நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
இந்த நிலையில், சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன், “தன்னுடைய அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் வாயிலான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் எப்படி வெளியிட்டது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“நான் என்ன சமூக விரோதியா ? தீவிரவாதியா ? பின் எப்படி அவர்கள் எனக்கெதிராக இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினார்கள் ? என் தரப்பு நியாயம் எதையும் கேட்காமல் எனக்கெதிராக பல்வேறு உத்தரவுகளை அவர்கள் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறையை பற்றிய பயமில்லை எனக்கு. டாக்டர் அம்பேத்கரின் தத்துப்பிள்ளை போன்றவன் நான். நான் பைத்தியம் என்கிறார்கள். பைத்தியம் என்றால் எதற்காக சிறைக்கு அனுப்புகிறார்கள்.
மக்கள் என் பின்னால் இருக்கிறார்கள். எதைப்பற்றிய கவலையும் இல்லை எனக்கு” என்று அந்த பேட்டியில் நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார்.
Source: IndianExpress
உங்கள் போராட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
LikeLike