நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் சதீஷ் அப்போது ஐஐடியில் இரட்டைக்குவளை முறை இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
“ஐஐடியை பொறுத்தவரையில் பத்து கேண்டீன்கள் இருக்கின்றன. எந்த கேண்டீன் வேண்டும் என்று மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்யலாம். ஆனால் இவை எல்லாமே சைவம் மட்டுமே. சில கேண்டீங்களில் மட்டும் அசைவம் தொட்டுக்கொள்வதற்கு, அதாவது சைட் டிஷ்ஷாக தருவார்கள். அது மெஸ் பில்லில் வராது. நாங்கள் தனியாக பணம் கட்டுவோம்.
ஆனால், அசைவத்திற்கென்று தனி பாத்திரத்தைதான் ஒதுக்கி இருப்பார்கள் அந்த பாத்திரத்தில் சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும். அதை தனியாக ஒதுக்கி வைத்திருப்பார்கள். வேறு உணவு, அதாவது சைவ உணவு வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களுடன் ஒட்டிவிடக்கூடாது என்பதில் கூட மிக கவனமாக இருப்பார்கள்.
அதுமட்டுமல்லாமல், சிவப்பு பாத்திரத்தை கழுவுவதற்காக தனி அண்டாக்கள் வைத்திருப்பார்கள். இன்று வரையிலும் அசைவம் சாப்பிடுவதை ஒரு தீண்டத்தகாத விஷயமாகவே ஐஐடியில் வைத்திருக்கிறார்கள்” என்றும் சதீஷ் தெரிவித்திருக்கிறார்.