’வெறுப்பின் நகங்கள்’: சுஜாதா விருது சர்ச்சைகளுக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

சுஜாதா பெயரில் பெரும் பார்ப்பனப் பத்திரிகை விருதுக் கொடுக்கலாம். தீவிர இலக்கிய பகுத்தறிவு பங்காளின்னு சொல்லிக்கொள்ளும் நபர் கொடுப்பதற்கு பெயர் பார்ப்பனிய காவடி அரசியல்.

– உயிர்மை குறித்து மாலதி மைத்ரி

ஊடகங்கள் பதிப்பகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர் நடத்தும் பார்ப்பன சார்போடுதான் இயங்குகின்றன. அதில் குறைந்தப்பட்ச அறத்தோடு இயங்கும் வெளியை நாம் பயன்படுத்தலாம்.-

– காலச்சுவடு குறித்து மாலதி மைத்ரி

கால்ச்சுடின் அறம் குறித்த மாலதி மைத்ரியின் கருத்திலிருந்து மாலதி மைத்ரியின் அறத்தை தெரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் நவீன எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரது சாதிக் கூட்டணிகளையும் சாதி வெறிகளையும் நான் மிக வெளிப்படையாக அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். குறிப்பாக பிராமணர் எழுத்தாளர்கள் லாபி, பிள்ளைமார் எழுத்தாளர் லாபி, நாடார் எழுத்தாளர் லாபி, வன்னியர் எழுத்தாளர் லாபி ஆகியவை மிகவும் பலமானவை. விருதுகள் கொடுக்கபடுவது, ஃபெல்லொஷிப் போன்ற விஷ்யங்கள், வெளிநாட்டு பயணங்கள், ஊடகங்களில் தங்கள் ஆட்களை வைத்து தமக்கான வாய்ப்புகளை உருவாக்கிகொள்வது என மிக உக்கிரமான சாதிய செயல்பாடுகள் நவீன இலக்கிய சாதிக்குழுக்களால் முன்னெடுக்கபடுகின்றன. இந்த கூட்டணிகள் கன்ணுக்கே தெரியாது. ஆனால் தலித் எழுத்தாளர்கள் மட்டும்தான் ஏதோ சாதி அடையாளத்தோடு செயல்படுவதுபோன்ற ஒரு தோற்ற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் தலித் எழுத்தாளர்களுக்கு என்று எந்த லாபியும் இல்லை என்பதுதான் உண்மை.

இந்த நிலையில் சுஜாதாவை சாதி அடையாளத்தோடு தாக்குகிற மாலதி மைத்ரி போன்ற மூடர்கள் சுஜாதாவைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சுஜாதாவின் தனிப்பட்ட வாழ்வில் சாதியத்தின் எந்த கூறையும் அனுமதித்தவர் அல்ல. அவர்கள் குடும்பத்தினரும் அப்படித்தான். சுஜாதா முழ்க்க முழுக்க ஒரு நவீன வாழ்வியல் மதிப்பீடுகளை தன் எழுத்துக்களில் மட்டுமல்ல, வாழ்விலும் கடைபிடித்தவர். அவருக்கு பிராமண சங்கம் விருது கொடுத்தது என்று சொல்லி தூற்றுகிறவர்கள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள். தமிழகத்தில் விருது பெற்றவர்கள அனைவரும், அந்த விருது கொடுக்கிற அமைப்பின் கோட்பாடுகளை ஏற்றுத்தான் விருது பெறுகிறார்களா? பிற ஆதாயங்களை அடைகிறார்களா? பிழைப்பிற்காக வேலை செய்யும் நிறுவனங்களின் மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்டுதான் செயல்படுகிறார்களா? எத்தனை எத்த்னை கீழ்தரமான சம்ரங்கள். அந்த சமரச புத்திதான் கலாச்சுவடின் அறத்தை உயர்த்திப்பிடிக்க வைக்கிறது.

சுஜாதா தமிழில் அறிவியலைப் பரப்பிய ஒரு நவீன எழுத்தாளர். தன் புனைவுகளால் தமிழ் உரைய நடையை புத்தாக்கம் செய்தவர்.எண்ண்ற்ற நவீன படைப்பாளிகளை வாழ்நாலெல்லாம் பொது வெளியில் அடையாளப்படுத்தியவர். சுஜாதா அப்படி எவ்வளவு நவீன எழுத்தாளர்களைப் பற்றி பேசியிருக்கிறார் என்று ஒரு இண்டெக்ஸ் தயாரித்தால் அது மலைகக வைக்ககூடியதாக இருக்கும். எப்போதும் சுய முன்னிறுத்தலையும் பிற எழுத்தாளர்கள் மேல் ஆழ்ந்த் வெறுப்பையும் கக்குவதையே வாழ்வாக கொண்ட சிறு எலிகளால் சுஜாதா போன்ற ஒரு டைனோசரை புரிந்துகொள்ள முடியாது. எலிகளுக்கு பல் வலிக்கும் போதெல்லாம் எதையாவது கரண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த மொழிக்கு மகத்தான் பங்களிப்புகளை செய்த கலைஞன் ஒருவரின் பெயரால் வழங்கப்படும் இந்த விருதுகள் தமிழின் மிகச்சிறந்த படைப்ப்பாளிகளுக்கே தொடர்ர்ந்து அளிக்கபட்டு வந்திருக்கின்றன. போகன் சங்கருக்கும் அந்த அடிப்படையிலேயே வழங்கபட்டது. ஆனால் அவர் இன்று அந்த விருதை, அது யார் பெயரால் அளிக்கபடுகிறதோ அந்த ஆளுமை, அந்த விருதை பெற்றுக்கொண்டவர்களை கடங்கனேரியான் போன்ற ஃபேஸ்புக் பொறுக்கிகளோடு சேர்ந்துகொண்டு இழிவுபடுத்துகிறார்.. அவர் தனது செயல்களுக்காக நாணமுறுகிற பொழுது ஒன்று வரும். அவரது இந்த லும்பன் முகத்தை அவரே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது அவமானத்தில் கூசிப்போவார்.

சுஜாதா மறைந்தபோது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அது சுஜாதா என்ற மகத்தான ஆளுமைக்கு செலுத்திய அஞ்சலி. நாங்கள் சாதி வெறி இருப்பவர்களை மட்டும்தான் விமர்சிப்போம். அது எந்த சாதியில் இருந்தாலும் சரி. தங்கள் சாதி வெறியை மறைக்க பிராமண எதிர்ப்பை கக்குகிரவர்களோடு எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

நீங்கள் எங்களை நிராககரிககவே முடியாது என்பதன் சாட்சியஙகள்தான் இந்தப் புல்ம்பகள். சுஜாதா சொன்னதுதான்:
‘’ 15 நிமிட புகழுக்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்’’.

மனுஷ்யபுத்திரன், வெளியீட்டாளர்; எழுத்தாளர்.

One thought on “’வெறுப்பின் நகங்கள்’: சுஜாதா விருது சர்ச்சைகளுக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.