மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, இறைச்சி உண்பது புனிதமற்ற உணவுப் பழக்கமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறை உணவுக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்து மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி, பல வடமாநிலங்களில் கும்பல் கொலைகள் நிகழ்த்தப்பட்டன். மேற்கு வங்கத்தில் பார்ப்பனர்கள் மீன் உணவை தங்களுடைய உணவுப் பழக்கமாக பின்பற்றிவருகிறார்கள். மீன் உண்பது விஷ்ணு (இந்துகடவுள்)வை உண்பதுபோல என சொல்லி மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் இந்துத்துவ அமைப்புகள்.
இந்நிலையில் புனிதமாக கருதப்படும் பசுவின் கன்று ஒன்று, மீனை விரும்பி உண்ணும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.