#Biggboss: அண்ணாத்த பயங்கரமா ஆடுறார்… ஒத்துக்கோ ஒத்துக்கோ !!

ஜெயசந்திர ஹாஸ்மி

ஜெயசந்திர ஹாஸ்மி

ஒருவாரமா பிக் பாஸ் பாக்குறது இல்ல. நேத்து ரொம்ப கடுமையான மனஅழுத்தத்துல இருந்து வெளிய வர்றதுக்கு என்னென்னமோ செஞ்சு பாத்து எதுவும் முடியாம கடைசியா சரணடைஞ்ச இடம் பிக் பாஸ். சத்தியமா கமலுக்காக மட்டும்தான். And i did not regret a bit !!

அழகுன்னு நினைச்சுகிட்டு இருக்கற பலபேர நான் பாத்துருக்கேன். மூஞ்சிய ஒருவாகா வச்சுகிட்டா மட்டும்தான் அழகா தெரியும். அதுக்காக கொஞ்சம்கூட கோணலா முகத்த மாத்தாமலே இருப்பாங்க. ஆனா ஒரு மனுசன் ரசம் ரசமா பாவனைகள மாத்தி, அத்தனையிலும் அட்டகாசமா இருக்க முடியும்னா அது கமல் தான்.

வெறுமனே தோற்றம் மட்டுமே அழகில்ல. அதத்தாண்டி நம்மள எப்படி ஒரு அரங்குல நிலைநிறுத்துறோம்ன்ற ஒன்னு இருக்கு. இந்த மனுசனுக்கு அது மூச்சு வாங்கற மாதிரி இயல்பா வருது. ஆளுமை (திரை/மேடை) என்ற வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் இந்த ரெண்டு நாள் கமல்தான். கமலுக்கு ஏன் இந்த வேலை, அவருக்கு ஆங்கரிங் வரலனு சொன்ன அத்தனை பேரும் நேத்து எபிசோட்ட கண்கொட்டாம பாத்துருப்பாங்க.

And, கமல் ஒருத்தர தவிர தமிழ்ல யோசிச்சுப் பாத்தாலும் இந்த ஷோ க்கு இன்னொருத்தர பிடிக்க முடியாது. எனக்குத் தெரிஞ்சு பிக் பாஸ் எத்தன சீஸன் போதோ, அத்தன சீஸன் வரைக்கும் கமல் வருஷா வருஷம் 25 கோடிய செக்யூர் பண்ணிட்டாருன்னு நினைக்குறேன். .

நேத்து பாத்த எபிசோட இன்னைக்கு மறுபடியும் போட்டுப் பாத்தேன். கமல் கமல் கமல். முழுமையா நிறைஞ்சுருக்காரு. உள்ள இருக்கறவங்க யாராச்சும் கொஞ்சம் பொய்யா எதாவது சொன்னா, வெளிய இருந்து நாம அசிங்கமா திட்டலாம். ஆனா கமல் அப்படி சொல்ல முடியாது. ஆனா அதுக்கு பதிலா ஒரு ரியாக்சன் வருது பாருங்க. ப்பா..நம்ம திட்டறதவிட பலமடங்கு காரி துப்புது அது. உடல்மொழி, சின்ன சின்ன Nuances, டக்குனு வர்ற Counter, நுணுக்கமான நகைச்சுவை உணர்வுனு நேத்து முழுக்க சூரசம்ஹாரம் .

மனநலம் பாதிக்கப்பட்டவங்கள கிண்டல் பண்ணத கண்டிச்சது, மருத்துவ முத்தம், காயத்ரிட்ட முடிய தூக்கி காமிச்சது, சக்திட்ட டக்குனு மலையாளத்துல சம்ஸாரிச்சது, திராவிடத்த பத்தி நறுக்குனு சில பாயிண்ட் எடுத்து விட்டது, சைடு கேப்ல பரணிய சப்போர்ட் பண்ணது, என் தங்கைய வெளிய அனுப்பறேன்னு ஜுலிய பாதுகாத்ததுனு ஒவ்வொன்னும் அப்படியொரு ராஜதாண்டவம். A Pure Bliss to Watch him on Screen !!

தெரிஞ்சோ இல்ல தெரியாமலோ கமல் ஒரு சூப்பரான Scenario வ தன்ன சுத்தி கட்டமைச்சுகிட்டாரு. ஒருபக்கம் கோடிக்கணக்கான மக்களோட உரையாடக்கூடிய இந்த ஷோ, இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளுடனான உரசல், அதபத்தி அப்பப்ப இங்க ஒன்னு ரெண்டு வார்த்தைனு ஒரு சூப்பரான பேக்கேஜ் இது. பாக்கறவன ஈசியா ‘ஆண்டவருக்கு வெளிய எத்தன பிரச்சினை..அமைச்சர்களோட தகராறு, கோர்ட்ல கேஸ் அதுஇதுனு…ஆனா எல்லாத்துக்கும் நடுவுலயும் இங்க வந்து செமயா கலக்குறாரு பாரேன்’னு முடிய நட்டுக்க வைக்குற ஒரு பேக்கேஜ். And he is enjoying every bit of it 🙂

ஆனா கமல தாண்டி இதுல கவனிக்க நிறைய விஷயம் இருக்கறதா நான் உணர்றேன். இதுக்கு பெர்ஃபெக்ட் உதாரணம் ஜுலி. உள்ள வரும்போது எல்லாரோடயும் அதிகமான கைத்தட்டல்களோட வந்தது ஜுலிதான். ஆனா போகும்போது எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் கூட கைத்தட்டல. கமல்ட்ட பேச வரும்போது கேட்ட கைத்தட்டல்கூட எடிட்டிங்ல சேத்தமாதிரி தான் இருந்துச்சு.

ஒரு சின்ன ஆனா பிரபலமான மேடை கிடைச்ச பரபரப்புல, நிறைய பொய், அதை மறைக்க நாடகங்கள், துரோகம், அடிமை மனோபாவம்னு தன் இருப்பை தக்க வைக்க பண்ண அத்தனை விஷயமும் இறுதில என்ன மாதிரியான விளைவுகள திருப்பிக்கொடுக்கும்னு எல்லாருக்கும் புரிஞ்சுருக்கும். ஜுலிக்கு கண்டிப்பா புரிஞ்சுருக்கனும். அப்படியே ஆப்போசிட் ஓவியா. உண்மையா இருக்கறோமோ இல்லையோ, உண்மையா இருக்கறவங்கள நமக்கு உள்ளாற புடிக்கும்ன்றதுக்கு ஓவியாக்கு கிடைக்கற இவ்ளோ அன்பும் உதாரணம்.

ஜுலிய அசிங்கப்படுத்தும் அந்த வீடியோவ அங்க போட்டுக் காட்டுனது பயங்கரமான உத்திதான். ஆனா அத கன்பெஷன் ரூம்லயோ, இல்ல வேறெப்படியோ போட்டுக் காட்டிருக்கனும்ன்றது என்னோட கருத்து. அத்தன பேருக்கு முன்னாடி தன்னோட முகமூடி கிழிஞ்ச அவமானத்த மறைக்கத் தெரியாம அந்த பொண்ணு பட்ட பாடு ரொம்ப உறுத்தலா இருந்துச்சு.

அதேமாதிரி மனசோட ஆழத்துல ஊறுன மேட்டுக்குடி மனோபாவம் என்ன ஆனாலும் மாறாதுன்றதுக்கு காயத்ரி பக்கா எடுத்துக்காட்டு. தான் பண்ண தப்ப சுட்டிக்காட்டுனா கூட சுட்டிக்காட்டறவன குறை கண்டுபுடிக்கறதுலாம் அல்டிமேட் சில்லறத்தனம். அதுவும் கமல பத்தி பொறணி பேச ஆரம்பிச்சதும், அசிங்கமா பேசுனதுக்கு தன்னோட வேலய காரணமா சொன்னதும், மயிறுனு சொன்னதே என்னப் பொறுத்தவரைக்கும் கம்மிதான்னு சொல்றதுலாம் என்னா திமிர்ல வர்ற வார்த்தைகள்ல?

இப்பவரைக்கும் ஓவியாக்கும் கிடைச்ச ஓட்டுக்களும் கைத்தட்டல்களும்தான் ஓவியா மேல காயத்ரி கொண்ட வன்மத்துக்கு காரணம்னு நான் நம்புறேன். காயத்ரி நாளைக்கு வெளிய வந்து கமல்ட்ட பேசும்போது, காயத்ரிக்கு வரவே வராத, ஆனா ஓவியானு பேர சொன்னா அதிரப்போற கைத்தட்டு மட்டுமே போதும், காயத்ரி வயிறெரிய. ஹாட்ஸ்டார்ல பாத்து வயிறெரியுறதுலாம் அப்பறம்.

ட்விட்டர்ல முந்தி ஒரு ட்வீட் படிச்சேன். ‘காயத்ரி இந்த வாரம் பிக் பாஸ் எடிட்டர நாமினேட் பண்ணப்போறா பாரேன்’னு. அதுக்கான வாய்ப்புகள் பிரகாசமா தெரியுது. ஆனா பண்ணப்போறது காயத்ரியா ஆரவ்வானு தெரியல 🙂 காயத்ரி வெளிய போகப்போறது தெரிஞ்சு, நானே விரும்பித்தான் போறேன்ற இமேஜ உருவாக்கதான் அழுத மாதிரி எனக்குத் தோனுது.

ரைசா, சிநேகன், வையாபுரி மேல நிறைய மரியாதை வந்துருக்கு. கணேஷ் வெங்கட்ராம பாத்தா மைக்கேல் மதன காமராஜன்ல வர்ற பீம்பாய் தான் ஞாபகத்துக்கு வருது. யார் கௌம்புனாலும் பெட்டிய தூக்கிட்டு போய் வழியனுப்பறது. சக்தி பத்தி சொல்றதுக்கு நெஜமா எதுவும் இல்லை. காயத்ரியோடு மேல் வெர்ஷன். ஓவியா இல்லாததாலயா இல்ல ஜுலி இல்லாததாலயானு (நிஜமா நாம ஜுலியயும் மிஸ் பண்ணுவோன்றது என் நம்பிக்கை) தெரியல..ஆனா இன்னைக்கு எபிசோட் ரொம்ப மொக்க. ரைசா ஆரவ்வ குடஞ்சு குடஞ்சு கேட்டத தவிர.

மத்தபடி கமல் சொன்ன மாதிரி 100 சதவிகிதம் இது ‘Social Experiment’ தான். அத நாம எப்படி எடுத்துக்கறோமோ அப்படி இருக்கு. சுயபரிசோதனையா எடுத்துக்கலாம். திண்ணைப்பேச்சா எடுத்துக்கலாம். நம் மனசுல இருக்கற அழுக்குகள இன்னொருத்தர் தலைல கட்டி, அவங்கள திட்டுற வடிகட்டியா எடுத்துக்கலாம். இல்ல சும்மா சீரியல் மாத்ரி ஒரு கதையா எடுத்துக்கலாம். யார் யாருக்கு எப்படி உள்ளே செல்கிறதோ, அப்படியேதான் வெளிய வரும்னு நம்புறேன். எது எப்படியோ, கமல் மேடைல ரியாக்ஷன்களால ஆடப்போற ருத்ரதாண்டவத்துக்காகவே வார இறுதிகள்ல பிக் பாஸ் பாக்கப்போறது உறுதி.

அண்ணாத்த பயங்கரமா ஆடுறார். ஒத்துக்கோ ஒத்துக்கோ !!

ஜெயசந்திர ஹாஸ்மி

3 thoughts on “#Biggboss: அண்ணாத்த பயங்கரமா ஆடுறார்… ஒத்துக்கோ ஒத்துக்கோ !!

 1. அடுத்த முதலமைச்சர் கமல்தான். ரஜினி கமலுடன் சேர்வார். எம்.ஜி.ஆர் போல் இரண்டு மடங்கு ஆதரவு கமலுக்கு இருக்கிறது. கமல் வந்தால், திமுக அழிந்துவிடும்.

  Like

 2. அதெல்லாம் சரி… இங்கே அழகர் கோயிலில் எதிர்த்து பேச முடியாமல், மார்கழி மாசத்து நாய் போல் நாக்கு தள்ள, கண்கள் மிரள, செக்ஸ் அடிமையாக குனிந்து தேவருக்கு குருபூஜை செய்யும் பாப்பாத்தி அம்பாளுக்கும், காலை விரித்து யோனியை காட்டும் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கும் ஒரு முழத்துண்டோ, கிழிஞ்ச பாவாடையோ, சின்ன ஜட்டியோ மொதல்ல அண்ணாத்தைய போட்டு விட சொல்லுங்கோ…

  Like

 3. யோனியை காட்டும் பாரத தாய்க்கும் தமிழ் தாய்க்கும் என்ன வித்தியாசம்?:

  ஒரு வித்தியாசமும் கிடையாது. இரண்டும் பாப்பார தேவ்டியாமுண்டைகள்தான். இஸ்லாத்தை பொறுத்த வரை, நிலம் நிலம்தான், மாடு மாடுதான். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே.

  நிலம், பசு மாடு என அனைத்தையும் தாயாக்கி விட்டு நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடும் பாப்பானை எப்படி திருத்துவது?. பேசாமல் அவனுக்கு சுன்னத் செய்ய வேண்டியதுதான்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.