ஹெச் ஜி ரசூல்
அவர் எப்படி பூனையை வாசிக்கலாம், சூறைப்புயல் கொளுத்தி விளாசிக்கொண்டிருந்தார். தொண்டரடி பொடியாழ்வார்களில் ஒருவன் தலைவரே அது பூனையை வாசிப்பதல்ல, வீணையை வாசிப்பது என்று சொல்லி முடிப்பதற்குள் சூறைப்புயல் சூஜே ஒரு போராட்டத்தை அறிவித்தார்…ஏவுகணை சிலையின் நெற்றியில் திருநீறைப் பூசும் போராட்டம் ..தொண்டர்கள் அதிர்ந்து போனார்கள்…
வெடிக்காத பட்டாசை வெடிக்க வச்சது யாரு – இதுதான் சூறைப் புயல் நேற்று பேசிய பொதுக்கூட்டத் தலைப்பு. தொண்டர்களின் ஆரவாரம் தாங்க முடியவில்லை. எங்க தலைவர் பத்துமணிநேரங்கூட நாண் ஸ்டாப்பா பதட்டமில்லாம பேசுவாரு. உங்களுக்கெல்லாம் பசிவந்து மாறி மாறி ஒருவரையொருவர் தின்னுவிடக்கூடாதேன்னுதான் எங்கத் தலைவர் பட்டுன்னு முடிச்சாரு. மற்றொரு தொண்டரடிப் பொடியாழ்வார் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
தலைமையகத்தில் பெருங்கூட்டம். பொதுக்கூட்டத்தில் பேசாத அதிரடி விசயத்த தலைவர் அறிவிக்கப் போறதா மைக்குல அறிவிச்சுகிட்டு இருந்தாங்க. நெட்டு பூராவும் ஒரே பேச்சுதான். எங்க கொள்கையை தடை செய்தா உலகத்துல ஒம்பது இடத்துல இடிவிழும் என முழங்கிக் கொண்டிருந்த சூறைப்புயல் சூஜே மாண்புமிகு நோடியாருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டக்கூடாதுன்னு ஆணை போட்டதுதான் எல்லோருக்கும் ஆச்சரியம்..
இப்போது என்னான்னா இட்துசாரிங்க தலித்துக, முற்போக்குக எல்லாரும் ஏவுகணை சிலையை காவியா மாத்தினதுக்கு கண்டனம் தெரிவிச்சுகிட்டு இருக்கும் போது மண்புமிகு நோடியார் ஏவுகணைசிலையை சரியாத்தான் வச்சிருக்காரு..நாங்க நோடியாருக்கு வலுசேர்க்க ஏவுகணை சிலை நெத்தியில் திருநீறு பூசும் போராட்டத்தை என் தலைமையிலே செய்யப்போறோம்னு சூறைப்புயல் அறிவிச்சாரு
சர்வதேச அளவில ஆட்சியைப் புடிக்கப் போகும் சூறைப்புயல் சூஜே கட்சிக்கு மாண்புமிகு நோடியார்தடை போட்டா கோடிக்கணக்கான டிரஸ்ட்டும் சொத்தும் பணமும் என்ன ஆவது? சூறைப்புயல் சூஜே கறுப்புக் கொடி காட்டாமல் வெள்ளைக்கொடி காட்ட தொண்டர்களை அழைத்ததிலேயே நூத்தி முப்பத்து ஒம்பது பொடியாழ்வார்கள் கட்சிக் கார்டை திருப்பிக் கொடுத்தாங்க
அசத்தியம் சேனலுக்கு சூறைப்புயல் சூஜே பேட்டிக் கொடுக்கப்போற விசயம் மிக பரபரப்பாக இருந்தது.
விசயம் வேறு ஒண்ணுமில்ல.. முந்தாநாள் ராத்திரி ரெண்டுமணிக்கு தூக்கத்தில இருந்து விழிச்ச பல்தாபி பக்கர் எல்லா நியூஸ்சேனலுக்கும் ஒரு அறிவிப்பை கொடுத்திருக்காரு.
பத்து முட்டையை போட்டா நாங்க அந்த காவிக் கோழியை ஆதரிப்போம்…வேணும்னா பாவம்பார்த்து திரும்பவும் ஆட்சியில அமர்த்துவோம்…இந்த முன்னோட்டத்தை கேட்டதும்தான் கலவரம் ஆரம்பிச்சிட்டுது.சூறைப் புயல் சூஜே கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. பல கட்சிக்கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பல்தாபிக்கு பீஸை புடுங்குனதால எரியாத லைட்டா ஆயிட்டாரு..
அன்றிலிருந்து சூறைப்புயல் சூஜே கூட ஆவேசம் மேலிட எதையும் பேசுவதுமில்லை. பேட்டிக் கொடுப்பதுமில்லை. ஆள் இருக்கும் இடமே தெரியாம போச்சு. என்றாலும் அவரது இப்போதைய ஒரே நோக்கம் பர்க் ஒழிப்பு போராட்டம்தான்…..கூடவே ஏவுகணை நெத்தியில திருநீறு பூசும் முஸ்லிம் அழிப்பு போராட்டம்….சூஜே..சூஜேதான்…
ஹெச். ஜி. ரசூல், கவிஞர்; விமர்சகர். மைலாஞ்சி, உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள், பூட்டிய அறைஉள்ளிட்ட ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. பல முக்கிய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மற்றும் மலாயா மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.இஸ்லாமியப் பெண்ணியம், தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல், சூபி விளிம்பின் குரல், ஜிகாதி பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன..
முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு முனாபிக் செத்து போனான். காபிரை விட மோசமானவன் முனாபிக் என பெருமானார்(ஸல்) அறிவித்தார்.
LikeLike
// அவர் எப்படி பூனையை வாசிக்கலாம், சூறைப்புயல் கொளுத்தி விளாசிக்கொண்டிருந்தார். //
————–
என்ன தமிழ் எழுதுகிறான் இவன்?. சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து நீட்டி முழக்கி… எங்கேருந்து இவன தேடி கண்டுபுடிச்சீங்க?. ஒரு லூசுப்பய செத்து போய்ட்டான்… அவன கப்ரஸ்தான்ல பொதச்சாங்களா இல்ல வாய்ல தர்பைய வச்சு கொளுத்துனாங்களா என்பதை கேட்டு சொல்லவும்.
LikeLike