திமுகவின் கடைசி முதல்வர் கருணாநிதிதான்; இனி ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வரமுடியாதும் என அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ஆவடி குமார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தெரிவித்தார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ‘காலத்தின் குரல்’ என்ற விவாத நிகழ்ச்சியில், “எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் அதிமுக அணிகள் மீது புகார் சி.பி.ஐ. விசாரணை அவசியமா?” என்ற தலைப்பில் செவ்வாய்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை மு.குணசேகரன் நெறியாள்கை செய்தார்; அதிமுக அம்மா அணி சார்பில் பேச்சாளர் ஆவடி குமார், திமுக சார்பில் வழக்கறிஞர் பரந்தாமன், பத்திரிகையாளர்கள் ப்ரியன், கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.
விவாத நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் எம் எல் ஏக்கள் விலைபோனது குறித்து பேசப்பட்டது. அப்போது திமுகவின் பரந்தாமன் வாக்களித்த மக்கள் பாவம்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதிமுக அத்தியாயம் ஒரு கரும்புள்ளி’ என தெரிவித்தார். அதற்கு எதிர்வினையாற்றிய ஆவடி குமார், “திமுகவின் கடைசி முதலமைச்சர் கருணாநிதிதான் அதற்கு பிறகு வாய்ப்பில்லை, இதை நீங்கள் வரலாற்றில் பார்ப்பீர்கள். ஸ்டாலின்(திமுக செயல்தலைவர்) தமிழகம் முழுவதும் உருண்டு வந்தால் ஆட்சியைப் பிடிக்க முடியாது” என தெரிவித்தார்.
குறுக்கிட்டு பதிலளித்த பரந்தாமன், “தளபதிதான் அடுத்த முதல்வர்; நீங்கள் விரும்பி சட்டையைக் கிழித்தாலும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது” என்றார்.