானார், தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள மெக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்தார். இதைத்தான் ஹிஜ்ரத் என இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது. அங்கே முதல் வேலையாக அனைத்து ஜாதி தலைவர்களையும் சந்தித்து பேசி அவர்களிடையே ஒரு அமைதி உடன்படிக்கையை நிலைநாட்டினார். இதனால், மதீனாவில் வியாபாரம் சூடுபிடித்து பொருளாதாரம் சீரடைந்தது. வறுமை ஒழிந்தது. இதன் மூலம் அன்சாரிகளிடையே பெருமானாரின் மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு உயர்ந்தது. இறுதியில், இந்த பொருளாதார கோட்பாடுதான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை உணர்ந்த மதினாவாசிகள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவினர்.

  மதீனாவில் நடந்த பொருளாதார மறுமலர்ச்சியும், வறுமை ஒழிப்பும் அரேபியாவெங்கும் பரவியது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களில் அரேபியாவே ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவியது. “கடமையை செய், பலனை எதிர்பாராதே” எனும் பார்ப்பன வர்ணதர்ம சொத்துக்குவிப்பு ஏமாற்று வித்தையை உடைத்தெறிந்து “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்” எனும் நீதியை நிலைநாட்டிக் காட்டினார் பெருமானார்.

  இந்த புரட்சி எப்படி நடந்தது?. பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த அவருடைய தோழர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும் தங்களுடைய உழைப்பையும் பொருட்களையும் வாரிவழங்கினர். வட்டியில்லா இஸ்லாமிய வங்கியை நிறுவி “லாபமும் நட்டமும் சரிபாதி” எனும் அடிப்படையில் மதீனா வியாபாரத்தில் முதலீடு செய்தனர். குறிப்பாக உஸ்மான்(ரலி) அவர்கள் அரேபியாவின் மாபெரும் துணி வியாபாரியாகவும் செல்வந்தராகவும் இருந்தார். ஒரு கட்டத்தில், தனது சொத்துக்கள் அனைத்தையும் பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்துக்காக தியாகம் செய்ய முன்வந்தார். அப்பொழுது பெருமானார்(ஸல்) “ஏழ்மையை ஒழிக்க நீங்கள் ஏழையாகிவிட்டால், அப்புறம் யார் எங்களுக்கு வாரிவழங்குவது?. உங்களுடைய லாபத்தில் பாதி போதும். மீதியை உங்கள் வியாபரத்தில் விருத்தி செய்யுங்கள்” என அறிவுறுத்தினார்.

  உஞ்சவிருத்தி பாப்பானிடம் போய் “எனக்கு வேலை கொடு, இட ஒதுக்கீடு கொடு” என எவ்வளவு நாளைக்கு கெஞ்சுவது?. அன்சாரிகளுடன் இணைந்து, நாம் ஏன் தமிழகத்தின் வறுமையை ஒழிக்கக்கூடாது?. இதற்கு பெரிய தியாகமெல்லாம் தேவையில்லை. ஒரு கோடி முஸ்லிமகள், வருடத்துக்கு பத்து ரூபாய் தந்தால் பத்து கோடி. இதனை “அம்பேத்கர் பெரியார்” அன்சாரிகளுக்கு கொடுத்தால், நமக்காக ஒரு மதீனா உருவாகும். இன்ஷா அல்லாஹ், தமிழகம் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவும்.

  Like

 2. // நான் இந்த நாட்டின் மூத்த குடிமகன். 1.8.2012 அன்று அரசுடமை வங்கியில் 40 லட்சம் ஐந்து வருடங்களுக்கு டெபாசிட் செய்தேன். ஒவ்வொரு மாதமும் எனக்கு ரூ. 35,352/- கிடைத்தது. எந்தப் பிரச்சினையுமில்லாமல் என் வாழ்க்கையை நடத்த முடிந்தது. 5 வருடம் முடிந்ததும், இப்போது மீண்டும் அந்தப் பணத்தை டெப்பாசிட் செய்தேன். இப்போது மாதம் ரூ.26489/- தான் கிடைக்கிறது. ஏற்கனவே வாங்கியதை விட ரூ.8863/-, அதாவது 25% குறைவான தொகை இது. இந்த இழப்பை எப்படி சரிக்கட்டுவது அல்லது மருந்து, காய்கறி, பருப்பு இவைகளில் எதைத் தியாகம் செய்வது என நீங்களே சொல்லுங்கள். //
  —————

  பொருளாதாரம் புரியாத ஒரு அப்பாவி அடிமை புலம்புகிறார். 5 வருடங்களுக்கு முன்பிருந்த 40 லட்சத்தின் மதிப்பு இன்றென்ன?.. வட்டி மூலம் ஒரு நாட்டை நடத்த முடியுமா?. அந்த நாட்டின் பணமதிப்பு உலக சந்தையில் வீழ்ச்சியடையும். கை நிறைய கழுதை விட்டை மாதிரி அவனவன் கோடிக்கணக்கில் பேப்பர் பணத்தை மூட்டையிலும் வங்கி அக்கவுண்டிலும் வைத்துக் கொண்டு புல்லரித்து போக வேண்டியதுதான். ஒரு நாள் அதையும் செல்லாக்காசாக அறிவித்துவிடும் அரசாங்கம். கடலில் மூழ்கும் கப்பலை காப்பாற்ற வேறு வழி?.

  வட்டி சோம்பேறிகளை உருவாக்கி வேலையில்லா திண்டாட்டத்தை பெருக்கும் என பெருமானார்(ஸல்) அறிவித்தார். வங்கிகள் வட்டி தருவதை நிறுத்தினால், அந்த பணத்தை மக்கள் வியாபாரத்தில் முதலீடு செய்வர். சுய வேலை வாய்ப்பு பெருகும். வேறு வழியில்லாமல் வட்டியில்லா வங்கிகள் “லாபமும் நட்டமும் சரிபாதி” எனும் அடிப்படையில் திறமைசாலிகள் மூலம் வியாபாரத்தில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்வர். ஒரு சில வருடங்களில் வறுமை ஒழிந்து “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழும்” நிலை உருவாகும்.

  இந்தியா முழுதும் 35 வயதுக்கு கீழான கிட்டத்தட்ட 16 கோடி வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். இது தவிர, வருடத்துக்கு இரண்டு கோடி புதிய பட்டதாரிக்களும், தொழிலாளிகளும் வேலை தேடும் சந்தைக்கு வருகின்றனர்.

  130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். வெகுவிரைவில் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை “வேலையில்லா பட்டதாரிகளின் எரிமலை” சிதறடிப்பதை தவிர்க்க வேண்டுமானால், வட்டியில்லா வங்கி முறை வரவேண்டும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.