“பன்றி” யார்? : பகுதி -2

ப.ஜெயசீலன்

வாசகசாலை மற்றும் திரைக்களம் இணைந்து நல்ல திரைப்படங்கள் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள். மிக முக்கியமான, மிக பாராட்டுதலுக்கு உரிய இந்த முன்னெடுப்பை அவர்கள் செய்து வருவதின் ஒரு பகுதியாக திரு. நாகராஜ் மஞ்சுளே இயக்கிய மராத்திய படங்களான FANDRY மற்றும் SAIRAT குறித்து அவர்கள் ஒருங்கிணைத்துத்திருந்த உரையாடல் நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இதற்க்கு முன்பு ஒருங்கிணைத்த DJANGO பற்றிய கலந்துரையாடலின் போதே இவர்கள் எதன் அடிப்படையில் சிறப்பு விருந்தினர்களை தேர்வு செய்கிறார்கள் என்கின்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்வி FANDRY மற்றும் SAIRAT குறித்தான கலந்துரையாடலில் திரு வசந்தபாலன் பேச தொடங்கியபோது(அவர் பேசியதையும், கேள்விபதிலில் அவர் பேசியதையும் நீங்கள் கேட்க முயற்சி செய்யவும்) ஒயாமல் எனது மனதில் ஒலித்து கொண்டே இருந்தது.

அவர் பேசிய கருத்துக்களை மூன்று பகுதியாக பிரிக்கலாம்.
1) தலித்துகள் யார்
2) நிஜமான தலித் சினிமா என்பது என்ன
3) தலித்துகளுக்கு ஆலோசனை மற்றும் எழுச்சி கொள்ள ஊக்கமூட்டல்

அவர்பேசிய அந்த விஷயங்கள் அறிந்தோ அறியாமலோ தலித் விரோத சிந்தனையை/புரிதலை/காழ்ப்புணர்ச்சியை கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியதால்தான் தான் இந்த கட்டுரை. அவர் பேசத்தொடங்கியுவுடன் இந்தியாவில் சமகாலத்தில் வந்த திரைப்படங்களில் FANDRY, COURT மற்றும் THITHI (நான் இன்னமும் பார்க்கவேயில்லை) மிக முக்கியமான தனக்கு பிடித்தமான படங்கள் என்று கூற நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவர் FANDRY பற்றி பேச ஆரம்பித்தார். பேச்சின் தொடக்கத்திலேயே தலித்துகள் யார் என்று ஒரு கேள்வியை கேட்டு அவர்கள் யாரென்று சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஹிந்து பள்ளியில் படிக்கும் தனது மகன் தன்னிடம் முஸ்லீம் என்றால் யார் என்று கேட்பதாகவும்!!!!!!! சென்னையில் வசிப்பதால் மனிதர்களை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாகவும் தலித் என்றால் யார் என்றே தெரியாத ஒரு உலகத்தில் வாழ்வதாகவும்!!!!!!!!!…நகரங்கள் அதை செய்வதாகவும் சலித்துக்கொண்டு தான் சிறுவனாக இருந்தபோது விருதுநகரில் தான் கண்ட/அறிந்த தலித்துகளை பற்றி சொல்ல ஆரம்பித்தார். எடுப்பு கக்கூஸ் இருந்த தனது வீட்டிற்கு “தலித்துகள்” வந்து எப்படி தனது தாயின் மலத்தை அள்ளிக்கொண்டு தயக்கதோடு தனது வீட்டிற்கு முன் வந்து நின்று “அம்மா நான்வந்திருக்கன்மா எதாவது பண்ணுங்கமா” என்று கேட்பார்கள் என்றும், தனது தாய் மீந்து போன, ஊசிப்போன, கெட்டுப்போன உணவு பதார்த்தங்கள் அனைத்தையும் ஒரே தட்டில் போட்டு அவர்களுக்கு தர அவர்கள் அதை வாங்கி கொண்டு செல்வதை பார்க்க வேதனையாக இருக்கும் (கரு பழனியப்பனின் “தலித்துகள் பாவம்” கூற்றை நினைவில் கொள்க) என்றும் இப்படித்தான் தலித் என்பவர்களை நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னார். இதை கேட்பவர்களுக்கு கரெக்டா உண்மைய/எதார்தத்தை தான சொல்லி இருக்கிறார் என்று தோன்றும்.

“you see only what you want to see” என்ற வாக்கியத்தை போல ஒரு சாதி இந்துவின் ஆழ்மனது தலித் என்பவர்களை என்னவாக நினைவில் கொள்கிறது அல்லது என்னவாக நினைவில் கொள்ள விளைகிறது என்கின்ற கேள்வி மிக முக்கியமானது. இப்பொழுது திரு வசந்த பாலன் ஒரு தலித்தாகயிருக்கும் பட்சத்தில் தலித் என்பவர்கள் யார் என்ற கேள்விக்கு என்ன மாதிரியான பதிலை அளித்திருப்பார் என்று நாம் யோசிக்க வேண்டும். வசந்தபாலன் சொன்னதையே தலித் வசந்தபாலன் சொல்லியிருந்தால் இப்படி சொல்லியிருப்பார். “நாங்கள் அந்த வீட்டு பெண்ணின் நாற்றம் பிடித்த மலத்தை அள்ளிக்கொட்டிவிட்டு அவர்கள் வீட்டு வாசல் முன் போய் நின்று அம்மாமா என்று அழைக்கும் வரை அந்த பொம்பளை வெளியே வரவில்லை. ஒரு வழியாக வெளியே வந்த அந்த பொம்பளை மீந்து போனதையும் ஊசிபோனதையும் வந்து போடுவாள். அவளுடைய மலத்தை மீண்டும் அள்ளிவந்து அவளுடைய தலையிலேயே கொட்டிவிட்டு ஒன்னோட பீ அல்லறவனுக்கு ஒரு வாய் சோறு போட கூட வக்கில்லாத ஒனக்கு நாங்க வந்து பீயை அள்ளணுமா? உன் புருஷனையும் உன் புள்ளையும் அள்ள சொல்றி மூதி என்று திட்டத்தோன்றும்/ஆத்திரமாக வரும் ஆனால் அதை அடக்கிக்கொண்டு அந்த வீட்டிலிருந்து நகர்ந்து சென்று விடுவோம் என்று சொல்லி இருப்பார் இல்லையா? இதை கேட்பவர்களுக்கும் கரெக்டா உண்மைய/எதார்தத்தை தான சொல்லி இருக்கிறார் என்று தோன்றும் இல்லையா? இப்பொழுது நாம் கேட்க வேண்டிய கேள்வி தலித்துகளை யாருடைய கோணத்திலிருந்து அணுக வேண்டும்? “தலித்துகள் பாவம்” என்ற கோணம்/மனநிலை கொண்டா அல்லது மானுட சமத்துவத்திற்கு எதிராக தலித்துககளை exploit செய்யும் சாதி ஹிந்துக்கள் மீது அறசீற்றம் கொள்ளும் கோணம்/மனநிலை கொண்டா??

ஒரு சாதி இந்துவின் அதிகபட்ச மனிதம், நேயம் என்பது “தலித்துகள் பாவம்” என்னும் வரைதான் நீளும். வசந்தபாலனுக்கு தனது தாயின் மீதும், தனது தந்தையின் மீதும், தன் மீதும் எப்படி ஒரு குற்றஉணர்ச்சியோ, அருவெறுப்போ, கோபமோ ஏற்படுவது இல்லையோ அதே போல சாதி இந்துவின் மனதும் ஒரு சுய விமர்சனத்திற்கும் அற சீற்றத்திற்கும் தயாராக இருக்காது. ஆனால் “தலித்துகள் பாவம்” என்னும் அயோக்கியத்தனமான மொன்னைத்தனமான போலித்தனமான கருணையை பாவித்துகொண்டே அவர்கள் மீதான சாதி ஹிந்துக்களின் வன்முறையை வேடிக்கைபார்க்கும். anyway coming back to his reference about dalits நான் கேட்க விரும்புவது இந்த நிலத்தின் தொல்குடிகளாக அறியப்படுகிற மிக நீண்ட நெடிய வரலாற்று/போராட்ட/எதிர்பரசியல் பின்னணி கொண்ட தலித்துகளை, அதுவும் குறிப்பாக அம்பேத்கரியத்தை முன்வைத்து தலித் அரசியல்/கலை,இலக்கியம் மிகுந்த எழுச்சியை பெற்றிருக்கும் இந்த சமகாலத்தில் தேசிய/மாநில விருதுகளை பெற்ற ஒரு இயக்குனர்/கலைஞர் தலித்துகள் யார் என்று கேள்வியை கேட்டு பீ அள்ளிவிட்டு ஊசிப்போன சோற்றை வாங்கிக்கொண்டு போபவர்கள் தான் தலித் என்கிறார். அதாவது as a caste Hindu he see what he want to see in a dalit. இதை கேட்பதற்கு என்னங்க அவரு எதார்த்தமா ஒரு உண்மைய சொன்ன அதுக்கு நீங்க இப்படி உள்நோக்கம் கற்பித்தால் எப்படி என்று கேட்க தோன்றும். அவர் தலித் சினிமா என்றால் என்ன என்று சொன்ன இரண்டாம் பகுதியை அடைந்தால் நான் சொல்வதின் உண்மை உங்களுக்கு புரியலாம்.

திரு வசந்தபாலன் கர்நாடகா சபா ஒன்றில் ஒரு கர்நாடகா கச்சேரி பார்க்க எதேச்சையா செல்கிறார். அங்கு ஒரு அதி உன்னதமான ஏதோ ராகத்தில் யாரோ ஒருவர் பாடி முடிக்க அந்த மொத்த அவையும் ஆர்ப்பரிக்கிறது. இந்த குறிப்பிட்ட ராகத்தில் இவ்வளவு சிறப்பாக யாரும் பாடியது இல்லை என்று அந்த ராகத்தில் ஊறிய பலர் அந்த பாடகரை பாராட்டுகிறார்கள்.இப்பொழுது வசந்தபாலனிடம் வந்து கச்சேரி எப்படி இருந்தது என்று கேட்டால் அவர் அற்புதம் என்று சொல்லலாம், தூங்கிவிட்டேன் என்று சொல்லலாம், புரியவில்லை என்று சொல்லலாம், பிடிக்கவில்லை என்று சொல்லலாம், சுமார் என்று சொல்லலாம் ஆனால் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையே தெரியாதா வசந்தபாலன் அந்த பாடகர் பாடிய ராகம் கர்நாடக சங்கீதமே அல்ல அது Justin Bieber பாடலின் பாட்டு என்று சொன்னால் அங்கு இருப்பவர்கள் வசந்தபாலனை யார் இந்த கோமாளி ? என்று பார்ப்பார்களா மாட்டார்களா? அதுபோன்ற ஒரு காரியத்தைத்தான் தலித் சினிமா என்பது என்ன என்று விளக்க முற்பட்டு நகைப்புக்குரிய வன்மமான கருத்துக்களை முன்வைத்தார்.

இயக்குநர் வசந்தபாலன்

அதற்குள் போவதற்கு முன் தலித்திய சினிமா தலித்திய இலக்கியம் என்றால் என்ன? தலித்துகளை பற்றி எழுதிவிட்டால் அது தலித் இலக்கியம் ஆகிவிடுமா? அப்படி பார்த்தால் பார்ப்பனர்களை பற்றி பெரியார் அளவிற்கு யாரும் எழுதியிருக்க முடியாது. அதனால் பெரியாரிய எழுத்துக்களை பார்ப்பனிய இலக்கியம் என்று சொல்வதில் எதாவது பொருள் உள்ளதா? தலித் கதாபாத்திரத்தை உலவிட்டால் அது தலித் சினிமா ஆகிவிடுமா? அப்படி பார்த்தால் முதல்வன் படத்தில் பெண்கள் கையை பிடித்து இழுக்கும் “சேரி பசங்களை” புரட்டி எடுப்பாரே அதனால் முதல்வனை தலித் படம் என்று சொல்லலாமா? நம்பியார் கூப்பிட்ட பொழுதெல்லாம் வந்து நின்றார்களே கபாலிகள் அந்த எல்லா படங்களும் தலித் சினிமாவா?…. தலித் இலக்கியம்/சினிமா என்பது தலித்துகளின் பார்வையிலிருந்து சமூகத்தை பார்ப்பது. இது ஒரு சாதி ஹிந்துவால் ஒரு போதும் செய்யமுடியாது. இளவரசன் மரணம் தலித்துகளின் மனதில் ஏற்படுத்திய கோபமும் பாதிப்பும் ஒரு சாதி ஹிந்துவால் ஒரு போதும் புரிந்துகொள்ளவே முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை. இதைத்தான் வசந்த பாலனோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் திரு மீரா கதிரவன் அற்புதமாக தலித்துகளை புரிந்து கொள்ள “அம்பேத்கரின் கண்கள் கொண்டு பார்க்க வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் Sairat மற்றும் Fandry இயக்கிய நாகராஜ் மஞ்சுளேவின் artistic sensibilitiesஐ முழுவதுமாய் உள்வாங்கி தலித்துகளின் பார்வையிலேயே அந்த இரு படங்களையும் மீரா கதிரவன் அணுகியது, விவரித்தது அவர் மீது எனக்கு பெரும் அன்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது…ஒரு தலித்தல்லாத ஒருவர் தலித்துகளின் பார்வையில் சமூகத்தை அணுகுவது அபூர்வம். கலையின் ஊடான அரசியல் புரிதலும், ஆழ்ந்த சித்தாந்த அரசியல் புரிதலும் மட்டுமே அதை சாத்தியப்படுத்தமுடியும். கிட்டத்தட்ட வசந்தபாலன் சொன்ன எல்லா கருத்துகளோடும் மென்மையாக அதே நேரத்தில் தெளிவாக முரண்பட்டு, விளக்கி அவருடைய பேச்சில் பேசினார். ஒரு வகையில் அவருடைய பேச்சின் மற்றொரு வடிவமே/கோணமே இந்த கட்டுரை.

அம்பேத்கரின் பார்வை விடுங்கள். பொதுவாக எந்த பார்வையுமே இருப்பதாக தெரியாதவர்கள் கூட எது தலித் இலக்கியம் எது தலித் சினிமா என்று கருத்து சொல்பவர்களாகவும் அதை குறித்து தலித்துகளுக்கே பாடம் எடுப்பவர்களாவும் ஆகிறார்கள். இப்படி அவர்கள் தூண்டப்படுவதற்கு அவர்களின் சாதி இந்து மனோநிலையும் திமிரும் தவிர வேறெந்த காரணமும் இல்லை. ஏனென்றால் பார்ப்பனர்களிடமோ/சாதி ஹிந்துக்களிடமோ போய் இதை அவர்கள் செய்வதில்லை.வசந்த பாலன் தமிழில் ஒரு நல்ல தலித் திரைப்படம் கூட வரவில்லையென்றும் சேரன் எடுத்த “பாரதி கண்ணம்மா”(ஒக்காமக்க) ஓரளவு நல்ல திரைப்படம் என்று சான்றிதழ் அளித்தார். சும்மா கபாலி என்று பேர் வைத்தால், அம்பேத்கர் படத்தை காட்டினால் அது தலித் சினிமா ஆகாது(கர்நாடக சங்கீதமே அல்ல அது Justin Bieber பாடலின் பாட்டு) என்றும் முழங்கினார். இன்னொரு வார்த்தையில் சொன்னால் மெட்ராஸ் மற்றும் கபாலியை தலித் சினிமா என்று கொண்டாடிய எல்லா தலித்துகளும், தலித்திய தளத்தில் இயங்கியவர்களும், தலித்திய சிந்தனையாளர்களும் முட்டாள்கள் போன்றும் நிஜமான தலித் சினிமா என்பது ஷார்ட்ஸ் போட்டு கொண்டு கூவத்திலிறங்கி எடுக்கவேண்டியது !!!!!!! என்றும் பேசினார்(இதே வசந்தபாலன் கபாலி வெளியான நேரத்தில் கபாலி ஒரு தைரியமான தலித் சினிமா என்று பா ரஞ்சித்தை மேடையில் வைத்து பேசும் வீடியோ இன்னமும் youtubeல் இருக்கிறது என்பது வேறு விஷயம்). சுஹாசினி இயக்கிய “இந்திரா” திரைப்படத்தில் அனுஹாசன் தலித் பெண்ணாக நடித்ததை குறித்தும் மாடம் வைத்த தலித் வீட்டில் ஒரு குழந்தை “நிலா காய்கிறது” என்று பாட்டு பாடுவதாய் அமைக்க பட்ட காட்சியை குறித்தும் அடக்க முடியாத சிரிப்புடன் குலுங்கி குலுங்கி சிரித்தபடி விவரித்து இப்படித்தான் தமிழில் தலித்துகள் காட்சி படுத்தப்படுகிறார்கள் என்று சொன்னார்.தசாவதாரம் தொடக்க காட்சியில் vin diesel போன்று பைசெப்ஸ் கொண்ட குடுமி வைத்த ஐயர் ஓடி வந்து எகிறி அடித்த போது யாரும் இது வரலாற்று ரீதியாக தவறு இந்த காட்சி பார்ப்பன வாழ்வியலை பிரதிபலிக்கவில்லை என்று கமலிடம் பாடம் எடுத்தார்களா? அதை பார்த்து வசந்தபாலனுக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்ததா?. “இந்திரா” திரைப்படம் பார்ப்பனிய அழகியலோடு அணுகப்பட்ட ஒரு தலித் கதை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அனுஹாசன் ஒரு தலித் பெண்ணாக திரையில் தோன்றும்போது வசந்தபாலனுக்கு ஏன் சிரிப்பு வருகிறது? தலித் பெண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று குறிப்புகள் கொண்ட ஓலைச்சுவடி ஏதாவது அவருடைய வீட்டில் உள்ளதா? மெட்ராஸ் திரைப்படம் வெளிவந்த போது கேத்தரின் தெரசா போன்ற அழகான பெண்ணை எப்படி தலித் பெண்ணாக ஏற்க முடியும் என்ற திமிர்பிடித்த தடித்தனமான கேள்விக்கும் வசந்தபாலனின் அடக்க முடியாதா சிரிப்பிற்கும் என்ன வித்தியாசம் ? இதை குறிப்பிட்டு மீரா கதிரவன் தனது பேச்சில் சொன்னார் “லைலாவை ரசிக்க மஜ்னுவின் கண்கள் வேண்டும்” என்று. இளையராஜாவின் வீட்டில் நவராத்திரியின் போது பல கர்நாடக பாடகர்களும் கூடி பாடல் பாடும் காணொளிகளை நானே youtubeல் பார்த்திருக்கிறேன். இந்நிலையில் வசந்தபாலனுக்கு மாடம் வைத்த தலித் வீட்டில் “நிலா காய்கிறது” பாடல் கேட்டால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. ஏனென்றால் ஒரு சாதி இந்துவின் மனதில் தலித்துகளை பற்றி அவர்களே உருவாக்கி கொண்ட கற்பிதங்களும் சித்திரங்களும் தலித்துகள் குறித்து கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தெளிவான வரையறையை கொடுத்துள்ளது. அதை தாண்டி அவர்கள் வேறொன்றை பார்க்கும் பொழுது அவர்கள் குழப்பமும் எரிச்சலும் ஆற்றாமையும் கொள்கிறார்கள். இதுதான் வசந்தபாலனை கபாலியை நிராகரிக்க சொல்கிறது. தன்னை விட அழகாவும் கம்பீரமாகவும் துணிச்சலாகவும் வேறு சாதியில் பிறந்த அழகிய பெண்ணை விரும்பி மணந்து மகிழ்ச்சியாய் ஒரு கலகக்காரனாய் வாழும் கபாலி தலித்தே இல்லை என்று கதறி அழுதுகொண்டே ஜெயமோகன் நாயாடிகள் குறித்து எழுதிய “100 நாற்காலிகள்” (“beautifulஆன கதை” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்) காண்பிக்கும் தனது கற்பிதங்களுக்கு ஏற்ற ஒரு தலித்தை வசந்த பாலன் வந்தடைகிறார். ஒரு பிராம்மண பெண்ணை மணந்து அந்த பெண்ணோடும் லட்சக்கணக்கான மக்களோடும் பவுத்தம் ஏற்ற அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறாக நம் கண்முன்னே இருக்கும்போது தான் ஒரு நாயோடி IAS ஆனாலும் அய்யர் பெண்ணை மணந்தாலும் அவன் காலம் முழுவதும் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் போராட்டம் நடத்தியே அவன் வாழ்க்கை போய்விடும் என்று அந்த நாயாடிக்கு தீர்ப்பெழுதி ஜெயமோகன் வசந்தபாலன் போன்ற சாதி ஹிந்துக்களுக்கு ஆற்றுதல் படுத்துகிறார். வசந்த பாலன் ஆறுதல் அடைகிறார்.

ஒரு கலைப்படைப்பில் “நிஜம்/உண்மை” என்று எதுமே இல்லை மாறாக “பார்வை/கோணம்” மட்டுமே உள்ளது. ஒரு கலைப்படைப்பை யாருடைய பார்வையிலிருந்து எந்த நேரத்தில் என்ன காரணத்திற்காக என்னமாதிரியான விளைவை உத்தேசித்து ஒருவன் படைக்கிறான் என்பதை பொறுத்துதான் அந்த கலைப்படைப்பின்/கலைஞனின் சமூக பிரக்ஞை/ அறம்/அரசியல் குறித்து மதிப்பிட முடியும். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒரு சில்லறைத்தனமான திறமையான(நேர்மையான அல்ல)கலைஞனானல் உண்மையான, நிஜத்திற்கு நெருக்கமான செய் நேர்த்தியுள்ள (ஏனென்றால் craft can be mastered over the time) ஒரு படைப்பை உருவாக்கிவிட முடியும். அதற்க்கு வசந்தபாலன் சொன்ன ஜெயமோகன் கதையே நல்ல உதாரணம். அந்த கதை சமூகத்தில் நிகழ்த்தும் மாற்றம் என்ன ? வசந்தபாலன் பயன்படுத்திய “beautiful கதை ” என்று சாதி ஹிந்துவை இளையராஜாவின் சோக பாட்டை ரசிப்பது போல் ரசிக்க வைக்கும். தலித்துகள் குறித்து சாதி ஹிந்துவுக்கு உள்ள கற்பிதங்களை மீண்டும் புதுப்பித்து உறுதியாக்கும். ஆனால் ரஞ்சித்தின் “கபாலி” சாதி ஹிந்துக்களை பதட்டம் கொள்ள வைக்கிறான், தலித்துகளை மிகுந்து எழுச்சியும்/அடையாள அரசியலையும் முன்னெடுக்க வைக்கிறான், சமூகத்தில் பெரும் விவாதங்களை கிளப்புகிறான், திரு அன்புமணியை (பாகுபலி பேட்டியில்) ரஜினியின் எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன் ஆனால் கபாலி பார்க்கவில்லை என்று சொல்ல வைக்கிறான், வசந்தபாலன் போன்ற ஆட்களை கபாலி தலித்தே இல்லை என்று பிதற்றவைக்கிறான். ஏனென்றால் ரஞ்சித் தலித்துகள் பற்றிய உண்மையை தலித்துகளின் கோணத்தில் அணுகி “கபாலியை” தமிழ்சமூகத்தை கன்னத்தில் அறைந்து விவாதத்திற்கு அழைக்கும் விளைவை உத்தேசித்து அவரின் சமூக பிரக்ஞை/ அறம்/அரசியல் என்பது என்னவென்று வெளிப்படுத்தினார்.

தலித்திய கோணம் எப்படி இருக்கும் ? உதாரணம்

திரு வசந்தபாலன் அறிந்த மலம் அள்ளும் தலித்துகள் குறித்து அவர் சொன்ன உண்மை சம்பவத்தின் அடிப்படையிலேயே ஒரு குட்டிக்கதை

புருசனும் பொஞ்சாதியுமாக அந்த வீட்டை வந்தடைகிறார்கள். இதுதான் கடைசி வீடு. இங்கு ஜோலி முடிந்து விட்டால் இன்றைய பொழுது முடிந்தது, வீட்டிற்கு போகலாம். எடுப்பு கக்கூஸ் இருக்கும் பகுதியை வந்தடைந்ததும் அம்மா சாம்பல் போடுங்கம்மா என்று ஆம்பிள்ளை கத்துகிறான். சாம்பல் வந்து விழுந்தது. அவள் அதை அள்ள குனிந்தபடி இந்த வீட்டு பொம்பள எத திம்பாலோ தெரியல நாம வளக்கிற பன்னி பீ பரவாயில்லை என்று சொல்லியபடியே அதை அள்ளி அவளது கூடையில் போட்டுக்கொள்கிறாள். மீண்டும் தண்ணி உற்ற சொல்லி அவர்கள் சத்தம் தர யாரோ தண்ணீர் ஊற்றுகிறார்கள். அவர்களுடைய வேலை முடிந்தது. புருசனும் பொஞ்சாதியுமாய் கூடையை குப்பை கொட்டும் இடத்தில வைத்துவிட்டு அந்த வீட்டின் முன் வந்து “அம்மாமா எதாவது இருந்தா குடுங்கம்மா” என்று நாலைந்துமுறை அழைத்தபிறகு அந்த வீட்டின் பெண் ஆடி அசைந்து ஒரு குன்டாவோடு வந்து பாத்திரத்தை தூக்கி பிடி என்று சொன்னால். இவள் தூக்கிப்பிடிக்க அழுகியதும் கெட்டதும் ஊசியதும் என்று ஏதோ வந்து விழுந்தது. எங்கிருந்துதான் அன்னைக்குன்னு அவ புருசனுக்கு அவளோ ஆத்திரம் வந்ததோ தெரில…கண்மூடி திறக்கறதுக்குள்ள அந்த பீ சட்டியை தூக்கியாந்து அந்த பொம்பள தலைமேல் கொட்டிப்புட்டன். அவ மயிறு மூஞ்சு கழுத்து மாருன்னு பீயா வழியுது…உன்வீட்டு பீயை அல்லறவவனுக்கு ஒரு நல்ல சோறு கூட போடா மனசில்லாத வக்கில்லாத மூதி உன் பீயை நாங்க அள்ளணுமா? உன் புருஷனையும் புள்ளையையும் அள்ள சொல்றி மயிறு என்று சொல்லியபடி பொஞ்சாதியாய் இழுத்துக்கொண்டு விடு விடு வென்று நடக்கத்தொடங்கிவிட்டான்.

தன்னுடைய மலத்தை முகம்முழுவதும் உடல்முழுவதும் உணர்ந்த அந்த அம்மா அந்த நாளைக்கு அப்பறம் மலம் கழிக்கவேயில்லை. நாட்களாகி வாரங்களாகி மாதங்களாகி போனது. அவர்களது வீடே மலத்தின் நாற்றம் அடிக்க தொடங்கியது. அந்த ஊரில் அவர்கள் வீட்டை பீக்காரம்மா வீடு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த குடும்பம் அந்த ஊரை காலி செய்துவிட்டு ஏதோ வடமாநிலத்துக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். அவர்கள் போனபின்பும் அந்த வீட்டிலிருந்து பீ நாற்றம் வீசியபடியே இருக்கிறது, பன்றிகள் மட்டுமே அந்த வீட்டிற்குள் இப்பொழுது போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நாகராஜ் மஞ்சுளே விளிக்கும் ” பன்றி” யார் என்பதற்கான பதிலுடன் அடுத்த கட்டுரையில் முடித்து கொள்கிறேன்.

(தனிப்பட்ட முறையில் திரு வசந்தபாலன் மீதான விமர்சனமாக பார்க்காமல் ஒரு சாதி ஹிந்து திரைப்பட இயக்குனர் குறித்தான விமர்சனமாக பார்க்க வேண்டுகிறேன்)

2 comments

  1. நான் ஏன் ஹிந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை தழுவினேன்?:

    கங்கை கரை தோட்டத்திலே, கன்னிப்பெண்கள் கூட்டத்திலே, கண்ணன் நடுவினிலே மெய்மறந்து கிடந்தான். அவனை சுற்றியிருந்த பொம்மனாட்டிகளெல்லாம் “கண்ணன் என்னை கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடி தந்தான்” என்று கண்ணனின் புகழை பாடிக்கொண்டிருந்தனர்.

    நான் நேராக கண்ணனிடம் சென்றேன். “கண்ணா நாட்டிலே அநீதி தாண்டவமாடுது. வந்து தருமயுத்தம் செய்” என்றேன். எனது சூம்பிப் போன நெஞ்சையும் காஞ்சி போன காம்பையும் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. “உன்னை யாரடா உள்ளே விட்டது பறப்பயலே, வெளியே போ” என்றான்.

    “என்னிடமென்ன பொன்னழகு மேனியா இருக்கு, பூச்சரங்கள் சூடித்தருவதற்கு?. நான் வணங்கும் கடவுளே என்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டுகிறான். பொம்மனாட்டிகளோடு கூத்தடிக்கிறான். எனக்கெதிராக நால்வர்ண தருமத்தை படைத்த இவன், எனக்காக தருமயுத்தம் செய்வானா?. இவனெல்லாம் ஒரு கடவுளா?. அடச்சே” என நொந்து போய் வெளியே வந்தேன். வெளியே வந்ததும், அல்லாஹு அக்பர் எனும் பாங்கு சத்தம் கேட்டது. சரி, கண்ணன்தான் என்னை கைவிட்டுவிட்டான், இந்த அல்லா சாமி என்ன சொல்லுது பார்ப்போம் என்று பள்ளிவாசலுக்கு போனேன்.

    அங்கிருந்த இமாம் பாய் என்னைக் கண்டதும் ஆரத்தழுவி “சகோதரா உள்ளே வா” என்றார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாய் போய்விட்டது. ஐயாயிரம் வருடங்களாக, நாங்கள் கோயிலுக்கு போனால் “உள்ளே வராதே, வெளியே நில், நீ தீண்டத்தகாதவன்” என்று உயர்ஜாதியினர் சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த இமாம், என்னை சகோதரா என்று நெஞ்சோடு அணைத்து வரவேற்கிறாரே என பிரமித்து போய் உள்ளே சென்றேன்.

    அல்லா சாமி எங்கே என்று சுற்றி முற்றி பள்ளிவாசலில் தேடினேன். நான் தேடுவதைப் பார்த்த இமாம் “என்ன விஷயம்?” என்றார். அல்லா சாமிய பாக்கனும் பாய் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே “இந்த உலகில் அல்லாஹ்வை பார்க்க முடியாது, மறுமை நாளில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வை பார்க்கலாம், அப்படித்தான் எங்கள் திருக்குரான் சொல்கிறது” என்றார்.

    “என்னங்க பாய், கண்ணனிடம் போனா வெளியே போடா பறப்பயலேனு சொல்லி விரட்டிவிட்டான். சரி அல்லா சாமியிடம் நம்ம கஷ்டத்த சொல்லி அழலாம்னு வந்தா, கண்ணுக்கே தெரியாத சாமிகிட்ட எப்படிங்க பாய் பேசறது?” என்றேன். உடனே பாய் திருக்குரானை எனது கையில் கொடுத்து “இதுதான் மனிதனுக்கு அல்லாஹ் தந்த மொபைல் போன். இதன் மூலம் அல்லாஹ்வோடு நீ பேசலாம், அல்லாஹ் உன்னுடன் பேசுவான். படித்துப் பார்” என்றார்.

    திருக்குரானை படித்தேன். படித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். நேராக மீண்டும் கங்கை கரைத்தோட்டம் சென்றேன். அங்கே ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலையெல்லாம் திருடிக்கொண்டு மரத்தின் மேல் கண்ணன் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்து பெண்களெல்லாம் “நந்தலாலா, நந்தலாலா, புடவையைக் கொடு நந்தலாலா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். “புடவை வேண்டுமானால் ஆற்றைவிட்டு வெளியே வா, வாங்கிக் கொள்” என்று கண்ணன் அவர்களை மேலும் சீண்டிக்கொண்டிருந்தான்.

    நேராக கண்ணனிடம் சென்றேன், அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

    “நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்
    நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கு ஏறிடுவாய்
    அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
    அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்
    அந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்”
    என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் பள்ளிவாசல் நோக்கி நடந்தேன். நன்றி.

    Like

  2. ஹலால் ஹராம் பற்றி ஒரு ஹிந்துவுக்கு எப்படி விளக்குவது?:

    ஒரு ஹிந்துவுக்கு ஹலால் எது ஹராம் எது என்பதை பகுத்தறியும் சிந்தனை கிடையாது. மதுவை விற்றோ அல்லது மதுக்கடையில் வேலை செய்தோ பிழைப்பது ஹராம் என்று சொன்னால் “நாய் விற்ற காசு குரைக்குமா?” என கேட்பார்.

    “சைவ உணவு நூறு சதவீத ஹலால் உணவு” என ஷரியா சட்டம் தெளிவாக சொல்கிறது. ஒரு ப்ராஹ்மின் சகோதரர் வீட்டு சைவ உணவை நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு தைரியமாக சாப்பிடலாம். ஆனால் அந்த உணவை சாமி சிலைக்கு முன்னால் அவர் பூஜை படையல் செய்து விட்டால், அது முஸ்லிம்களுக்கு ஹராமாகி விடுகிறது.

    ஒரு ஹோட்டலில் சாப்பிட செல்வதற்கு முன், அங்கே சமைக்கப்படும் உணவும் சமையல்காரரும் ஹலால் வழியை பின்பற்றுகிறார்களா என ஒரு முஸ்லிம் சிந்திப்பார். அதாவது, “பிஸ்மில்லாஹ் சொல்லி கோழி ஆடு அறுத்தார்களா?. செத்த ஆடு, சீக்கு பிடித்த கோழி, காக்கா, பன்றி போன்றவற்றை போட்டு மட்டன் குருமாவாக விற்கிறார்களா?. இது சாமி சிலைக்கு படையல் செய்யப்பட்டதா?” என ஒரு கனம் சிந்திப்பார்.

    அடுத்தபடியாக அங்கே சமையல் செய்பவர் சுத்தபத்தமாக இருக்கிறாரா என சிந்திப்பார். பெரும்பாலான ஹிந்துக்களுக்கு சிறுநீர் சுத்தம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு ஹிந்து சமையல்காரர் நேராக குட்டிச்சுவருக்கு முன்னால் நின்று சொர்ரென்று அடிப்பார். அது கைகாலில் எல்லாம் தெரிக்கும். அப்படியே கையை ஆடையில் துடைத்துவிட்டு நேராக கிச்சனுக்கு சென்று அதே கையுடன் மாவு பிசைவார். உணவை பரிமாறுவார். இது இஸ்லாத்தில் ஹராம். அந்த உணவை முஸ்லிம்கள் சாப்பிடக்கூடாது.

    ஆனால் ஒரு ஹிந்துவுக்கு இது உரைக்கவே உரைக்காது. “நாமும் அப்படித்தானே செய்கிறோம். மனுஷன்னா அப்படித்தான். ஒன்னுக்கடிக்காமல் மனுஷன் வாழமுடியுமா?” என்று சமாதானம் சொல்லிவிட்டு, அவரும் நேராக அந்த சமையல்காரர் அடித்த ஒன்னுக்கின் மீதே நின்று சுவற்றில் அடித்துவிட்டு மூத்திரக்கையால் சமைக்கப்பட்ட சூடான மசால் தோசையை சப்புக்கொட்டி சாப்பிடுவார்.

    “பொது இடங்களில் மலம் ஜலம் கழிக்காதே. ஆடையிலும் அக்கம் பக்கத்திலும் தெளிக்காத வண்ணம் உட்கார்ந்து சிறுநீர் கழி. கழித்தபின் உனது உறுப்புக்களையும் கைகால்களையும் சுத்தமாக கழுவு” என ஷரியா சட்டம் சொல்கிறது. “சுத்தமாக இல்லாவிட்டால் பள்ளிவாசலில் நுழையாதே. என்னை வணங்காதே” என அல்லாஹ் தெளிவாக திருக்குரானில் சொல்கிறான். “சுத்தமற்றவனின் வணக்கத்தை சுருட்டி முகத்தில் அல்லாஹ் வீசுவான்” என பெருமானார்(ஸல்) உரைத்துள்ளார்.

    ஹிந்துக்களை சொல்லி குற்றமில்லை. ஒரு சுத்தமான பொதுக்கழிவிடம் இந்த பாரதநாட்டில் எங்கேயாவது இருக்கிறதா? அவசரத்துக்கு தப்பித்தவறி பொதுக்கழிவிடத்தில் நுழைந்துவிட்டால், மூச்சுத்திணறி சாகவேண்டியதுதான். இல்லாவிட்டால், அங்கே கஞ்சா சாராயம் விபச்சாரம் நடக்கும். மானம் மரியாதை உள்ள எந்த பெண்ணாவது பொதுக்கழிப்பிடத்தில் நுழைவாரா?

    அரபு நாடுகள் எவ்வளவு சுத்தபத்தமாக இருக்கிறது என நான் பலமுறை வியந்ததுண்டு !!. கிட்டத்தட்ட இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. ஏழை இஸ்லாமிய நாடான பங்களாதேஷிலும் நூறு சதவீதம் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாட்டு மூத்திரத்தை புனிதமென சொல்லி குடிக்கும் இந்த ஹிந்துக்களுக்கு ஹலால் ஹராம் சுத்தம் பற்றி எந்த ஜென்மத்தில் யாரால் விளக்கமுடியும்?. இவர்கள் ஹிந்துக்களா ஜந்துக்களா என ஒரு முஸ்லிம் சிந்தித்தால் அதில் தவறென்ன?

    Like

முஹம்மத் அலி ஜின்னா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.