குமார் அம்பாயிரம்
சீமை கருவேல் மரங்கள் அகற்றப் படுவது குறித்து இருவேறு வகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இது மக்களுக்கான எரிபொருள் வேலைவாய்ப்பு என்றெல்லாம் பேசப்படுகிறது. ஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா? இம்மரத்தை வெட்டி விற்பதனால் பொருளாதார மேம்பாடெல்லாம் வராது. ஆட்டுக்கும் மாட்டுக்கும் தழை வெட்டி போட்டவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். இதன் விதைகளை மட்டும் தான் ஆடுகள் தின்கின்றன இலைகளை அல்ல. மாடுகள் அதித வறட்சியில் ரெண்டு கடி கடிக்கின்றன. நான் ஒரளவு எல்லா மரங்களடிலும் உறங்கி ஒய்வெடுத்திருக்கிறேன். ஒவ்வொரு மரத்தடி நிழல் பற்றியும் ஒரு கட்டுரை வனையலாம் சீமைகருவேல் மரநிழல் தாங்க முடியா உடல் வலியைத்தான் கொடுத்தது. கிளெரி செடியா சீமைகருவேல் இரண்டின் விதைகளையும் இலைகளையும் தொடர்ந்து சாப்பிட்ட ஆநிரைகளுக்கு சினை பிடித்தல் தள்ளிப் போவதை அனுபவ பூர்வமாக பார்த்திருக்கிறேன்.
இதேபோல் தான் மான் காது( silver acacia) தேன் பூ உன்னிச் புதர் ( lantana) நீலகிரி தைலமரங்கள். பாலைவன மரங்களான இவற்றுக்கு இருப்பது இலையே அல்ல இவற்றின் விதை முளைக்கும் போது இரண்டே இலைகள் விடும் பின் இலை போல் வருபவை அதன் நரம்பு தண்டுகளே. தண்டுகளின் உறிஞ்சும் இயல்பில் காற்றின் ஈரப்பத்த்தை உறிஞ்சி எடுத்து விடுகின்ற. அது இலையாக இல்லாதிருப்பதால் தான் மக்குவதிலும் நிலத்தை மூடி புல் பூண்டுகள் வளராமல் செய்து மண் அறிப்பிற்க்கு வழி செய்கிறது எண்ணற்ற மலைப்பிரதேசங்களில் பரவிவிட்ட உன்னி புதர் (lantana) சிறு பறவைக்கும் புதராகமல் நிழலாகமல் அடர்ந்து பரவி வருகிறது. இதை பயன்பாட்டுக்கு மலை கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உன்னி புதரிலிருந்து கூடைகள் முக்காலிகள் செய்யலாம் என்ற திட்டங்களும் நிசத்தில் சாத்தியமின்றி மூழ்கிவிட்டன.
குளிர்சாதன அறைக்குள் குந்திக்கொண்டு ஏழைகளின் நன்மை தீமை பற்றி கதை அளக்க வேண்டாம் களத்திற்க்கு வந்து பாருங்கள். வெயில் நிழல் பரியும்.அதித வெயில் பிரதேங்கள் தான் மழைக் காடுகளின் பூர்விகம் வெயிலை நன்கு சுவைத்து தின்று தடித்த வழவழப்பான பன்னூரு வித பச்சை காட்டும் நிழல் அடியிலும் பெரணிகளையும் பூஞ்சைகளையும் காளான்களையும் வளரவிடும் பிராந்திய தாவரங்களின் நிழல்களே மென்மையாவை.பிற நிழல்களே என்றாலும் வெட்டி எறியப்படத்தான் வேண்டும். எனவே எல்லா நிழலும் நிழலல்ல நோவாத சிரம் ஆற்றும் நிழலே நிழல். விவாதிக்கலாம் வாருங்கள். குறைந்த பட்சம் சீமை கருவேல் மரத்தடி நிழலையும் புங்கமர நிழலிலும் ஒய்வெடுத்து நீங்களே அனுபவபூர்வமாக முடிவுக்கு வரலாம்.
மரங்களுடனான அனுபவத்தை அருமையாக விளக்கியிருக்கிறார்.
நானும் விவசாயத்தில் பட்டயம் படித்தவன் + அந்த துறையில் தாவரவியல், உயிர்வேதியல், நுண்ணுயிரியலும் கலந்து முனைவர் பட்டம் பெற்றவன் என்பதால் இவர் கட்டுரையை 100% வழிமொழிகிறேன்.
LikeLike