கடத்தப்பட்ட விமானம்: சுப. உதயகுமாரன்

சுப. உதயகுமாரன்

சுப. உதயகுமாரன்

பூமியைவிட்டு வெளியேச் சென்று நமது உலகின் நிலைமையை அலசி ஆராய்ந்தார்கள் சில அறிஞர்கள். ஹென்றி ஜார்ஜ் என்கிற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் தனது 1879-ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் “பூமி அனைத்துத் தேவைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு விண்வெளிக் கலம்” என்று குறிப்பிட்டார். அந்த உருவகத்தை ஜார்ஜ் ஆர்வெல் என்கிற புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் 1937-ல் வெளியிடப்பட்ட தன்வரலாற்று நூல் ஒன்றில் எடுத்தாண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு தோற்றுப்போய் பின்னர் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராகப் பணியாற்றிய அட்லாய் ஸ்டீவன்சன் நமது பூமியை விண்கலம் என்றழைத்து, “அதன் மீது பயணம் செய்யும் பயணிகள் பாதி பேர் பாக்கியவான்களாகவும், பாதி பேர் தரித்திரர்களாகவும், பாதி பேர் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், பாதி பேர் பரிதவிப்பவர்களாகவும், பாதி பேர் அடிமைகளாகவும், பாதி பேர் சுதந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள். இம்மாதிரியான பெருத்த வேறுபாடுகளோடு எந்தக் கலமும், எந்தப் பயணிகளும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாது. இந்த வேறுபாடுகளைக் களைவதன் மூலம்தான் நாம் தப்பித்துக் கொள்ள முடியும்” என்று 1965-ஆம் ஆண்டு தனது ஐ.நா. உரை ஒன்றில் குறிப்பிட்டார்.

கென்னத் போல்டிங் என்கிற சமூகவியல் அறிஞர் 1966-ஆம் ஆண்டு “முகிழ்க்கும் விண்வெளிக்கலமாம் பூமியின் பொருளாதாரம்” எனும் புகழ்பெற்ற கட்டுரை ஒன்றை வெளியிட்டார். பின்னர் 1971-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இருந்த ஊ தாண்ட் தனது பூமி நாள் உரையில் “குளிரான விண்வெளியில் இதமான, மெல்லிதான உயிர்களுடன் சுழன்றும் சுற்றிக்கொண்டும் இருக்கும் நமது அழகான விண்கலமாம் பூமிக்கு சமாதானகரமான, மகிழ்ச்சியான பூமி நாட்கள் மட்டுமே வந்து சேரட்டும்” என்று வாழ்த்தினார்.

சர்வதேச சமாதான ஆய்வுக் கழகத்தின் மாநாடுகளில் கென்னத் போல்டிங் மற்றும் அவரது துணைவியார் எலீஸ் போல்டிங் ஆகியோருடன் பலமுறை சந்தித்து அளவளாவும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் இந்த உருவகம் பற்றி நாங்கள் நிறையப் பேசியிருக்கிறோம்.

நமது பூமியை ஒரு விமானமாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த பூமியில் வாழும் ஏறத்தாழ 7.5 பில்லியன் மனிதர்களையும் இந்த விமானத்தில் சேர்ந்து பயணம் செய்யும் பயணிகளாக உருவகம் செய்யுங்கள்.

 

நமது விமானத்தில் குறிப்பிட்ட அளவு உணவும், நீரும், எரிபொருளுமே இருக்கின்றன. உணவுப் பற்றாக்குறை, போதிய தண்ணீரின்மை, காற்று மாசு, எண்ணெய் வளம் தீரப்போவது என பல பிரச்சினைகளை எதிர்கொண்டவாறே நமது விமானப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தற்போதைய விமானங்களைப் போலவே பூமி என்கிற நமது விமானமும் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் வகுப்பில் பெரு முதலாளிகள், அதிகாரமும் அதீதப் புகழும் பொருளும் பெற்றோர் பயணிக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வின் அனைத்து வளங்களும், நலன்களும், வாய்ப்புக்களும், வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.

முதல் வகுப்புக்கு அடுத்த ‘பிசினஸ்’ (வணிக) வகுப்பில் வியாபார விற்பன்னர்கள், அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் போன்றோர் பயணிக்கின்றனர். இல்லாமை, போதாமை என்கிற பிரச்சினைகளையே அறியாத ஓர் அற்புத வாழ்வை இவர்களும் அனுபவிக்கிறார்கள். சிறந்த கல்வி, சக்திமிக்க வேலைகள்–தொழில்கள், நிலையான வருமானம், ஏராளமான சொத்து சுகங்கள், ஆள் தொடர்புகள், அதீத சக்தி என விரிந்து பரந்திருக்கிறது இவர்கள் வாழ்க்கை.

‘மாட்டுக் கொட்டகை’ என ஒருவர் வர்ணித்த ‘எகானமி’ (சிக்கன) வகுப்பில் சாதாரண மக்கள் பயணம் செய்கின்றனர். இங்கே எல்லோருக்கும் தேவையான உணவு கிடைத்தாலும், அளவிலும், தரத்திலும் குறைந்த உணவுகளேக் கிடைக்கின்றன. அதே போலத்தான் தண்ணீரும்! முதல் வகுப்பு பயணிகளுக்குக் குளிப்பதற்குகூட தண்ணீரும், வசதியும் இருக்கின்றன. ஆனால் கீழ் வகுப்பில் உள்ளவர்களுக்கு உயிரை பிடித்து வைப்பதற்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

உயர் வகுப்புக்களில் உள்ள பெரிய இருக்கைகள், அதிக இடைவெளி, இருக்கையை படுக்கையாக்கிக் கொள்ளும் வசதி, மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி போன்றவற்றுக்கு நேர் எதிராக, கீழ் வகுப்பு அதிக மக்கள் தொகை, இட நெருக்கடி, கால் வைப்பதற்குக்கூட போதுமான இடமின்மை, மூச்சுமுட்டும் அளவுக்குக் கூட்டம் என்று அமைந்திருக்கிறது.

மேற்குறிப்பிட்ட வகுப்புக்களுக்கிடையே வாழ்க்கைத்தரம் கடுமையாக வேறுபடுகிறது. உயர் வகுப்புக்களில் உள்ளவர்களின் கலாச்சார அனுபவங்கள், இசை, நாடகங்கள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் எல்லாமே தரமிக்கவை. அவர்களுக்கு தகவல் பரிமாற்றத் தொடர்புகள் நிறைய இருக்கின்றன. தேவைப்படும் சேவைகள் அனைத்தும் தடைகளேதுமின்றி தக்க நேரத்தில் தேவைக்கதிகமாகக் கிடைக்கின்றன. அவர்கள் மரியாதையோடும், முக்கியத்துவத்தோடும், கண்ணியத்தோடும் நடத்தப்படுகின்றனர். ஆனால் கீழ் வகுப்புக்களில் இவை எதுவுமில்லை. வாழ்வின் அடிப்படை பாதுகாப்போ, கண்ணியமோ ஏதுமின்றி வாழ்க்கை நகர்கிறது. வாழ்வே ஒரு பெரும் போராட்டமாக நடக்கிறது.

விமானப் பணியாளர்கள் விமானத்தின் நிர்வாகத்தை நடத்துகின்றனர், வளங்களை மேலாண்மை செய்கின்றனர், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கின்றனர், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்றனர். இந்த விமானப் பணியாளர்களை ஒத்தவர்கள்தான் நமது ஆட்சியாளர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, அல்லது நேர்மையற்ற வியாபார முறைகளில் “தேர்ந்தெடுக்கப்பட்ட” அரசுத் தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்வதாகச் சொல்லிக்கொண்டாலும், தேவைக்கதிகமான வளங்களை தங்களுக்கெனப் பதுக்கி, ஒதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இவர்கள் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வர வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்பது விதி. ஆனாலும் இவர்கள் முதல் வகுப்புப் பயணிகளின் காலடிகளில்தான் உட்கார்ந்திருப்பார்கள். கீழ் வகுப்புப் பயணிகள் மீண்டும் மீண்டும் அழைத்தபிறகு “என்ன வேண்டும்?” என்று முறைத்துக்கொண்டே கேட்பார்கள், தொந்திரவாகப் பார்ப்பார்கள்.

நமது பிரம்மாண்டமான பிரமிக்கவைக்கும் அழகிய விமானமாம் பூமி தற்போது சில வல்லரசு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, சீனா எனும் ஐந்து கடத்தல்காரர்கள் அழித்தொழிக்கும் அணுகுண்டுகள் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி, நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கும் இந்த அரிய அற்புதமான விமானத்தை கண நேரத்தில் தகர்க்க முடியும் என்றும், பயணிகள் அனைவரின் உடைமைகளையும், உயிர்களையும் அழிக்க முடியும் என்றும் மிரட்டுகின்றனர்.

இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, ஈரான் போன்ற சில பயணிகளும் கடத்தல்காரர்களுடன் கைகோர்த்து எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள், இந்த விமானக் கடத்தலில் உங்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி அந்த அக்கிரமக்காரர்களுடன் அணிவகுத்து நிற்கின்றனர். இந்தக் கடத்தல்காரர்களும், கையாட்களும் போட்டி, பொறாமை, அச்சம், வெறுப்பு போன்ற விழுமியங்களின் அடிப்படையில் ஆள்பவர்கள். இவர்கள் பயங்கரவாதிகள்!

இயற்கை, மாந்தநேயம் எனும் இரண்டு சிறந்த விமானிகள் விமானத்தை ஓட்டிக் கொண்டிருக்க, கடத்தல்காரர்களும், அவர்களின் கைத்தடிகளும் மிரட்டிக் கொண்டும், விரட்டிக் கொண்டும் செயல்படுகிறார்கள்.

விமானப் பயணிகளில் பெரும்பாலானோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றனர். பலர் எந்தவிதமானப் பொறுப்புணர்வும், கடமையுணர்வுமின்றி தன்னலத்தோடு தங்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் எங்கே இருக்கிறோம், என்ன நடக்கிறது என்கிற எந்த விழிப்புணர்வுமின்றி அறியாமையில் உழல்கின்றனர்.

விமானத்துக்குள் என்ன நடக்கிறது என்கிற அறிவும், தெளிவும், சமூக அக்கறையும் கொண்டவர்கள் தங்களால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனால் அருகில் இருப்பவர்களை வைத்து அவர்கள் மீது அவதூறுகள் பரப்புவதும், அவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதும் தொடர்ந்து நடக்கின்றன. அங்கீகரிக்காமை, அவதூறு சொல்லல், அடக்க–அழிக்க முயற்சித்தல் போன்ற அணுகுமுறைகளோடு அறிவு சீவிகள், எழுத்தாளர்கள், சமூகப் போராளிகள், செயல்பாட்டாளர்கள் புறந்தள்ளப்படுகின்றனர்.

அணுவாயுதங்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், அவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து உலக அரங்கில் ஒரு புதிய முன்னெடுப்பு நடக்கிறது.

ஒரு மணி நேரத்தில் 1,000 மைல் வேகத்தில் சுழன்று, ஒரு நாளில் 1.6 மில்லியன் மைல் தூரம் பயணிக்கும், தலைதெறிக்கும் வேகத்தில் வில்துறந்த அம்பாக வீறிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கும் நமது விமானத்துக்கு என்ன நடக்கப் போகிறது? அது அணுவாயுதக் கடத்தல்காரர்களால் நொறுக்கப்படுமா? அதன்மீது பயணிக்கும் பயணிகள் நாம் அனைவரும் அழித்தொழிக்கப்படுவோமா? நமது வருங்காலம் என்னவாகும்? நமது விமானத்தின் கதி நம் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கிறது!

சுப. உதயகுமாரன், பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். ஹிரோஷிமா நினைவு நாள் இன்று.

5 thoughts on “கடத்தப்பட்ட விமானம்: சுப. உதயகுமாரன்

  1. ப்ராஹ்மணனுக்கென்று ஒரு ப்ராஹ்மணஸ்தான் இல்லையே, அய்யகோ:

    இந்தியா பாக்கிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை தழுவியவர். ஆகையால், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தாய் மாமன், பெரியப்பா, சித்தப்பா உறவு இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.

    ப்ராஹ்மின் சகோதரா, ஆப்கானிஸ்தானிலிருந்து காந்தாரா சாம்ராஜ்யத்தை காந்தாரி ஆண்ட போது, அவளுக்கு கூஜா தூக்கி வர்ணதருமத்தை சொல்லிக்கொடுத்து அகண்டபாரதத்தை அடிமையாக்கினாய். கௌரவருக்கும் பாண்டவருக்கும் அடிவருடினாய். இன்று காந்தாரியின் பேரப்பிள்ளைகளெல்லாம் இஸ்லாத்தை தழுவி தாலிபான்களாக மாறிவிட்டனர். சிந்து நதியின் மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் மயங்கிக்கிடந்த பார்ப்பனரெல்லாம் முஸ்லிமாகி பாரதமாதாவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கிவிட்டனர்.

    தக்சசீல பல்கலைக்கழகத்தின் வேந்தனாக இருந்து ரிக் வேதத்தையும் அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினான் சாணக்கியன், இன்று அவனுடைய தக்சசீலம் இருப்பது பாக்கிஸ்தானில் என்பது தெரியுமா உனக்கு?. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரத்மாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் ப்ராஹ்மணர் என்பது தெரியுமா உனக்கு?. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் ப்ராஹ்மண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு?.

    காந்தியை போட்தள்ளிய ப்ராஹ்மின் கோட்சே தனது அஸ்தியை பாக்கிஸ்தானில் ஓடும் சிந்து நதியிலே கரைக்கச்சொல்லி உயில் எழுதியுள்ளார் என்பது தெரியுமா உனக்கு?. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்து பாடியுள்ளது தெரியுமா உனக்கு?. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் ப்ராஹ்மணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு?.

    “சூத்திரன் வேதத்தை தொட்டால் பழுத்த இரும்பை நாக்கிலே இழு. ஈயத்தை கரைத்து காதிலே ஊற்று” என்று மனுசாஸ்திரம் சொன்ன நீ, இன்று சூத்திரன் மோடிக்கு கூஜா தூக்குகிறாய். கூப்பிட்ட குரலுக்கு முந்தானை விரிக்கும் இன்டெலெக்சுவல் வப்பாட்டியாக மாறிவிட்டாயே, ஏன்?.

    இன்னோரு 5000 வருடங்களானாலும் உன்னால் ப்ராஹ்மணருக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கவே முடியாது. இன்று இட ஒதுக்கிட்டில் அவனவன் ஜாதி சான்றிதழ் வைத்துக்கொண்டு உனக்கு ஆப்படிக்கிறான். உன்னிடம் ஜாதி சான்றிதழ் இருக்கிறதா? இந்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடுகிறாய். அங்கே கிருத்துவரும் முசல்மானும் நீ வணங்கும் மாட்டை அறுத்து பிரியாணி சாப்பிடுகின்றனர். உனக்கு மிஞ்சியது மாட்டு மூத்திரம்தான்.

    130 கோடி மக்கள் தொகையில் பாரத்மாதாவுக்கு மூச்சு திணறுகிறது. இன்னொரு 5 வருடம் தாங்குமா என்பது கேள்விக்குறி. நாளை சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்தால், தமிழ்த்தேசம், தலித்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான் என்று அனைவரும் சேர்ந்து சங்கு ஊதிவிடுவார்கள். வெறும் நாலரை சதவீதமுள்ள உனக்கு என்ன கிடைக்கும்?. என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு என்று பஜனை பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்ய வேண்டியதுதான்.

    2500 வருடங்கள் காபாவிலே பூஜை புனஸ்காரம் செய்துகொண்டிருந்த உனது முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீயும் தழுவு. அகண்டபாரத்தில் வாழும் 75 கோடி முஸ்லிம்களூக்கு கலிபாவாக நீ தலைமையேற்கலாம். ப்ராஹ்மணஸ்தானை விடு. இஸ்லாமிஸ்தானுக்கு வா. உனக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்வழி காண்பிப்பானாக.

    Like

  2. வந்தால் ஆர்யவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு வரமாட்டேன்:
    (அமெரிக்காவில் வாழும் என்னுடைய ப்ராஹ்மின் நன்பர் சொன்னது)

    கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது எனது பிராமண இனம். ஐ.ஐ.டி போன்ற கல்விக்கோயில்களை கட்டி பாரத திருநாட்டை உலக அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்கவைத்தனர் எனது முன்னோர். ஒபாமாவிடம் போய், நீங்கள் அறிந்த மாபெரும் இந்தியர்கள் யார் என்று கேட்டால் “சர்.சிவி.ராமன், டாக்டர்.சந்திரசேகர், கனிதமேதை ராமானுஜம், ஆர்யபட்டா, ஓவியர் ரவி வர்மா, சிதார் ரவி சங்கர்” என்று சொல்வார். தேவர், வன்னியன், பள்ளன், பறையன், குப்பன், சுப்பன், கருப்பாயி மூக்காயி என்று சொல்லமாட்டார்.

    NASA, Microsoft, Google, SUN, Oracle, MIT, Stanford, Harvard என்று எங்கே சென்றாலும் உயர்ந்த பதவிகளில் தலைமையேற்று திறம்பட நடத்துகிறோம். அறிவியல், மருத்துவம், கலை, இயல், இசை, நாடகம் என்று அனைத்து துறைகளிலும் முத்திரைகளை பதித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளோம். இந்தியருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் கண்ணியத்தையும், கௌரவத்தையும் எங்களுடைய அயராத உழைப்பாலும் புத்தி கூர்மையாலும் வென்றுள்ளோம்.

    ஆனால் இன்று இடஒதுக்கீட்டில் எனக்கு இடமில்லை. எனது முன்னோர் கட்டிய கல்விக்கோவிலில் நுழைய எனக்கு அனுமதியில்லை. அங்கே சூத்திரன் அர்ச்சகனாகிவிட்டான், நான் தீண்டத்தகாதவனாகி விட்டேன். ஞானபீடங்கள் வாழும் இடத்திலே ஞானசூன்யங்கள் நுழைந்தால் உருப்படுமா?. பிழைக்க வழிதேடி அமெரிக்காவுக்கு அப்ளிகேசன் போட்டேன். எனக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்சிப் கொடுத்து வரச்சொன்னார்கள். நல்லதாய் போய்விட்டது. பஞ்சாயத்து ஆபிஸில் கணக்கர் வேலை கிடைத்தால் எனது பிறவிப்பயன் கிட்டிவிடும் என கனவு கண்ட நான், இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் சேர்மேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியருக்கு நான் வேலை தந்துள்ளேன். ஒவ்வொருவரும் என்னிடம் சொல்வது: “அய்யா நீங்க எனக்கு வேலை தந்திராவிட்டால், ஒன்று கோட்சேயாக மாறியிருப்பேன் அல்லது தூக்கிலே தொங்கியிருப்பேன்”.

    முடிவு செய்துவிட்டேன். இனி எனது பிறந்த மண்ணைக் காணவந்தால், ஆர்யவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு ஒரு போதும் வரமாட்டேன்.

    Like

  3. இந்தியாவுக்கு இஸ்லாத்தை கொண்டு வந்தது யார்? – ரிஷிமூலம் நதிமூலம்:

    இஸ்லாம் யாருக்கும் எதிரியல்ல. பார்ப்பன வர்ணதரும ஜாதியை விட்டு வெளியேறி வந்த பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர், தலித் ஆகிய அனைவரும் சமத்துவம் சகோதரத்துவத்துடன் வாழும் மார்க்கம்தான் இஸ்லாம். சொல்லப்போனால் காபாவில் 360 சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்த குரைஷி எனும் பிராமணர் குலத்தில்தான் அல்லாஹ் அண்ணல் நபியை(ஸல்) படைத்து சிலைவணக்கத்தை ஒழிக்க கட்டளையிட்டான்.

    பெருமானாரை 8 வயது முதல் 50 வயது வரை உயிருக்குயிராய் பாதுகாத்து வளர்த்தவர் அவருடைய பார்ப்பன பெரியப்பா அபுதாலிப். அவருடைய மரண தருவாயில், பெருமானார்(ஸல்) அவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மன்றாடுகிறார். அப்பொழுது “நான் விரும்பினாலோழிய இஸ்லாத்துக்கு யாரும் வரமுடியாது. உங்களுடைய கடமை எடுத்துச்சொல்வது. ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்” என அல்லாஹ் பெருமானாரை(ஸல்) கண்டித்தான்.

    இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு கலீபா உமர் காபாவில் 360 சிலைகளின் பெரிய பார்ப்பன பூசாரியாக இருந்தார். ஒரு நாள் “முஹம்மதின் தலையை கொய்து வருகிறேன்” என ஹுபால் சிலை மீது சத்தியம் செய்து உருவிய வாளுடன் கலீபா உமர் கிளம்பினார். செல்லும் வழியில், திருக்குரானின் வசனங்களை கேட்டு, கண்ணீர் வழிய உடல் நடுங்க பெருமானாரின்(ஸல்) கைகளைப் பற்றி இஸ்லாத்தை தழுவினார்.

    அண்ணல் நபியின்(ஸல்) முதல் எதிரி அவருடைய சொந்த பார்ப்பன பெரியப்பா அபு லஹபும், உறவினன் அபு ஜஹலும்தான். உலகிலேயே பெரிய செக்யூலர்வாதி பாப்பான் அபுஜஹல்தான். “நீங்கள் ஆறு மாதம் காபாவில் அல்லாஹ்வை வணங்கிக்கொள்ளுங்கள், ஆறு மாதம் நாங்கள் எங்களுடைய 360 சிலைகளை வணங்கிகொள்கிறோம். உங்களை அரேபியாவின் அரசனாக்குகிறோம். பொன்னும் பொருளும் உங்களுடைய காலடியில் வந்து கொட்டுகிறோம்” என காபிர்-முஸ்லிம் நல்லிணக்க சித்தாந்தத்தை பாப்பான் அபுஜஹல் பெருமானாரின் முன் வைத்தான். “ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும் நீ தந்தாலும் அல்லாஹ்வின் கட்டளையை நான் நிறைவேற்றாமல் போகமாட்டேன்” என அறிவித்து, காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்து நொறுக்கி அரேபியாவிலிருந்து பார்ப்பனியத்தை வேரறுத்தார் பெருமானார்.

    இஸ்லாத்தின் மாபெரும் கலீபாக்களான அபு பக்கர் சித்தீக், உமர், உஸ்மான், ஹஜ்ரத் அலி ஆகிய அனைவரும் காபாவில் 360 சிலைகளை வணங்கிய பார்ப்பன குலத்தில் பிறந்துதான் இஸ்லாத்தை தழுவி இஸ்லாத்தின் ஒப்பற்ற தலைவர்களாக மாறினர்.

    மெக்காவில் இஸ்லாத்தை தழுவிய ப்ராஹ்மின்ஸ்தான் இந்தியாவுக்கு இஸ்லாத்தை கொண்டு வந்தனர். காஷ்மீரில் (இந்தியா + பாக்கிஸ்தான்) வாழும் 2 கோடி முஸ்லிம்களும் பட், சவுத்ரி, ராவ், கசூரி, கேர், குரு போன்ற ப்ராஹ்மின் பண்டித ஜாதிப்பெயர்களை தாங்கி இன்றைக்கும் வாழ்கின்றனர். இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவியவர் காஷ்மீர், ஆப்கான், சிந்து, பாக்கிஸ்தான் ஆகிய இடங்களை ஒன்றாக இணைத்த “ஆரியவர்த்தா” எனும் ப்ராஹ்மின் சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த ப்ராஹ்மின்ஸ்தான் என்பது கண்கூடு.
    —————————————–

    அன்னை ஆய்ஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா?. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா …. என ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. (shaவையும் shahவையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம். shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். ஆண்பாலை குறிக்கும். sha என்றால் வேதமறிந்தவரென்று பொருள். ஆண் பெண் இருவருக்கும் பொதுவான பட்டம். shastry எனும் பெயர் ஆதாரம்).

    ஆகையால் ப்ராஹ்மின் சமுதாயம் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவி இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக மாற்றவேண்டும் என்பதே எங்களுடைய அழைப்பு. இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறினால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். வறுமை ஒழிந்து அமைதி மலரும். “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்” என்பதுதான் திருக்குரானின் அடிப்படை. அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.

    Like

  4. // ஒரு மணி நேரத்தில் 1,000 மைல் வேகத்தில் சுழன்று, ஒரு நாளில் 1.6 மில்லியன் மைல் தூரம் பயணிக்கும், தலைதெறிக்கும் வேகத்தில் வில்துறந்த அம்பாக வீறிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கும் நமது விமானத்துக்கு என்ன நடக்கப் போகிறது? அது அணுவாயுதக் கடத்தல்காரர்களால் நொறுக்கப்படுமா? அதன்மீது பயணிக்கும் பயணிகள் நாம் அனைவரும் அழித்தொழிக்கப்படுவோமா? நமது வருங்காலம் என்னவாகும்? நமது விமானத்தின் கதி நம் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கிறது! //
    ——————-

    கடத்தப்பட்ட விமானத்தை மீட்பது யார்?

    இந்து மதமும் கிருத்துவ மதமும் கடத்தப்பட்ட விமானங்கள். இதிலே இந்துக்களை ஜாதி எனும் பாதாள சாக்கடையிலும், கிருத்துவரை வழி தவறிய ஆடுகளாகவும் பாப்பானும், புனித பாப்பையாவும் அடக்கி வைத்துள்ளனர். இந்த அடிமைகளை மீட்டு அவர்களுக்கு சமநீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை தர வந்ததுதான் இஸ்லாம்.

    ஆம்.. கடத்தப்பட்ட விமனத்தை கடத்த வந்த கில்லாடிக்கு கில்லாடிதான் இஸ்லாம்.

    Like

  5. இயேசு கடவுளா?

    இயேசு: நான் கடவுள், எனை வணங்கு.

    மனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி?

    இயேசு: என்ன அத்தாட்சி வேண்டும்?

    மனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.

    இயேசு: ஹி..ஹி.. அது என்னிடமில்லை.. பரலோகத்தில் இருக்கும் என்னுடைய பரமபிதாவிடம் உள்ளது.

    மனிதன்: அப்படியானால் நீ யார்?

    இயேசு: நான் பிதாமகன்

    மனிதன்: உன்னுடைய தாய் யார்?

    இயேசு: புனித மேரி

    மனிதன்: உன்னுடைய தந்தை யார்?

    இயேசு: நானும் பிதாவும் ஒன்று

    மனிதன்: யோவ், அப்படியானால் உனது தாயும் மணைவியும் புனித மேரியா?. அயோக்கியனே!! நீயெல்லாம் ஒரு கடவுளா?.

    இயேசு: ஹி..ஹி.. நான் பரிசுத்த ஆவி.

    மனிதன்: போட் தள்றா இவன…

    கிருத்துவ சகோதரர்கள் மன்னிக்கவும். இயேசு ஒரு இறைத்தூதர், அவர் கடவுள் அல்ல என்று எப்படி உங்களுக்கு விளங்க வைப்பதென்று புரியவில்லை. வேறு வழி இல்லாமல் நெத்தியடி தரும் நிலை வந்துவிட்டது.

    மேலே சொல்லப்பட்டது இயேசுவுக்கு மட்டுமல்ல. ராமர், கிருஷ்ணர் என்று யார் தன்னை கடவுளாக அறிவித்திருந்தாலும் இதுதான் நடக்கும்.
    ————-

    கடவுள் மனித ரூபத்தில் வர மாட்டார் – திருக்குரான்:

    கடவுள்: நான் கடவுள், எனை வணங்கு.
    மனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி?
    கடவுள்: என்ன அத்தாட்சி வேண்டும்?
    மனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.

    கடவுள்: இந்த உலக வாழ்க்கை உனக்கு நான் வைக்கும் சோதனை. இந்த சோதனையில் வெற்றி பெற்றால் சொர்க்கம். உனக்கு சொர்க்கமா நரகமா என்பதை, நீ இறந்த பின்தான் முடிவு செய்யப்படும்.

    மனிதன்: அப்படியா.. இந்த உலகில் எனக்கு பில் கேட்ஸ் போன்ற வசதியும், எந்த கவலையுமில்லாத வாழ்க்கையும் கொடு.

    கடவுள்: அதை நீ உழைத்துதான் சம்பாதிக்க வேண்டும். கவலையில்லாத வாழ்க்கையை உனது அறிவால் நீ கண்டுபிடிக்க வேண்டும்.

    மனிதன்: அப்படியானால், நீ கடவுள் இல்லை. பொய் சொல்கிறாய்.

    கடவுள்: உனக்கு எனது விஸ்வரூபத்தை காட்டுகிறேன். பார்க்கிறாயா?.

    மனிதன்: அடுத்த வேளைக்கு உணவில்லை, படித்தால் வேலையில்லை, பிழைக்க வழியில்லை. உனது விஸ்வரூபத்தை வைத்து நாக்கு வழிக்கவா?. போயா போக்கத்தவனே… இவனெல்லாம் ஒரு கடவுளா?. அயோக்கியப் பயலுக….

    கடவுள்: ஙேஏஏஏஏஏஏஏஏஏ….
    —————————

    அல்லாஹ்வை ஏற்கவும் நிராகரிக்கவும் சுதந்திரத்தை, அல்லாஹ் மனிதனுக்கு தந்துள்ளான். இந்த உலக வாழ்க்கையின் சோதனை, “ஜிஹாத்” எனப்படும் அநீதிக்கெதிரான போராட்டமே என திருக்குரான் உரைக்கிறது.

    ஆகையால்தான் அல்லாஹ் மனிதனிடம் நேரடியாக வந்து “நான்தான் அல்லாஹ், எனை வணங்கு என சொல்லமாட்டான்” என திருக்குரான் உரைக்கிறது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.