ரசித்துக் காதலித்த ஒருவனின் நினைவை எப்படி மறக்கமுடியும் ? கவுசல்யா சங்கரிடம் இளவரசனின் திவ்யா உருக்கம்…..

Gowsi Shankar

இன்று!

என்னைப்பற்றிய அறிமுகமில்லாத ஒரு ’தோழரை’ அவங்க வீட்டுக்குப் போய் சந்திச்சேன்!

ஆனா?

அவங்களப்பத்தி எனக்கு நெறையா அறிமுகமிருக்குது. அந்தத் தோழரை சந்திச்சுப் பேசற வரைக்கும்,அவங்க மேல இருந்த ’எண்ணம்’ வேற!
’எங்களுக்கு’ முன்னாடி தமிழ்நாடே ஒட்டுமொத்தமா, அந்தக் கொடூர நிகழ்ச்சியத் திரும்பிப் பாத்தாங்க!

ரெண்டு பேரு, மனசுக்குப் புடிச்சவங்கள காதலிச்சலிச்சுக்கிட்டதுக்காக! எங்க சாதிப் பொண்ணைக் காதலிக்கிறியான்னு தன்னோட அவங்க ஊர்ல இருக்கற, தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கற, 300 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொளுத்துனாங்க! கலவரம் நடந்துச்சு!

ஏராளமான, பொதுமக்கள் அதுல பாதிக்கப்பட்டாங்க!இவங்களுக்கான வழக்கு நீதிமன்றத்துல நடந்துட்டு இருக்கும்போதே,இவங்க ரெண்டு பேரையும்,
பிரிச்சு வச்சுட்டாங்க! அவங்களுடைய, காதலனும் ’மர்மமான’
முறையில,,,,,,,,,,,,,,,,, ஆனா?இன்னைக்கு அவங்கள சந்திச்சுப் பேசுனதுக்குப் பிறகு!
அவங்கமேல ஏற்பட்ட ’மரியாதைங்கறது வேற’ ஆமாம்!

நான், ’திவ்யா இளவரசனை’ சந்தித்தேன்.

அவங்களும், அவங்க அம்மாவும் மட்டுந்தா அந்த வீட்டுல இருக்காங்க! இப்ப கல்லூரிக்கு போய்ட்டு, வந்துட்டு இருக்காங்க.வீட்ட விட்டு வெளில எங்கேயுமே வருவதில்லை! அக்கம்பக்கம் உள்ளவங்க ’எல்லாரும்’ அவங்களோட ஒவ்வொரு அசைவையும், ’இந்த நிமுசம் வரைக்கும் கண்ணு காது வச்சு பேசீட்டுத்தா இருக்காங்கங்கறதால!ஒரு் பொட்டு வச்சுக்கிட்டு சாதரணமா வெளியில வந்தாக்கூட, “இவளுக்கென்ன பழசெல்லாம் மறந்துட்டு நல்லாதா இருக்கா” ன்னு.  அவங்க வீட்ட சுத்தியுள்ளவங்க சொல்றாங்க.

இப்படி, நெறையா விசயத்துல அவங்க மனசளவுல பாதிக்கப்பட்டிருக்காங்க! அதனால, வீட்டுக்கு வெளியில நடக்கற செய்தி, எதுவும், அந்தத் தோழருக்குத் தெரியறது இல்ல! அவங்கக்கிட்ட நான் ரொம்ப நேரமெல்லாம் பேசறதுக்கு வாய்ப்பு கிடைக்கல. அவங்களால ’மனசுவிட்டும்’ எங்கிட்டப் பேச முடியல.
அவங்க அம்மா பக்கத்துலேயே நின்னுட்டு இருந்ததாலன்னு நான் புரிஞ்சுக்கிட்டன்.

கிடைச்ச நேரத்துல பேசீட்டு இருக்கும்போது, ’உங்களால எப்படி இயல்பா இருக்க முடியுது?’ ன்னு கேள்வி கேட்டேன்.

அதுக்கு அவங்க, ”நான் ரசித்து,ரசித்துக் காதலித்த ஒருவனின் நினைவையும், நிகழ்வையும் என்னால் எப்படி ’எளிதாக மறந்துவிட முடியும்ன்னு’ சொன்னாங்க!

அப்பதா நானும் ஒரு விஷயத்தப் புரிஞ்சுக்கிட்டேன். இத்தன நாள் அவங்கள, இந்தச் சமூகத்துல இருந்து ’கொஞ்சம் பேரு’ திட்டமிட்டு மறைச்சு வச்சிருந்துருக்காங்கன்னு. அவங்களுக்கு நடந்த கொடூரச் சம்பவத்துக்கு ’நீதி’ கேட்கறதுக்கு எல்லாத் தகுதியும்,போராடுற துணிச்சலும் இருந்தும், அவங்களால் பேச முடியல.ஏன்னா? அவங்க பேசுனா தான், தங்கியிருக்கிற அந்த வீட்டுச் சுவத்தப் பாத்து மட்டுந்தான் பேச முடியும்!

அவங்களுக்காகப் போராடுற வெளியே இல்லாம இருக்கு. அந்த, ஊரு மட்டும் பேசாம இருந்திருந்தா திவ்யா இளவரசனை இந்நேரம், இந்தச் சமூகம் சமூக விடுதலைக்குப் போராடுற ’ஒரு புள்ளையா’ பெத்தெடுத்துருக்கு ம்னு, நான் நம்புறேன்!

புகைப்பட : இளவரசனின் அம்மாவும், சங்கரின் கவுசல்யாவும்.

2 thoughts on “ரசித்துக் காதலித்த ஒருவனின் நினைவை எப்படி மறக்கமுடியும் ? கவுசல்யா சங்கரிடம் இளவரசனின் திவ்யா உருக்கம்…..

  1. பொதுவாக இந்துக்கள் இப்படி ஆரத்தழுவுவது கிடையாது. இது இஸ்லாமியரின் வழக்கம். இஸ்லாமிய கலாச்சாரம் இந்துக்களிடையே ஊடுருவுகிறதுனு எவனாச்சும் அறிவுஜீவி புலம்ப போறான்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.