இந்தி நடிகர் அபய் தியோல் தனது டிவிட்டர் தளத்தில் ” ஃபேர்னெஸ் கிரீம்களை நடிகர்கள் ப்ரோமொட் செய்வது அர்த்தமற்றது, தவறானது, நிறவெறி பிடித்தது” என்று எழுதியது முதல் அது பற்றிய விவாதங்கள் நடிகர்களுக்கிடையே காரசாரமாக நடந்து வருகிறது.
ஃபேர்&லவ்லி கிரீம் விளம்பரத்தில் நடித்தவரான ஷ்ரேயாவிடம் இது பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு “ஃபேர்னெஸ் கிரீம்களை நடிகர்கள் ப்ரோமோட் செய்யக்கூடாது என்ற கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. நிறமாக இருக்க வேண்டும் என்ற எந்தக்கட்டாயமும் இல்லை. இந்தியர்கள் நிறத்தின் பின்னால் ஓடுகிறார்கள் என்பது புரிகிறது.
வெள்ளையாக இருந்தால் மட்டுமே திருமணம் நடக்கும், வேலை கிடைக்கும், வாழ்க்கையில் முன்னேறலாம், என்பது போன்ற விளம்பரங்களால்தான் பிரச்சனைகளே ஏற்படுகிறது.
என்னுடைய வாழ்க்கையில் இரண்டு விளம்பரங்களில் நடித்ததை பெருமையாக நினைக்கவில்லை. ஒன்று கோக் நிறுவனத்தின் விளம்பரம். மற்றொன்று ஃபேர்&லவ்லி விளம்பரம்.” என்று ஷ்ரேயா பதில் அளித்திருக்கிறார்.