அரசியல் களத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்பார்: விஜயகாந்த் பேட்டி!

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே அரசியலில் ஒதுங்கியிருந்த , இந்த பேட்டியின்போது தீவிர அரசியல் பேசியது மட்டுமல்லாது, தோற்றத்திலும் புதுப்பொலிவுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த பேட்டியிலிருந்த சில கேள்விகளின் தமிழாக்கம் இங்கே.

******************

கேள்வி: அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று திமுக சொல்லியதைப்போல, செயலில் கட்டமுடியவில்லை என்று நினைக்கிறீர்களா ?

பதில்: இந்த அதிமுக அரசு தானாகவே கவிழும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த தினத்தில், சபாநாயகரை தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்கள் திமுகவினர். இதனால் என்ன நடந்துவிடும் ? காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் என்று பார்த்தால் கூட கிட்டத்தட்ட 100  எம்எல்ஏக்களை வைத்திருந்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுவே அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் சூழலளாக இருந்திருந்தால், அவர் கண்டிப்பாக  ஏதாவது செய்திருப்பார். அரசியலில் இருந்து கருணாநிதி ஒதுங்கியிருப்பதால் அக்கட்சி தள்ளாடி வருகிறது. ஸ்டாலின் செயல்தலைவராகத் தானே இருக்கிறார் கட்சிக்கு. இன்னமும் தலைவராகவே இல்லையே ? அவரும் பல இடங்களுக்கு தினமும் சென்று, தனக்கும் மக்கள் செல்வாக்கு இருப்பதாக காண்பித்துக்கொள்கிறார்.

கருணாநிதி அடிக்கடி சொல்வார்.”திமுகவுக்கு கூட்டம் வருகிறது. ஆனால் வாக்குகள் எல்லாம் எம்ஜிஆருக்கு போய்விடுகிறது” என்று. அதே போலத்தான் இதையும் பார்க்கிறேன்.


கேள்வி: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலை எப்படி பார்க்கிறீர்கள் ?

பதில்: எந்தக்காலத்திலும் இருந்ததை விட மிக மிக மோசமான நிலையில் தமிழக அரசியல் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆட்சியை தக்க வைப்பதற்கே போராடுகின்றனர். ஸ்டாலினோ அல்லது ஒபிஎஸ்ஸோ யாருமே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவது குறித்து யோசிப்பதேயில்லை. மறுபடியும் சொல்கிறேன்.. “கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தார் என்றால் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பி இருப்பார்”


கேள்வி : திரைத்துறைக்கு வருவோம். ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சு அடிபடுகிறதே ?

பதில்: ரஜினிகாந்த் அது பற்றி பேசிக்கொண்டேதான் இருப்பார் (சிரிக்கிறார்). ஒரே என்னுடைய அரசியல் ப்ரவேசதிற்காக வாழ்த்தியதுடன் “நேரத்தில் இரட்டை குதிரை சவாரி என்பது மிகக்கடினமான ஒன்று” என  ரஜினி கூறினார். கமல்ஹாசனும் நேரடி அரசியலுக்கு வரமாட்டார். இருந்தாலும், ஊழலை பற்றிக் கேள்வி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. இந்த அரசாங்கம் முழுவதும் ஊழலில்தான் திளைக்கிறது.


பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.