முருகன் கன்னா

உள்ளாட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரநிதிதுவம் வேன்டும் என்ற அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் 1978 ஆம் ஆண்டு உள்ளாட்சியில் இடஒதுக்கீடு அமுல்படுத்த வேன்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட வாசுதேவநல்லூர் (தனி)தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.கிருஷ்னன் வழக்கறிஞர் அவர்கள் முன்வைத்துள்ளார் பின் சட்டமன்றத்தில் இந்த கோரிக்கைக்காக கையெழுத்து இயக்கம் நடத்தி அன்றைய பாரத பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது ஆனாலும் அதனை நடைமுறை படுத்துவதில் தாமதமே தொடரந்தது தனது தொடர்ச்சியான விடாத முயற்சியை மேற்கொன்டுள்ளார் இவருடைய போராட்டதின் காரனமாக 1984ல் இந்தியா முழுவதும் உள்ளாட்சியில் இடஒதுக்கீடு சட்டமான பஞ்சாயத்து ராஜ்ஜிய சட்டம் கொன்டுவரப்பட்டது
பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்து 33 ஆண்டுகள் கடந்து விட்டது ஆனாலும் சாதியவாதத்தால் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமுக மக்கள் இன்றளவும் பஞ்சாயத்து தலைவர் ஆக முடியவில்லை , நகராட்சி தலைவர் ஆக முடியவில்லை , தேர்தலில் போட்டியிட்டால் கொலை செய்வதும் நடைபெறுகிறது பெரும்பாலான இடங்களில் தேர்தலில் போட்டியிடுபவர்களோ தங்கள் சார்ந்த கட்சிகளுக்கு கட்டுபட்டவர்களாகவோ அல்லது சாதிய ஆதிக்க கூட்டத்தின் கைபாவைகளாகவும் இருக்கிறார்கள் இவைகளை கடந்து தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவராகவோ , நகராட்சி தலைவராகவோ தேர்ந்து எடுக்கப்பட்டாலோ தலைவராக செயல்பட முடியாது தலைவருக்கான இருக்கையில் அமர கூட முடியாது என்ற நிலைகளே தொடர்கிறது
சமுகநீதி அடிப்படையில் சமத்துவத்தை இலக்காக கொன்ட அனைவருக்குமான பிரதிநிதுவ உரிமையும் , சாதிய ஒடுக்குமுறைகளை தடுக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்தாலும் அதனை நடைமுறை படுத்த கூடிய சமத்துவத்தை இலக்காக கொள்கை கொன்ட ஆட்சியாளர்களாக இல்லாமல் அனைவரும் மனுவின் சாதியவாதத்தை ஏற்று அதில் புறையோடி கொன்டு இருப்பவர்களே ஆட்சியாளர்களாக இருப்பதனால் அரசியல் அமைப்பு சட்டத்தையும் பயன்படுத்த மறுக்கிறார்கள் இதனால் இன்றளவும் சாதி எனும் கொடிய சிந்தனை மனிதர்களை விட்டு விலகாமல் தொடர்கிறது
எந்த ஒரு திட்டமும் முழுமையாக நடைமுறை படுத்தி பார்த்த பின்னரே அதன் மூலமாக கிடைக்கும் நிறை குறைகளை ஆராய்ந்து நிறைவாக இருப்பின் தொடர்வதும் குறைகள் அதிகம் இருப்பின் அதனை மாற்றுவதும் மிகவும் சரியான நடவடிக்கையாகும் ஆனால் இந்திய அரசியலமைப்பின் படி முழுமையாக செயல்படாத ஆட்சியாளர்கள் இன்றைக்கு சட்டத்தையும் பிரதிநிதிதுவ உரிமை முறையையும் குறை கூறுகி வருவதோடு மாற்றாக மனுவின் சாதிய சட்டத்தை நடைமுறை படுத்த முயற்சி மேற்கொள்கிறார்கள்
உலகத்தில் எங்கே மனித உரிமைகள் மீறப்பட்டாலும் ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் தொடுக்கப்பட்டாலும் குரல் கொடுக்கும் சர்வதேச மனித உரிமை ஆணையம் இந்தியாவில் காலம் காலமாக தொடரும் சாதிய பயங்கரவாதத்தால் தினம் தினம் பல மனித உயிர்களை கொன்று குவிப்பதை நோக்கி கேள்வி கேட்க மறுப்பது ஏனோ தெரியவில்லை மற்றும் சாதியின் தன்மை குறித்தும் தீண்டாமையின் கொடுரம் குறித்தும் மிக சரியாக ஆய்வு செய்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை வெகு விமர்சியாக கொன்டாடிய ஐக்கிய நாட்டு சபையும் இதுவரையில் எந்த கேள்வி கேட்டவில்லையே
உலகின் பல நாடுகளை பயங்கரவாத நாடுகள் என்று அறிவிக்கும் ஐநா சபை மனித சமுகத்திற்கு எதிராக உள்ள மனிர்களை கொன்று குவிக்கும் சாதி எனும் கொடுர தன்மையை சமுகத்தில் இருந்து அகற்றா விட்டால் இந்தியாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதிப்போம் என்று கூற முன் வரவேன்டும் உறுதியற்ற வாழ்வை கொன்ட மக்களுக்கு பொருளாதார தடை ஒரு பொருட்டும் அல்ல
சாதிய கொடுங்கரங்களால் சாவதை விட பட்டினி சாவு மேல்.
முருகன் கன்னா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.
பட்டியலின மக்கள் மீதான அடக்குமுறையை ஐ.நா மட்டத்திற்கு எடுத்துச் செல்வதா? என்ன அநியாயமிது? ஒரு தேசிய இனப்பிரச்சனையான, காஸ்மீர் பிரச்சனையை ஐ.நா மட்டத்திற்கு எடுத்துச் செல்வதே தேச்த்துரோகமாக இருக்கும் போது. உள்நாட்டு குடிம உரிமைப்பிரச்சனையை (civi) இந்தியாவுக்கு வெளியில் எடுத்துச் செல்வதா? வேண்டாம் இந்த விபரீத முடிவு. பௌத்தத்தின் வீழ்ச்சியில் இருந்து பொறுத்திருந்த உங்களுக்கு இந்தியத் ‘தேசியமும்’, மாநிலத் தேசியங்களும்’ விடுதலைபெறும்வரை பொறுத்திருந்தால் என்னவாம்? என இந்தியத் தேசப்பற்றாளர்களும். நாட்டுப்பற்றாளர்களும், பரதேச தமிழியலர்களும் (Pan-Tamilists), திராவிட இயலர்களும், சைவ-தமிழியர்களும் கேட்டால் அதற்குரிய பதில் தயாராய் உள்ளதா?
LikeLike