அருண் நெடுஞ்செழியன்

ஒட்டுமொத்த தமிழகமும் மதுக்கடை எதிர்ப்பு போராட்டம்,ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு, ஒ ஏன் ஜி சி எண்ணெய் எரிவாவு திட்டத்திற்கு எதிரான போராட்டம், ஒரே நாடு ஒரே வரிக்கு எதிர்த்து போராட்டம், இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு, மீனவர் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டம் என தினந்தோறும் போராட்ட அலை வீசிவருகிற அசாதாரண அரசியல் சூழலை எதிர்கொண்டு வருகிறது. இப்போராட்டங்களின் ஊடாக ஆளும் வர்க்கத்தின் வர்க்க குணாம்சத்தை, மக்களிடத்தில் எடுத்துச் சென்று, மக்களிடம் ஆளுவர்க்க அரசியல் அம்பலப் படுத்தல்களை மாற்று இயக்கங்கள் மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக போராட்ட சக்திகள் அரசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருகிறது. இச்சூழலில் ஆளும்வர்கத்திற்கு எதிராக நாம் போராடுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல மாற்று இயக்கங்கள்-முற்போக்குப் போர்வையில் அடையாள, சுயலாப அரசியல் நடத்துகிற பிழைப்புவாதிகளையும் நாம் இனம் கண்டு ஒதுக்குவதும் அவசியம் என்கிற பிரச்சனையானது இன்று முக்கிய விஷயமாக முன்னுக்கு வந்து நிற்கிறது. ஏனெனில் இந்த தன்முனைப்பு பிழைப்புவாதிகளின் அற்ப சில்லறை அரசியலை பயன்படுத்திக் கொள்கிற ஆளும்வர்க்கமானது, இவர்களை கைப்பாவையாக பயன்படுத்திக் கொண்டு மக்கள் போராட்டங்களையும் மாற்று அரசியல் சக்திகளை முடக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணியாளர் மன்றத்தின் தலைவர் தோழர் பரிமளா மீதான பொய் வழக்கும் அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கையும் இந்த ஐயத்தை உறுதியாக்குகிறது. ஒரே நாடு ஒரே வரி என்ற தலைப்பில் கூட்டம் நடத்திகொண்டிருந்த இயக்கத் தோழர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களை அழைத்து வந்த ஸ்நாபக் வினோத், நியூஸ் 18 இல் வேலை செய்கிற நாசர், வசுமதி, பட்டுராசன், இளையராஜா, அப்துல் ஆகியோர் உள்ளே நுழைந்து தோழர்களை தரக்குறைவாக பேசியும் தாக்கவும் முயன்றுள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் சென்ற இந்த சிக்கலை, திட்டமிட்டபடி தோழர்கள் செந்தில் மற்றும் பரிமளா மீது திருப்பியுள்ளார்கள்.
தமிழகத்தில்,ஊடக வெளிச்சத்தின் ஊடாக சூழல் போராளி வேஷம் போடுகிற கும்பல், மார்க்சிய அரசியலை கைவிட்டோடிய உதிரி லும்பன்கள், திரிபு வாதிகள் என அதிகார /அடையாள பசிகொண்ட சக்திகளின் பெரும் வலைப்பின்னலே இதற்கு பின்னால் சதிகளை மேற்கொண்டு வருவது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. புரட்சிகர அரசியலுக்கும் பிழைப்புவாத தன்முனைப்பு அரசியலுக்குமான இந்த முரண்பாட்டை ஆளும்வர்க்கமானது மிக லாவகமாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றன.
நமது போராட்டத்தில், ஆளும்வர்க்கதிற்கும் நமக்குமான தெளிவான எல்லைக் கோட்டை நம்மால் வரைந்து கொள்ள இயலுகிற நிலையில், முற்போக்கு முகமூடியுடன் உலாவி, உறாவடிக் கெடுக்கிற துரோகக் கும்பல்களை இனம் கண்டு ஒதுக்குகிற அரசியல் கலையில் தேர்ந்துகொள்ள வில்லையென்றால் முதலுக்கே மோசம் என்ற வகையில்,நமது அனைத்து போராட்டங்களையும் இந்த பிழைப்புவாத கும்பல்கள் அறுவடை செய்துவிடுகிற ஆபத்து உள்ளது. கார்ப்பரேட் எதிர்ப்பரசியல், ஊழல் எதிர்ப்பரசியலைத் தாண்டி ஓரடி கூட மாற்று அரசியல், மக்கள் திரள் அரசியல் என முன்னோக்கி வர இயலாத இந்த நகர்ப்புற போலி முற்போக்கு கும்பல்களின் இழிவான சதிகளை முறியடிப்பது நமது முதன்மையான பணிகளில் ஒன்றாகியுள்ளது!
அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது
இளந்தமிழகம் இயக்க அலுவலகத்தின் ஒப்பந்தத்தை தனிப்பட்ட முறையில் சட்டத்திற்கு புறம்பாக தங்கள் பெயரில் சிபிஎம்எல் மக்கள் விடுதலை தரப்பு மாற்றிக் கொண்டதும், ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பில் சேர்க்கப்பட்ட இயக்கப் பொருட்களை அபகரித்து அவர்கள் வைத்திருப்பதும் தான் இந்த பிரச்சனையின் மையமே. இதை பேசி தீர்ப்பதற்காக நேற்று தோழர்கள் சென்ற பொழுது தான் அவர்கள் வேண்டுமென்றே பிரச்சனை செய்து காவல்நிலையத்தில் பொய் புகாரளித்துள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கு இளந்தமிழகம் இயக்கத் தரப்பையும், இளந்தமிழகம் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட CPML கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் செந்தில் தரப்பும் காவல்துறை ஆய்வாளர் முன் சந்தித்தனர். நேற்று சதீஷ் சார்பில் அவர்கள் கொடுத்திருந்த குற்றச்சாட்டு பரிமளா பெயரில் அவர்கள் மாற்றிய பொழுதே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை எனத் தெரிந்தது. இருப்பினும் இருதரப்பினரும் சிறை செல்வதில் நமக்கு உடன்பாடு இல்லை. இருவரும் புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என இளந்தமிழகம் இயக்கம் கூறிய பொழுது அதை சிபிஎம்எல் மக்கள் விடுதலை செந்தில் தரப்பு ஏற்க மறுத்தனர். இவர்களின் வெட்டி வீராப்பிற்காக இன்று தோழர்கள். பட்டுராசனும், வினோத்தும் சிறையில் உள்ளார்கள்.
அரசு மக்கள் இயக்கங்களை எப்பொழுது ஒடுக்கலாம் எனக் காத்திருக்கும் பொழுது இவர்கள் தங்கள் அதிகார வறட்சியின் காரணமாக அரசோடு சேர்ந்து கொண்டு தாங்களும் சிறைக்கு செல்ல வேண்டும், அப்பொழுது தான் தியாகிகளாக முடியும் எனத் திட்டமிட்டே இந்த செயலைச் செய்துள்ளார்கள்.
இன்று இவர்களின் பொய் குற்றச்சாட்டினால் தோழர்கள். பட்டுராசனும், வினோத்தும் சிறையில் உள்ளார்கள்.
நடுத்தர வகுப்பு இளைஞர்கள் அரசியலை நோக்கி வருவதே அரிதாகி வரும் இக்காலத்தில், அப்படி உருவான ஒரு அமைப்பை அழிப்பதன் மூலம் இவர்கள் நடுத்தர வகுப்பு இளைஞர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தி அவர்களை அரசியல் களத்திலிருந்து வெளியேற்றும் அரசின் திட்டத்தை தமது திட்டமாக வரிந்து கொண்டு சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியைச் சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகின்றார்களோ என்ற எமது நெடுநாள் ஐயம் இன்று உண்மை தான் என உறுதியாகியுள்ளது.
உண்மை வெளிவரத் தொடங்கும் முன்பே பொய் ஊரைச் சுற்றி வந்திருக்கும் என்று சொல்வதைப் போல, இவர்கள் கைதிற்கு முன்பே கைது செய்யப்பட்ட அறிக்கை மதியமே வெளியாகிவிட்டதிலிருந்தே தெரிகின்றது. இவர்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டே செய்கின்றார்கள் .
LikeLike