சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மாட்டிறைச்சி தடை விதிக்கும் அறிவிக்கையை எதிர்த்து சென்னை ஐஐடி வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாட்டுக்கறி உண்ணும் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்த விழாவில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான முனைவர் பட்ட மாணவர் சூரஜை, மற்றொரு வலதுசாரி மாணவர் அமைப்பினைச் சேர்ந்த 6 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சூரஜின் இடது கண் பலமாக காயமடைந்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சூரஜின் நண்பர் அபினவ் தெரிவித்துள்ளார்.