‘மொக்க ஃபிகரு” யுவபுரஸ்கார் விருதுபெற்ற மனுஷிக்கு மூத்த எழுத்தாளரின் ‘வாழ்த்து’!

2016-ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது கவிஞர் மனுஷி பாரதிக்கு அவழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால புரஸ்கார் விருது பெறுகிறார் வேலு சரவணன். விருது பெற்றவர்களுக்கு பலர் வாழ்த்துக்களை சொல்லிவரும் நிலையில், சில எழுத்தாளர்கள் எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர்.

கவிஞர் மனுஷ்யபுத்திரனின் வாழ்த்து:

விஞர் மனுஷிபாரதிக்கு சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது இந்த ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது, உயிர்மை வெளியிட்ட ‘ ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ கவிதைத்தொகுப்பிறகு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இந்த விருதிற்கு எல்லாவிதத்திலும் தகுதியானவர். பெரும் தனிமையின் துயர் மிகுந்த உக்கிரமான கவிதைகளை எழுதுவது மட்டுமல்ல, இலக்கியத்தை முழு நேர செயல்பாடாக கொண்டவர். அவரது தொடர் செயல்பாடுகளுக்கு இந்த விருது ஊக்கமளிக்கும்.

உயிர்மையின் நூலொன்று பெறும் இரண்டாவது யுவ புரஸ்கார் இது. ஏற்கனவே ‘கால்கள்’ நாவலுக்காக அபிலாஷ் இந்த விருதைப் பெற்றார். இந்த ஆண்டு பால சாகித்ய புரஸ்கார் விருது பெறும் எனது அருமை நண்பன் வேலு சரவணனுக்கும் என் தீராத அன்பு.

எதிப்புகளும் வந்துள்ளன.

எழுத்தாளர் கே.என். செந்தில் பதிவு செய்திருக்கும் விமர்சனம்:

மனுஷியின் கவிதைகளைப் படித்திருக்கிறேன். வெற்றுச் சொற்கள் என்பதைத் தாண்டி அவற்றிற்கு வேறெந்த தகுதியும் இல்லை. அவருக்கு கவிதை கைவரப் பெறவில்லை. அவர் கவிஞர் அல்ல என்பதே என் வாசிப்பின் நிலைப்பாடு. அவருக்கு இந்த ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.
பல ஆண்டுகளாக சாகித்ய அகாதமி விருதில் நிலவி வந்த குளறுபடிகளும் தரம் தாழ்ந்த விருதுத் தேர்வுகளும் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகக் காணமல் போய் சரியான படைப்பாளிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.ஆனால் அந்தக் கேடுகள் சில ஆண்டுகளாக யுவபுரஸ்காரை பீடித்துக் கொண்டிருக்கிறது போலும். இவ்விருதையொட்டி இவரது கவிதைகள் பிற மொழிகளில் பெயர்க்கப்படக்கூடும். அது சமகால தமிழ்க் கவிதைகளின் மீது இளக்காரமான பார்வையை அவர்களுக்கு அளிக்க வகைசெய்யும். நம் மொழிக்கு தலைகுனிவையே உருவாக்கும்.

ஆனால் இந்த அறிவிப்பில் மிக மகிழ்ந்த தேர்வு குழந்தை இலக்கிய பங்களிப்பிற்காக வேலு சரவணனுக்கு வழங்கப்பட்டிருப்பதே. முன்னரே சரவணனைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தாமதமான அங்கீகாரம். வேலு சரவணக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தனது முகநூல் பதிவில், ‘மனுஷி பாரதியின் கவிதைகள் காகித மதிப்புகூட பெறாத குப்பைகள்… மிகு பாவனைகளும் தட்டைத்தன்மையும் போலியான வெளிப்பாடுகளும் கொண்டவை. பல கவிதைகள் அதன் அளவில் முழுமை இல்லாதவை. இந்தக் கவிதைகளைத்தான் தமிழ் நவீன கவிதையின் தற்போதைய முகம் என இந்தியா முழுக்க எடுத்துச் செல்வார்கள் என்றால் அதைவிடவும் அவமானகரமான விஷயம் இங்கில்லை.

கவிதைக்குத்தான் விருது என்றால் வெய்யில், நரன், சபரிநாதன்தான் எனது தேர்வு. இவர்களைப் போன்றவர்கள் போட்டியில் இருக்கும்போது இந்த விருதை மனுஷிக்கு எப்படிக் கொடுத்தார்கள்…ஆரம்பம் முதலே அந்தப் பெண்ணை தகுதிக்கு மீறி புகழ்ந்துவந்த பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், எஸ்.சண்முகம் உள்ளிட்ட மூத்த ஆளுமைகளே இதற்குத் தார்மிகக் காரணம். நான் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேசிப் பேசி பகையை உருவாக்கிக்கொண்டதுதான் மிச்சம் என அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். ஆனால் எங்கே விடுகிறார்கள்.” என எழுதியிருக்கிறார்.

இந்தப் பதிவுக்கு எழுத்தாளர் லக்௯மி மணிவண்ணன் அளித்துள்ள பின்னூட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாகித்ய அகாதமி மனநோயாளிகளின் கூடாரமாகிவிட்டது.

தமிழில் பரிசுகளுக்கு பரிந்துரைகளை அனுப்புகிற பொறுப்பில் இருப்போரில் பெரும்பாலோர் மனநலம் பிறழ்வுற்ற தரகர்கள்.இவர்கள் நவீன இலக்கியம் கவிதை ,சிறுகதை ஒன்றையுமே அறியமாட்டார்கள். தகுதி குன்றியோருக்கு சாகித்ய அகாதமியின் பெறுமதிகள் போய் சேருவது என்பது வாடிக்கையான ஒன்றுதான்.அதனை கண்டு சொல்வதற்கும் ஏதுமில்லை. ஆனால் அதனினும் கீழாக சம்பந்தமே இல்லாமல் ஒருவருக்கு போய் சேரும் போது என்ன நடக்கிறது என்பதே விளங்குவதில்லை.இந்த விருதுகளின் தரகர்களை வாசகர்கள் இனம் கண்டு சாகித்ய அகாதமியை புறக்கணிக்க வேண்டும்.
சபரிநாதன், இசை, கதிர்பாரதி, அதீதன் சுரேன், ஜீனத் நஜீபா, தேவேந்திர பூபதி, தேன்மொழிதாஸ், ராஜன் ஆத்தியப்பன், வே.பாபு, வெய்யில் இப்படி எத்தனையோ பேர் உள்ள மொழியில் மொக்க பிகருகளை நோக்கி பெறுமதிகள் சரிவது கேவலமானது, வெட்கக் கேடானது. தரகர்கள் தங்கள் தள்ளாத வயதில் ரொம்பவும்தான் தள்ளாடுகிறார்கள் பாவம்.

தரகர்களின் பெயர்பட்டியல் பெற கூச்சமின்றி உள்பெட்டிக்கு வரவும்” என எழுதியிருக்கிறார்.

இந்தக் கருத்தை கவிஞர் நாச்சியாள் சுகந்தி “மொக்க பிகரு என்பதுதான் பின்நவீனத்துவ சொல்லாடலா” என வினவியுள்ளார்.

 

4 thoughts on “‘மொக்க ஃபிகரு” யுவபுரஸ்கார் விருதுபெற்ற மனுஷிக்கு மூத்த எழுத்தாளரின் ‘வாழ்த்து’!

 1. கே.என்.செந்தில்
  இளங்கோகிருஷ்ணன் நீங்கள்லாம் எழுத்தாளர் கவிஞர்னு வெளிய சொல்லீறாதிங்க என்ன?…
  ஒரு தரம் தெரியாது உங்களுக்கு…
  எப்படிப் பேசனும்னு முதல்ல அத கத்துக்கிட்டு வாங்க…
  அப்புறம் எழுதலாம்…..;

  Like

 2. டேய் லஷ்மி மணிவண்ணா!… குடிகார நாயே கஞ்சா குடிக்கிற நாயே உன்னோட ஆத்தாளயோ பொண்டாட்டியையோ போய் சொல்றா மொக்க பிகருனு நீ சரக்கப் போட்டுட்டு எழுதுறதெல்லாம் ஒரு கவிதை நீயெல்லாம் ஒரு கவிஞன்?… நீ இலக்கியம் பத்தி பேச வந்துட்ட, விக்ரமாதித்யனோட நீ சரக்கடிச்சிட்டு அம்மணமா கெடந்தது எனக்குத் தெரியாதுனு நெனச்சியா?…

  மு.ம.சரவணன்
  சங்கரன்கோவில்
  9865156209

  Like

 3. டேய் லஷ்மி மணிவண்ணா!… குடிகார நாயே கஞ்சா குடிக்கிற நாயே உன்னோட ஆத்தாளயோ பொண்டாட்டியையோ போய் சொல்றா மொக்க பிகருனு நீ சரக்கப் போட்டுட்டு எழுதுறதெல்லாம் ஒரு கவிதை நீயெல்லாம் ஒரு கவிஞன்?… நீ இலக்கியம் பத்தி பேச வந்துட்ட, விக்ரமாதித்யனோட நீ சரக்கடிச்சிட்டு அம்மணமா கெடந்தது எனக்குத் தெரியாதுனு நெனச்சியா?…

  மு.ம.சரவணன்
  சங்கரன்கோவில்
  9865156209

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.