தமிழ் ஸ்டுடியோ, தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னெடுக்கிறது. வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் பல்வேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடல் நடத்திக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சினிமா எழுத்து, அதாவது சினிமா ரசனை, சினிமா விமர்சனம், சினிமா நூல்கள் மொழியாக்கம், தொழில்நுட்ப நூல்கள் என சினிமா கல்வி சார்ந்த புத்தகங்கள், சினிமா குறித்து எப்படி எழுதுவது என்பது குறித்த கலந்துரையாடல் பியூர் சினிமா அரங்கில்ல் நடைபெறவிருக்கிறது.
தமிழின் மிக முக்கியமான சினிமா எழுத்தாளர்கள், ஆவணப்பட திரைப்பட இயக்குனர்களான அம்ஷன் குமாரும், எம். சிவகுமாரும் பங்கேற்கிறார்கள். சினிமா சார்ந்து எழுதுவது, சினிமாவை எழுத்திற்காக எப்படி அணுகுவது, சினிமா விமர்சனத்தின் எழுத்துமுறை போன்றவற்றை இந்த சந்திப்பில் கலந்துரையாடலாம்.
நாள்: 14-05-2017, ஞாயிறு மாலை 5-30 மணிக்கு.
இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.