செல்வா
நேற்று ஒரு பூணூல் இப்படி அறுக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு பாஜக வோ, ஆர்.எஸ்.எஸ், எச் ராஜா வோ எப்படி அலறியிருப்பார்கள் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?..
இல்லையென்றால் மைலாப்பூரில் ஒரு பூணூல் அறுபட்டதற்கு மொத்த இந்திய ஊடகமும் பீரோக்ராசியும் எப்படி அலறியது என்றாவது தேடி படியுங்கள், உங்கள் மத நம்பிக்கை கூட உங்கள் மதத்தில் தாழ்த்தப்பட்டதுதான், அதுதான் திரும்ப திரும்ப சொல்றோம்,
ஒரு இஸ்லாமியன் அது எந்த இஸ்லாமியனாக இருந்தாலும் பாதிக்கப்படும்போது அல்லது அவரது மத நம்பிக்கை நெருக்கடிக்குள்ளாகும் போது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் குரல் கொடுக்கிறது, பாரபட்சமெல்லாம் கிடையாது,
ஆனால் இங்க பாருங்கள்… கீழே அவமானப்படுத்த படுவதும் உங்க இந்து மத அடையாளம்தான், ஆனால் எந்த இந்து தலைவர்களிடம் கட்சிகளிடம் இருந்தும் எந்த கண்டனமும் வரப்போவதில்லை,
இதற்கு மட்டுமல்ல இந்துக்கள் தமிழகத்திலோ ஈழத்தில் கொல்லப்பட்டாலும் சரி இந்துக்கள் வாழ்வாதாரம் மீத்தேன் நெடுவாசல், கெயில் என்று நசுக்கப்பட்டாலும் சரி உங்கள் இந்து மத பாதுகாவலர்களோ ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியோ பாஜகவோ உங்களுக்காக போராட போவதில்லை, போராடியதும் இல்லை,
அவர்களுக்கு வேண்டியதெல்லாம் உங்களுக்கு வழியும் ரத்தத்தில் ஏதாவது இஸ்லாமிய வேல்யூ இருக்கா என்பதுதானே தவிர உங்களுக்கு வழியும் ரத்தத்தை பற்றியல்ல கவலையல்ல..
அதைத்தான் திரும்ப திரும்ப சொல்றோம், இந்துத்துவாவை விமர்ச்சிக்கும் பொது “நீ இந்து மதத்தை மட்டுந்தான் விமர்ச்சிப்பியா இஸ்லாம் கிருத்துவம் எல்லாம் கண்ணுக்கு தெரியாதா”ன்னு வந்து நரம்பு புடைக்க மல்லுக்கட்டும் நண்பர்களுக்கு
உங்கள் மத நம்பிக்கை கூட உங்கள் மதத்தால் உங்கள் மத தலைவர்களால் உங்கள் மத காவி கட்சிகளால் தீண்டப்படாததுதான்.
செல்வா, சமூக-அரசியல் விமர்சகர்.