குழந்தைகளை கடத்துகிறார்கள் என்கிற வாட்ஸ் அப் வதந்தியை நம்பி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீப மாதங்களாக தலித்துகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களும் அவர்கள் வன்முறை கும்பலால் அடித்துக்கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழலில் குழந்தைகளை கடத்த வருகிறார்கள் என்கிற வதந்தி செய்தியை நம்பி, ஒரே நாளில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவலர்கள் முன்பே ஜாம்ட்ஷெட்பூரில் மூன்று குழந்தைகளுக்கு தந்தையான முகமது நயீம் என்பவர் அடித்துகொல்லப்படும் காட்சி வீடியோ பதிவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.