முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தில் இருந்து அவர் காலமான தினம் வரை அங்கு என்ன நடந்தது ? என்பதற்கான புகைப்படங்களோ, வீடியோ பதிவுகளோ எதுவுமே இதுவரை வெளியிடப்படவில்லை. சிகிச்சை பெறுபவர்களை அவர்கள் விருப்பமின்றி படமாக்குவதில்லை என்றும் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிப்பதாகவும் அப்பல்லோ தரப்பிலும் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த், தனது முகநூல் பதிவில் “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ-சசி இடையிலான உரையாடல்கள் இடம்பெற்ற வீடியோ வெளிவந்தால்” என்று எழுதி இருக்கிறார்.
Jeyanandh Dhivakaran
கொலை பழி சுமத்தியும் அம்மா அவர்களின் சிகிச்சை படத்தை வெளியிட வில்லை…
காரணம் பச்சை கவுன் உடையில் அம்மா அவர்களின் எதிரிகள்
அதை பார்க்க கூடாது என்பதே ஒரே காரணம்
இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல்…
சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்க்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம்
ஆனால் ஓ.பி.எஸ் கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை பிணப் பெட்டியில் வைத்து தற்போது ஓட்டு கேட்கிறார்
உண்மை வலிமையானது ஒருநாள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தியாக
தலைவி சின்னம்மா இருவரும் மருத்துவமனையில் உரையாடல்கள் வீடியோ வெளிவந்தால்…?
P.H.பாண்டியன்,
மனோஜ்பாண்டியன்,
இவர்களை என்ன செய்யலாம்…?