இறைச்சிக்காக மாடுகள் விற்பதைத் தடை செய்து மத்திய அரசு அண்மையில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இதற்கு தடை விதிக்குமாறு மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆஷிக் இலாகி பாபா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில், ‘உணவைத் தெரிவு செய்வது அவரவர் தனிப்பட்ட உரிமை; அதில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. இந்த சட்டம் கடந்த 1960ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதைத் தடுப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கிறது. எனவே, இந்த புதிய விதிமுறையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்றே விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கால்நடைகள் விற்பனையை ஒழுங்குபடுத்தவே சட்டம் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் புதிய உத்தரவை அமல்படுத்த நான்கு வாரங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உயர்நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மோடியின் மாட்டு (அரசியல்) சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் (மதுரைக் கிளை) தடை!
*
“பிராணிகள் வதை தடுப்புச் சட்ட விதிகள் -2017” என்ற பெயரில், ரமலான் நோன்பு துவக்க நாளில், பாஜக காவிப் பாசிஸ்டுகள் கொண்டு வந்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என திருமதி.S.செல்வ கோமதி என்பவர் தொடுத்த வழக்கில், இன்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பை வழங்கியது.
“உணவு என்பது அடிப்படை உரிமை.. அதில் தலையிட அரசுக்கு அதிகாரமில்லை” – என உயர்நீதிமன்ற நீதிபதிகள் M.V.முரளிதரன் மற்றும் C.V.கார்த்திகேயன் அடங்கிய அமர்வு
கருத்து தெரிவித்ததுடன், மத்திய சட்டத்தை அமலாக்க கூடாது என நான்கு வார காலத்திற்கு இடைக்காலத் தடையும் விதித்தது. Stayed.
#இத்தீர்ப்பு_நாடுமுழுவதற்கும்_பொருந்தும்!
இந்த தீர்ப்பு நாட்டு மக்களுக்கு சிறிது நம்பிக்கையைக் கூட்டியுள்ளது. எனினும்…இது இடைக்காலத் தடை தான்!
#மோடியின்4ம்_ஆண்டில்
இப் புதிய சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் வரையிலும்…
காவிப் பாசிஸ்டுகளின் மாட்டு அரசியலுக்கு நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டும் வரை எதிர்ப்புப் போராட்டங்கள் தொடரட்டும்!