நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்தைகளில் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்க மற்றும் வாங்க முடியும். இறைச்சிக்காக காளைகள், ஒட்டகங்கள், எருமைகள், பசுக்கள், இளம் காளைகள் மற்றும் பசுக்கள் ஆகியவற்றை விற்க முடியாது.
எழுத்தாளர் மாலதி மைத்ரி:
பசு, கன்று, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை இறைச்சிக்கு விற்க வெட்ட தடை. மத்திய அரசு திடீர் உத்தரவு.
ஏழை எளிய மக்களின் விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும் சத்துணவு உரிமையிலும் அத்துமீறி கை வைக்கிறது பாஜக பாசிச அரசு.
லல்லு பிரசாத் அறிவித்த மாதிரி விவசாயிகளால் பராமரிக்க முடியாத அடிமாடுகளை பாஜக இந்துத்துவா கூட்டத்தினரின் வீட்டு வாசலில் கட்டனும். அவர்களின் மாதாவை அவர்களே காப்பாற்றட்டும். எதிர் கட்சிகள் செயல்படுத்துவார்களா.
சமூக செயல்பாட்டாளர் சிந்தன்:
#இந்துத்துவா #மாட்டுக்கறிதிருவிழா
மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்பதைத்தான் இந்த அரசு மறைமுகமாக நமக்கு உணர்த்த முயற்சிக்கிறது….
ஆர்எஸ்எஸ், சனாதன் சன்ஸ்த்தா, அபினவ் பாரத், இந்து மகாசபை, பஜ்ரங்தளம், சீக்சங்கித், விஹெச்பி, இந்து ஐக்கிய வேதி, கௌரக்சா மன்ச், இந்து யுவ வாகினி, ஸ்ரீராம் சேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இத்தியாதி இத்யாதி என பல்வேறு அமைப்புகளாக இந்துத்துவ அமைப்புகள் சிதறிக்கிடப்பது போலத் தோன்றினாலும், அவர்களின் கொள்கையும் இலக்கும் ஒன்றுதான். அவர்களுக்கெல்லாம் கட்டளை பிறப்பிக்கும் தலைமை இயக்கம் ஒன்றுதான்…. மாடுகளின் மீது அமர்ந்துகொண்டு, மனிதர்களைக் கொல்லும் நிலைக்கு கொண்டுபோகிறார்கள்….
ஆனால் முற்போக்கு, இடதுசாரி இயக்கங்களாகிய நாம்தான் சிதறுண்டு கிடக்கிறோம்.. நட்புமுரண்களை மீறி, ஒருங்கிணைந்த கூட்டு செயல்பாடுகளுக்கான களத்தினை எங்கிருந்தாவது எவ்வாறாவது அமைத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்… தேசமெங்கும் மாட்டுக்கறித் திருவிழாக்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.
சிபிஎம் செய்தி தொடர்பாளர் இரா சிந்தன்:
கால்நடை விற்பனை தடை என்பதன் விளைவுகள் என்னவாகும்?
ரமலான் காலம் என்பதால் இந்திய முஸ்லிம்கள் மீது பண்பாட்டு தாக்குதல். பாஜகவின் அல்ப அரசியலுக்கு மற்றொரு தலைப்பு.
வறட்சியில் தவிக்கும் விவசாயிகள், கால்நடையை விற்க முயன்றால் – உள்நாட்டில் ‘டிமாண்ட்’ குறைந்து, ஏற்றுமதியாளர்களை நாடச் செய்திடும் பொருளாதாரத் தாக்குதல்.
மாடு வெட்டும் தொழிலில் உள்ளவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சமூகங்களின் வேலைவாய்ப்பில் தாக்குதல். உணவுப் பழக்கத்தின் மீது பொருளாதாரச் சுமை ஏற்றுதல்.
ஏற்றுமதி நிறுவனம் நடத்தும் பாஜகவினருக்கு, ஏற்றுமதி செய்ய குறைந்த விலையில் இறைச்சி, கள்ளக்கணக்கில் இந்தியாவிற்குள்ளேயே விற்று இரட்டிப்பு லாபம். இரட்டிப்பு நன்கொடை பாஜகவுக்கு
பத்திரிகையாளர் மரக்காணம் பாலா:
மாடு புனிதம். ஓகே. ஒட்டகம் எங்கிருந்து வந்தது? இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை அப்பட்டமாக தெரிகிறது.
ஆட்டிறைச்சி, கிலோ 600. மாட்டிறைச்சி கிடைக்காதவர்கள், இனி ஆட்டிறைச்சிக்கு தாவவேண்டும். இதனால், கடுமையான விலை உயர்வு ஏற்படும்.
மொத்தத்தில், மனுசனுக்கு ஓட்டு போட்டு மாடுகளுக்காக ஆட்சி நடைபெறுகிறது.
மாட்டிறைச்சி உட்கொள்ளாத வெண்ணைகளும் இந்த விலை உயர்வு மற்றும் விற்பனைக்கு தடையால் பாதிக்கப்பட போகிறார்கள்.
இனி, எவனும் மாடு வளர்க்கமாட்டான்.
உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.
மாடும் அழியணும், நாடும் அழியணும் அதுதாண்டா வளர்ச்சி.
எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி:
மோடியின் லட்சியம் ஹிந்து ராஷ்டிரம் மட்டுமல்ல, ப்ராஹ்மண ராஷ்டிரமும்தான்….
சிறுபான்மையினரின் ரம்ஜான் சிறப்பு👹 உணவை இல்லாமல் ஆக்குவதில் இருக்கிறது இந்தக் குள்ளநரித் தந்திரம்
மாடும் அழியணும், நாடும் அழியணும் அதுதாண்டா வளர்ச்சி.
திரை செயல்பாட்டாளர் மோ. அருண்:
என் உணவு, என் உரிமை.
இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்பது வெளிப்படையாகவே மாட்டுக்கறி உன்ன தடை என்பதுதான். ஒரு உணவை உண்ணக்கூடாது, விற்கக்கூடாது என்று தடை விதிக்க பல்வேறு காரணங்களை முன்வைக்க வேண்டும். மேகி நூடுல்ஸ் அப்படியாக ஆரோக்கியத்திற்கு எதிரானது என்று சாமியாரின் நூடுல்ஸ் விற்பனையில் சக்கை போடு போட்டது. இப்போது மாட்டுக்கறிக்கு ஏன் அரசு தடை விதிக்க வேண்டும். அதற்கான காரணம் என்ன என்பதை நீதிமன்றங்களில் தேடுவது யாதொரு பலனையும் தராது. வீதிகளில் இறங்கி போராடித்தான் ஆகவேண்டும். என் உணவு என் உரிமை என்று மோடி அரசுக்கு எதிரான கடும் தீவிரமான போர் வெடிக்க வேண்டும். ஒரு தனிமனிதன் உணவு மீதான உரிமையை தட்டிப்பறிக்க எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை என்பதை மத வெறியர்களுக்கு உணர்த்தியாக வேண்டும். உடனடியாக மாட்டுக்கறி திருவிழாக்கள் நாடு முழுவதும் நடைபெற வேண்டும். போராட்டம் வெடிப்பதற்கான எல்லா சூழலையும் இந்த மத்திய அரசு ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அதன் உச்சக்கட்டம் என்ன என்பதை அரசு விரைவில் தெரிந்துக்கொள்ளும்.
எழுத்தாளர் ஒடியன் லட்சுமணன்:
மாட்டுக்கறி ஏன் சாப்பிடக்கூடாது
அது கோமாதா குல தெய்வம்…
ஓஹோ..
பசு..பரந்தாமன் இல்லியோ…
அதுசரிய்யா….வெட்டலாமா கூடாதா
வெட்டக்கூடாது
அப்புறம் மாட்டுக்கறி .எக்ஸ்போர்ட் செய்யற கம்பனிகள் வெட்டுதே…
அது வெட்டிக்கலாம்.வெளிநாட்டுக்கு சப்ளை செஞ்சுக்கலாம்
என்னாங்கடா உங்க டக்கு
எழுத்தாளர் சம்சுதீன்ஹிரா:
யூதவிழாக்களுக்குத் தடைவிதிப்பதன் மூலமாகவே தன் கணக்கை ஆரம்பித்தான் ஹிட்லர். ஆங்காங்கே எழுந்த மெல்லிய எதிர்ப்புக்குரல்கள் தேசவெறிக்கும்பலின் வெறிக்கூச்சலில் அமுங்கிப்போனது. நொந்துகொண்ட யூதர்கள், மறைந்து ஒளிந்து தங்கள் வீடுகளுக்குள் மதச்சடங்குகளை அஞ்சியஞ்சிக் கொண்டாடினார்கள்…
ஒருவித அவநம்பிக்கையோடுதான் சமூகத்தைத் திரும்பிப்பார்த்தான் ஹிட்லர். எந்தச் சலனமுமின்றி நேர்கோட்டில் மயான அமைதியுடன் இயங்கிக்கொண்டிருந்த சமூகம் அவனது செயலுக்கு அங்கீகாரமளித்தது.. சமூகத்தின் மௌனம் அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கக்கூடும்..
ஃபியூரர் வாழ்க..!!
ஃபியூரர் வாழ்க..!!
தேசபக்தர்களின் முழக்கங்களுக்குள் யூதர்களின் முனுமுனுப்புகள் மெல்லமெல்ல அடங்கிப்போயின. சமூகம் இன்னும் மூர்க்கமாக தனது மௌனத்தைக் கடைபிடித்தது…
யூதக்குழந்தைகள் கல்வி கற்கத் தடை.. யூதர்கள் அரசு வேலைசெய்யத் தடை.. யூதர்கள் வியாபாரம் செய்யத்தடை.. யூதர்கள் பொது இடங்களில் புழங்கத்தடை… என்றெல்லாம் நீண்டுசென்ற தடைப்பட்டியல் இறுதியாக இப்படி முடிந்தது..
‘யூதர்கள் உயிர்வாழத்தடை..’
இந்தத் தடைகளுக்குப் பின்னுள்ள அரசியலைப் புரிந்துகொண்டு, சமூகம் சுதாரித்து எழுவதற்குள் அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர்..
#வரலாறு_மிகச்சிறந்த_ஆசான்…
சமூக-அரசியல் விமர்சகர் வில்லவன் இராமதாஸ்:
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை.
முஸ்லிம்கள் விற்க/வாங்கத் தடைன்னு தெளிவா சொல்லுங்க. எக்ஸ்போர்ட் பண்ற உங்க கட்சிக்காரங்க யாராவது பயந்துறப்போறாங்க.
பத்திரிகையாளர் அருள் எழிலன்:
மாட்டுக்கறி உண்பது என் விருப்பம். என் உரிமை நான் உண்பேன். மாட்டை கொன்றுதான் மாட்டுக்கறி உண்ண முடியும்! பெரும்பான்மை மக்களின் உணவு பழக்கத்தை மிதிக்கும் மோடி ராஜிநாமா செய்ய வேண்டும்!