கே. ஏ. பத்மஜா

காமராஜர் முதலமைச்சராய் இருந்த காலகட்டத்தில்தான் முதன்முதலில் தமிழகத்தில் “மதிய உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதன் பலனாக, வறுமையில் இருக்கும் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வேளையாவது நல்ல உணவு கிடைக்கும் என்ற ரீதியில் பள்ளிக்கு அனுப்ப முன்வந்தனர். பல குடும்பங்களில் இருந்த குழந்தைத் தொழிலாளிகள் படிக்க அனுப்பப்பட்டனர். இதன்மூலம் பள்ளிக்கு படிக்கவந்த பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதுவே இந்தத் திட்டத்தின் வெற்றியுமாகும்.
பின், குழந்தைகளை வெளியூரில் உறைவிட பள்ளிக்கு அனுப்பும்போது தினம் வீட்டிற்கு வரமுடியாத காரணத்தால் அங்கேயே தங்கி படிக்கும் நிலையில், அவர்களுக்கு பள்ளியில் உணவும், உறைவிடமும் வழங்கப்பட்டது.
ஆனால், இன்று பல கொழுத்த தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து பணத்தை கறக்க பல புதுப்புது உத்திகளை கையாளுகின்றன. தனியார் பள்ளிகள் கற்பித்தலின் தரத்தை உயர்த்தி அதிக கட்டணம் வாங்காமல் பள்ளிக்குள் பல சொகுசு வசதிகளை செய்து கொடுத்து, அதன் மூலம் அதிகக் கட்டணம் – அதிக லாபம் என்ற உத்தியை கையாளுகின்றனர். அதில் ஒன்று, தனியார் பள்ளிகளிலும் கூட மதிய உணவு வழங்கபடுத்தல். ஒருவேளை பெரும் நகரங்களில் பள்ளிக்கும் வீட்டிற்கும் பல கிலோமீட்டர் தொலைவு, அதிகாலை ஆறு – ஏழு மணிக்கு பள்ளி வாகனத்தில் ஏற வேண்டிய கட்டாயம் எல்லாம் இருக்கும் பட்சத்தில் பள்ளியிலேயே மதிய உணவு வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது. ஆனால் பத்து பதினைந்து கிலோ மீட்டர் மட்டுமே ஊரின் மொத்த பரப்பளவு என்று இருக்கும் குறுநகரங்களில் பள்ளிகளுக்கு பேருந்தில் செல்லவேண்டிய அவசியம் கூட இல்லாத பட்சத்தில், பெருநகரங்களை பார்த்து சூடு போட்டுக்கொள்வதை போல குறுநகரங்களில் இருக்கும் தனியார் பள்ளிகள் கூட மதிய உணவு வழங்குகிறோம் என்று அதற்கும் தனிக் கட்டணம் வசூலிக்கபடுகிறது. உண்மையில் இப்படி குறுநகரங்களில் இதன் தேவை இருக்கிறதா? இல்லையா? என்று கூட உணராமல் விளம்பரப்படுத்தும் பள்ளிகள், அதுவே சிறந்தப் பள்ளி என நினைத்து அதை பெற்றோர் வரவேற்கின்றனர்.
ஏன் இது அவசியமற்றது என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், முதலில் முன்பு எட்டு, பத்து குழந்தைகள் ஒரு வீட்டில் இருப்பதால் அனைவருக்கும் உணவு வழங்க முடியாத பட்சத்தில் தங்கள் குழந்தைகள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு கொள்வது என்பது வறுமையில் இருக்கும் பெற்றோருக்கு ஒரு திருப்தியை தந்தது. ஆனால், இன்றோ ஒரு வீட்டிற்கே ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும்தான்; அவர்களும் வீட்டில் மதிய உணவு சாப்பிட மாட்டார்கள் என்றால், தனக்கும் தன் கணவருக்கும் மட்டும் சமையல்; அதிலும் வேலை விஷயமாய் கணவன் அடிக்கடி வெளியூர் செல்லும் பட்சத்தில் தனக்கு மட்டும் சமைப்பதில் பெண்கள் சலிப்படைவர். ஏதோ ஒன்று இருப்பதைச் சாப்பிடும் பழக்கம் வரும் பட்சத்தில், நாளடைவில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இதை அந்த பெண் உட்பட அனைவரும் கவனிக்க மறந்திடுவர்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சமையல் பக்குவம் இருக்கும். அந்தத் தாய்கும், குழந்தைக்கும் உணவு சார்ந்த விஷயத்தில் ஒரு பரஸ்பர புரிதல் இருக்கும். மதிய உணவு இடைவேளை என்பது உணவு சார்ந்த ஒரு ஆர்வத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கும். பிற பிள்ளைகளுடன் தன் வீட்டு உணவை பகிரும்போது நண்பர்களுக்குள் நெருக்கம் அதிகப்படும். அனைவர் தட்டிலும் ஒரே மாதிரி, ஒரே சுவையில் உணவு என்பது மதிய உணவை ஒரு வேளையை போல தான் முடிக்க வேண்டும் என்ற சலிப்பை நாளடைவில் கொடுக்கும்.
குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை கூட்டிக், குறைத்து சரியான கண்காணிப்பில் ஒரு தாயால் கொடுக்க இயலும். சில நேரங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று இருக்கும் நாட்களில் மனம் தானாய் வீட்டு உணவிற்கு எங்கும். தன் பிள்ளைக்கு தான் எதுவும் செய்து கொடுப்பதில்லை என்ற குற்ற உணர்வில் அதிக நொறுக்குதீனி செய்து கொடுக்கும் பழக்கம் பெற்றோரிடம் உருவாக வாய்ப்பு உள்ளது.
பிழைப்புத் தேடி வெளியூர் செல்லும்போது அங்கு மெஸ்சில் மதிய உணவு சாப்பிடுவது என்பது விதி அல்லது தலையெழுத்து. ஆனால் எல்லா வசதிகளும் இருந்தும், குழந்தை கை எட்டும் தூரத்தில் இருக்கும்போது கூட இப்படி குறுநகரங்களில் கூட மதிய உணவை பள்ளியே வழங்கி, அதற்கு என ஒரு கட்டணம் வசூலித்து பணம் சம்பாதிக்க பெற்றோராகிய நாமே ஒத்துழைப்பது எங்கோ ஆரோக்கியம், வசதி என்ற பெயரில் தேய்ந்துக்கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து இப்படி பள்ளிகள் இதை கொடுக்கிறோம் அதை கொடுக்கிறோம் என்று விளம்பர படுத்துவதன் விளைவு இரண்டு வயது குழந்தையை பிளே ஸ்கூலில் சேர்க்க வரும் பெற்றோர்கள் கூட நீங்களே ஸ்னாக்ஸ், லஞ்ச், பால் எல்லாம் நீங்களே கொடுப்பீங்களா என்று தாங்களே பள்ளியிடம் கேட்கும் நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
ஒருவேளை இனி வரும் காலங்களில் மாணவர்களின் ‘சீருடைகளை கூட பள்ளியே துவைத்து கொடுக்கும் திட்டம்’ கொண்டு வந்தால் கூட அதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.
கே. ஏ. பத்மஜா, பத்தியாளர்.
பார்ப்பன அறிவுஜீவிகளுக்கு கல்விப்பிச்சை வழங்கிய சர் சையத் அகமத் கான் சாஹெப்.
—————————
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் — இந்தியாவின் முதலாவது கல்வி நிறுவனம்:
இந்திய நாட்டை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது ஆங்கில மொழியைக் கற்கலாமா? அது இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையல்லவா? என்ற ஐயம் எண்ணற்ற முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்தது. மேற்கத்திய கல்வித்திணிப்பு தங்களைக் கிருத்தவர்களாக மாற்றவே என இஸ்லாமியர்கள் பயந்தனர்.
இதே போன்ற அச்சம் இந்து சமயத்தவருக்கும் இருந்தது. “எவர் தன் குழந்தைகளை மிஷனரி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களோ அவர்கள் சாதியைவிட்டு ஒதுக்கப் படுவார்கள்” என்ற அறிவிப்பு அக்கால நாளிதழ்களில் வெளியிடப்பட்டன.
இத்தகைய நிலைமையை கவனத்தில் கொண்டு பரிசீலித்தால்தான் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் தேவையும் தன்மையும் விளங்கும். முஸ்லிம் சமுதாயத்தினரின் அச்சமும் ஐயமும் கலந்த கேள்விகளுக்கு சர் சையது அகமது கான் அளித்த பதில் வித்தியாசமானது.
“இஸ்லாமிய மதச்சட்டங்கள் பிறமொழிகளுக்கு எதிரியல்ல. நாம் எந்த மொழியையும் பயிலலாம். இஸ்லாத்தை சாராத பாரசீக மொழியை நாம் பலகாலமாக ஏற்கனவே பயின்றுள்ளோம். எனவே ஆங்கில மொழி பயிலுதல் இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டதே” என்றார்.
அதே வேளையில் ஆங்கில மொழி கல்விக்கான வரம்பு என்ன என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். “இந்தியர்களின் வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியை மட்டுமே ஆங்கில அரசு கொடுத்து வருகிறது. இத்தகைய கல்வித்திட்டம், இந்தியர்களை, நம்பிக்கையுள்ள அரசு வேலைக்காரர்களாக மட்டும் மாற்றுமே தவிர, அவர்களை அறிவாளிகளாக வளர்க்காது. உண்மையான கல்வியின் பயனானது மனிதனின் அறிவுக் கண்ணைத் திறந்து அறிவையும் ஒழுக்கத்தையும் இணைத்து ஒழுக்கமான அறிவுஜீவியாக மாற்றியமைப்பதாகும்” என்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் சையது அகமதுகான்.
ஆங்கில வழிக்கல்வி குறித்து இவ்வளவு தெளிவான பார்வை கொண்டிருந்த சையது அகமதுகான்தான் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நிறுவனர். 1817ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று பிறந்த இவர் தன்னிடம் இருந்த பெருஞ் செல்வத்தால் இதை உருவாக்கவில்லை.
1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கிளர்ச்சியின்போது அவரது வாழ்க்கை நிலையும் மனநிலையும் எப்படி இருந்தது என்பதை அவரது வார்த்தைகளிலேயே காணலாம்.
1857 – இல் ஏற்பட்ட கிளர்ச்சிக்குப் பின் சூரையாடப்பட்ட என் வீடோ சொத்தோ என்னுள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்னை நொடிய வைத்ததெல்லாம் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட, கொடுமையும் அழிவும்தான். இனியும் நான் இந்தியாவில் இருக்க விரும்பவில்லை என்றேன். அதுதான் உண்மையும் கூட…!
இந்த மனச்சோர்வு என்னை முதியவனாக்கித் தலை முடியை வெளுக்கச் செய்தது. முராதாபாத் அடைந்த போது, எங்கும் அழிவின் சின்னங்களே காணப்பட்டன. பசியும் பட்டினியுமாய் அலையும் மக்கள் மட்டுமே தென்பட்டனர். எல்லோர் முகத்திலும் கவலையின் கோடுகள்;
வர்ணிக்க இயலாத இந்தக் கோரக் காட்சிகள் என்னை உலுக்கின. ‘எங்கே போகப் போகிறாய்’ ‘எங்கு சென்று ஒளிந்து கொள்ளப் போகிறாய்’ என மனம் என் உயிரைப் பிழிந்தது. ‘இல்லை நான் போக மாட்டேன்’ எங்கும் போகமாட்டேன். வாழ்விழந்த என் மக்களின் மனதைச் சிறுகசிறுகத் தேற்றப் போகிறேன்’ என என் மனசாட்சி பலம் கொண்ட மட்டும் கதறியது. இதனால் இந்தியாவைவிட்டு வேற்று நாட்டில் குடியேறும் எண்ணத்தை நான் கைவிட்டேன். ‘இந்த மண்ணிலேதான் ஆயுள் முழுவதும் வாழ்ந்து மீளா நித்திரைக்குச் செல்வேன்’ என்று மனதின் மூலையில் ஒர் அசுர பலத்துடன் நம்பிக்கை குரல் ஒலித்தது. நான் நிமிர்ந்து நின்றேன்.
இப்படி நிமிர்ந்து நின்றவர்தான் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கென ஒருபல்கலைக்கழகத்தைத் தோற்றுவிக்க விரும்பினார். இதற்காக ஊரெங்கும் அலைந்து திரிந்து நிதி திரட்டி னார். இப்படி திரட்டப்பட்ட நிதியில் இருந்துதான் மொகமதன் ஆங்கிலோ ஒரியண்டல் (MAO) கல்லூரி 1875 ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி அலிகரில் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முதல் நவீனக் கல்வி நிறுவனம் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். இந்தக் கல்லூரிதான் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாறியது.
ஆங்கில வழிக்கல்வி கற்கலாம் என்று இதன் நிறுவனர் சையத் அகமது கான் கூறினாலும் தாய் மொழிக் கல்வியே சரியானது என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழியாக்கம் செய்ய ஊக்கமளித்தார். இந்தியாவிலேயே இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் ஒரே நூலகமாக விளங்குகிறது இங்குள்ள மௌலானா ஆசாத் நூலகம் என்பது வியப்புக்குரிய தகவல் அல்லவா?
இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தனியாக இயங்குவது சிறப்புக்குரியது.
இஸ்லாமிய சமூகத்து இளைய தலைமுறையை நவீன காலத்துக்குத் தயார்படுத்த பல்கலைக்கழகக் கனவுடன் கல்லூரியைத் தொடங்கிய சையது அகமது கான் 1898 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று மறைந்தார்.
அவர் செய்து முடிக்க எண்ணியப் பணிகள் ஏராளம், என்றாலும் எதார்த்தம் என்ன என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். “மறையும் சூரியனின் கதிர்களை இழுத்துப் பிடித்துப் பகலை நீட்டிக்கவும், காலையில் உதிக்கும் சூரியனின் கதிர்களைக் கட்டிப்போட்டு இரவை நீட்டிக்கவும் இயலாதவனாய் நான் உள்ளேன்” என்று வாழ்நாளின் போதாமையை அவர் நாசூக்காகத் தெரிவித்தார். காலம் அவரைத் தன்வயப்படுத்திக் கொண்டது.
ஆனாலும் அவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட கல்லூரி என்பது பல்கலைக்கழகமாகி தற்போது 30 ஆயிரம் மாணவர்கள் 1700 ஆசிரியர்களுடன் (இவர்களில் 30 சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்) செயல்படுவது முயற்சிக்குக்கிடைத்த வெற்றி எனலாம்.
பிற்காலத்தில் பாக்கிஸ்தானை உருவாக்கிய இஸ்லாமிய அறிவுஜீவிகள், அலிகார் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தகது.
நன்றி: தீக்கதிர்
LikeLike
மௌலான அபுல் கலாம் ஆசாத் – ஐ.ஐ.டி’யை (IIT) வடிவமைத்து இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த நவீன கல்வியின் சிற்பி!
இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய இஸ்லாமிய அறிஞருமான ஆசாத்’தான் இந்திய உயர்கல்வி நிலையமான ஐ.ஐ.டி. நிறுவியவர் என்பது பலரும் அறியாத அல்லது பொதுவில் சொல்லப்படாத செய்தி.
ஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற பார்ப்பனரால் இந்த கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லப்பட வேண்டும்.
இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்டு இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.
ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத, இன,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும், 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார். தமிழகத்தில் காமராசரின் இலவச கல்வித்திட்டத்துக்கு வழிவகுத்தவர் அபுல் கலாம் ஆசாத் எனும் உண்மை இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
கடைசி வரை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டுவிடக்கூடாது என மிகவும் பாடுபட்டவர் திரு.ஆசாத் அவர்கள். திரு.ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக திரு.ஆசாத் பலமுறை வலியுறுத்திப்பேசி பிறகு ஜின்னாவின் மனதையும் மாற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டபோதிலும், திரு.நேரு அவசரப்பட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக ஜின்னா மீண்டும் மனம் மாற நேரிட்டது.
தோற்றம் 11.11. 1888 – மறைவு 22.2.1958:
1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், ஆலியாவுக்கும் மகனாக, மெக்காவில், மௌலானா அபுல் கலாம் முஹையுத்தின் அகமது (அபுல் கலாம் ஆசாத்) பிறந்தார். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு “சொல்லின் செல்வர்” என்று பொருள். பரவலாக இவர் மௌலானா ஆசாத் (விடுதலை) என அறியப்படுகிறார்.
10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய இஸ்லாமிய தலைவர்களில் முதன்மையானவர்.
இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.
1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.
He re-organized the All India Council for Technical Education (AICTE) and saw the establishment of a host of institutions of education and cultural significance including:
Kharagpur Institute of Higher Technology (IIT-K),
University Grants Commission (UGC),
Indian Council for Cultural Relations (ICCR),
Council for Scientific and Industrial Research (CSIR),
Indian Council for Social Sciences Research.
India Institute of Science, Bangalore.
National Institute of Basic Education,
Central Bureau of Textbook Research,
National Board of Audiovisual Education,
Hindi Shiksha Samiti,
Board of Scientific Terminology for Hindi,
Sangeet Natak Academy,
Lalit Kala Academy and
Sahitya Academy
LikeLike
காயிதே ஆஸமுக்கும் காயிதே மில்லத்துக்கும் என்ன உறவு?:
காயித் என்றால் அரபி, உர்து மொழியில் வழிகாட்டி, தலைவர் என்று பொருள். காயிதே மில்லத் என்றால் “மக்கள் தலைவர்” என்று பொருள். காயிதே ஆஸம் என்றால் “மாபெரும் தலைவர்” என்று பொருள்.
பாக்கிஸ்தானின் தேசத்தந்தை முஹம்மத் அலி ஜின்னா சாஹெப் அவர்கள் “காயிதே ஆஸம் ஜின்னா சாஹெப்” என இந்தியா பாக்கிஸ்தானில் வாழும் 60 கோடி முஸ்லிம்களால் மதிக்கப்படுகிறார். தமிழகம் மற்றும் தென்னிந்திய முஸ்லிம்களால், கண்ணியத்துக்குரிய முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் “காயிதே மில்லத்” என மதிக்கப்படுகிறார்.
முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் அவர்களுக்கு “காயிதே மில்லத்” எனும் கௌரவப்பட்டம் ஏன் எதற்காக யாரால் தரப்பட்டது என்பதை பார்ப்போம்.
பார்ப்பனீயத்தை மண்டியிட வைத்து, பாக்கிஸ்தான் எனும் நாட்டை உருவாக்கிய இஸ்லாமிய அறிஞர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் அரசியல் சக்திதான் முஸ்லீம் லீக் கட்சி. இவர்களில் பெரும்பாலோர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக கல்விப்பாசறையில் படித்து பட்டம் பெற்றவர்.
1947ல் பாக்கிஸ்தான் சுதந்திரமடைந்த போது, முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக காயிதே ஆஸம் ஜின்னா சாஹெப் இருந்தார். பிறகு 1948ல் கராச்சியில், முஸ்லிம் லீக் கட்சியின் கடைசி பொதுக்குழு மீட்டிங் நடந்தது. அன்று இனி இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு யார் தலைவரென விவாதிக்கப்பட்டது. கடைசியில், இந்திய முஸ்லிம்களை வழி நடத்த தகுதியான தலைவர் கண்ணியத்துக்குரிய முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் அவர்களே என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு, முஸ்லிம் லீக் பொதுக்குழுவால் “காயிதே மில்லத்” என முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் கௌரவிக்கப்பட்டார்.
அவரை “கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்” என கௌரவித்தவர் அறிஞர் அண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாவுடன் சேர்ந்து தி.மு.க’வை உருவாக்கியதில்,காயிதே மில்லத்தின் பங்கு அளப்பரியது என்பதை கலைஞர் தி.மு.க வரலாற்று இலக்கியத்தில் பதிந்துள்ளார்.
LikeLike
கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சாஹெப்:
பிறப்பு: 5 June 1896
இறப்பு: 4 April 1972 (aged 75)
—————–
ஜனாப் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப், இந்தியாவின் மாபெரும் இஸ்லாமிய தலைவர்களுள் ஒருவர்.
திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் 5 June 1896ல் பிறந்தவர்.
காயிதே என்றால் வழிகாட்டி, தலைவர் என்று பொருள். காயிதே மில்லத் என்ற அரபி சொல்லுக்கு ‘மக்களின் தலைவர், வழிகாட்டி’ என்று பொருள். காயிதே ஆஸம் என்றால் “மாபெரும் தலைவர், வழிகாட்டி’ என்று பொருள் .
அரசியல் சமூக வாழ்க்கையில் அப்பழுக்கற்ற தலைவராகத் திகழ்ந்த காயிதே மில்லத், முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக இருந்த போதும் அனைத்து கட்சியினர் மற்றும் இனமக்களின் அபிமானத்தை பெற்றிருந்தார். மோசமான களம் எனப்படும் அரசியலில் முழு வீச்சோடு இருந்தும் கண்ணியவானாக விளங்கினார். ஆகையால்தான் கண்ணியத்துக்குரிய என்கிற அடைமொழியோடே இன்றும் அனைவராலும் நினைவு கூறப்படுகிறார்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு காந்திஜியின் தலைமையின் கீழ் ஒத்துழையாமை இயக்கம் கண்டவர் காயிதே மில்லத். திருச்சி ஜோசப் கல்லூரியில் பயின்ற காயிதேமில்லத், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்திஜியின் அழைப்பை ஏற்று, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூலம் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றிக் காட்டினார்.
அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.
——————————–
அன்றைய சென்னை ராஜதானி (மாகாண) சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் காயிதே மில்லத் பொறுப்புக்கள் வகித்தார்.
1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.
1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.
——————–
“இந்தியா எங்கள் தாய் நாடு. இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்” என அதிக எண்ணிக்கையில் (60 சதவீதத்துக்கு மேல்) முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால் முஸ்லிம் லீக்கை ‘இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்’ என்று மாற்றினார். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது.
1947 விடுதலைக்கு முன்பு வரை, முஸ்லிம் லீக் தலைவராக பாக்கிஸ்தானின் தேசதந்தை காயிதே ஆஸம் முஹம்மத் அலி ஜின்னா சாஹிப் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க தமிழே அதிகத் தகுதிவாய்ந்தது என்று நாடாளுமன்றத்தில் காயிதேமில்லத் முழங்கினார். பாக்கிஸ்தான் பிரிவினைக்குப்பின்னர், 1947ல் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பங்காக அளித்த சுமார் 17 இலட்ச ரூபாய் தொகையை காயிதேமில்லத் ‘தேவையில்லை’ என மறுத்துவிட்டார்.
தான் பணிபுரிந்த ஜமால்முஹம்மது நிறுவனத்திலேயே நிர்வாகப் பங்குதாரராக உயர்ந்த காயிதேமில்லத், தனது சொத்துக்களை சமுதாயத்திற்கு வாரிவழங்கிய வள்ளலாகவும் திகழ்ந்தார்.
அரசியல் நுணுக்கங்களை நன்கு அறிந்து, கொள்கையை விட்டுக்கொடுக்காமல், நெருக்கடிகளின்போதும் தளராமல், பொய்யான புகழுரை, பிம்பங்களுக்கு மயங்காமல் சமூக நலனுக்காகவே தம்மை அர்ப்பணித்த நல்ல அரசியல் தலைவரான காயிதே மில்லத், ஒழுக்க விழுமம் சார்ந்து அரசியல் களப்பணி செய்ய விரும்பும் இன்றைய அரசியல் இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி என்றால் மிகையில்லை.
—————–
இஸ்மாயில் சாஹிப்பின் இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-
“தனது 50 ஆண்டு கால வாழ்வில் இஸ்லாமிய பெருமக்களுக்காக உழைத்து பொற்காலமாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல – இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்லாமிய சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது. எங்கள் அண்ணாவின் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்.”
கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராஹிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.
கடுமையான உடல் நலக்குறைவால், தந்தை பெரியாரால் இரங்கல் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை.
இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள். டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர்களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.
LikeLike