நிழலழகி – 6: பாத்திமாவையும் ஜீனத்தையும் உங்களுக்குத் தெரியுமா?

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

Alif | NK Muhammed Koya | Malayalam | 2015

நான் பள்ளியில் படிக்கும்போது “வலிமையான பெண்மணி” என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்றேன். சரோஜினி நாயுடு பற்றி ஏற்ற இறக்கத்துடன் அழுத்தமான பதிவுகளுடன் கனீர் குரலில் பேசி முதல் பரிசை வென்றேன். ஆனால், வாழ்க்கை என்றால் என்ன என்று ஓரளவு புரிந்துவிட்ட இப்போதைய நிலையில், அதே தலைப்பு எனக்கு கொடுக்கப்பட்டால், எனது பாட்டியை பற்றிதான் பேசுவேன். ஆம், நான் கண்ட ஒரு தைரியமான பெண் என்றால் அது என் அம்மாவின் தாய்தான். எங்கள் வீட்டில் அம்மாவையும் அப்பாவையும் “மம்மி… டாடி…” என்று கூப்பிடும் வழக்கம் இருந்ததால், பாட்டியை “அம்மா” என்றே அழைப்போம். பாட்டிக்கு இப்போது 72 வயது.

பிறந்து சில வருடங்களில் தனது தாயை இழந்து சின்னம்மா பிள்ளைகளுடன் சேர்த்து வளர்த்தவர். உறவு முறைக்குள் திருமணம் என்பது சகஜம் என்றாலும் தாத்தா, பாட்டியை விரும்பி மணந்தவர். “உங்க வீட்டுல பொண்ணு கொடுக்கலைன்னா, ப்ரிதிவிஜ்ராஜ் மாதிரி குதிரையில வந்து உன்னை தூக்கிட்டு போயிருப்பேன்” என்று தாத்தா சொன்னதாய் பாட்டி சொல்லும்போது ஒருவித பெருமையை பாட்டி முகத்தில் பார்த்ததுண்டு. குதிரைக்கு வேலையில்லாமல் போகும் வகையில் இருவீட்டார் சம்மதத்துடன் பதினெட்டு வயதில் திருமணம் நடந்தது.

அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள். அம்மாவும் சித்தியும் பிறந்தனர். பதிமூன்று வருடம் மட்டுமே இல்வாழ்க்கை. டி.பி. நோயால் பாதிக்கப்பட்ட தாத்தா முறையான மருத்துவம் பார்க்காததால் மரணம் அடைந்தார். இளம் வயதிலேயே இரண்டு பெண்பிள்ளைகளுடன் தனித்து வாழ்க்கை. ‘கணவர் வழி சொத்தில் தனக்கு வரவேண்டிய பங்குக்கு ரூ.1500-ஐ ரொக்கமாக வாங்கிக்கொண்டு இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்திடு’ என்று உறவுகள் அறிவுறுத்த, “எனக்கு பணம் வேண்டாம். வீடுதான் வேண்டும்” என பாட்டி உறுதியாய் இருந்ததால், சொத்து விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்று பிரிக்கப்படவேண்டிய சூழ்நிலை.

பெண்களை ‘ப்ரொட்டாகனிஸ்ட்’ ஆகவும், முக்கியக் கதாபாத்திரங்களாகவும் பதிவு செய்த நல்ல சினிமா படைப்புகள் குறித்த பார்வையே நிழலழகி தொடர்.

கணவரை இழந்த பெண் வாழ்வதே போராட்டம் என்ற சமூகத்தில் தைரியமாய் நீதிமன்ற படியை மிதித்தபோது, சமூகம் வார்த்தைகளால் சாடியது. “புருஷனே போனாலும் சொத்து ஆசை போகுதா பாரு இவளுக்கு”, “ஒரு பொம்பளை இப்படி கோர்ட்டு வாசல்ல போய் நிக்கிறாளே இவள் எல்லாம்…” – இப்படி எத்தனை எத்தனையோ கேட்டும் மனதளவில் தைரியமாய் இருந்து, அந்த வழக்கை வென்று தனக்கான பங்கை பெற்றார். சிறு சிறு கைத்தொழில் செய்து இரண்டு பிள்ளைகளையும் படிக்கவைத்து நல்ல இடத்தில திருமணமும் செய்து கொடுத்து இன்றளவும் அந்த வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு, அதில் வரும் வருமானத்தில் மருமகன், பேரப்பிள்ளைகள் முன்பு கம்பீரமாக வாழ்கிறார் எனது பாட்டி.

பாட்டி தனது வாழக்கையில் மேற்கொண்ட போராட்டத்தை இன்று சுதந்திரமும் படிப்பும் இருக்கும் எனக்கு தனியாக எதிர்கொள்ள தைரியம் உண்டா என்பது கேள்விக்குறி.

*

சில படங்களை பார்க்கும்போது திரையைக் கிழித்துக்கொண்டு உள்ளே போய் அந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்துக்கு நாமே உதவத் தோணும். அந்தக் கதாபாத்திரம் அழும்போது நம் தோளில் சாய்த்துக்கொள்ள தோணும். அவர்களுக்காக போராட நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காத என்ற தவிப்பு ஏற்படும். இதன் காரணமாகவே நாம் சில படங்களை சீட் நுனியில் இருந்து பார்ப்பதும், தானாய் கண்ணீர் வருவதும், அந்த கதாபாத்திரம் ஜெயிக்கும்போது நம்மை அறியாமல் கைத்தட்டுவதும் எல்லாம் நடக்கும். ஆனால், உண்மையில் நம்மை சுற்றிதான் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் நிஜத்தில் வாழ்கிறார்கள் என்பதும், அவர்களது வாழ்க்கையை நாம் கவனித்தது கூட இல்லை என்பதும், அவர்களுக்கு நாம் தடையைக் கிழித்து உதவுவது இல்லை என்பதும் உணரும்போது சற்றே கூச்சமாக இருக்கும்.

அப்படி உணரவைத்த படைப்பு, என்.கே.முகமது கோயா இயக்கி 2015-ல் வெளிவந்த மலையாள திரைப்படம் ‘ஆலிஃப்’. தேசிய விருதுக்கு இறுதிச் சுற்று வரை சென்ற படம். காய்ச்சலும் இருமலும் வாட்டிய ஒரு தனிமையான ஞாயிறு மாலையில் இப்படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்த லெனா நடித்த படம் என்ற ஒரு காரணமே இப்படம் பார்க்கத் தூண்டியது. படத்தின் முதல் காட்சியில் நானும் லெனாவும் ஒரேநேரத்தில் இருமியபடி அறிமுகம் ஆனது தற்செயலா என்று இன்று வரை தெரியாது.

நான்கு தலைமுறைப் பெண்கள் வசிக்கும் ஒரு வீட்டில், தங்களை படாத பாடுபடுத்தும் மதக் கட்டுப்பாடு, சமூகக் கோட்பாடுகள், வறுமை, ஆணாதிக்கம் முதலான தடைகளைத் தாண்டி ஒரு பெண் எப்படி வாழக்கையை எதிர்கொள்கிறாள் என்பதை விவரிக்கிறது ‘ஆலிஃப்’.

பாத்திமா எனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் வரும் லெனா, கணவனால் கைவிடப்பட்டு தாய் வீட்டில் தன் இரு பிள்ளைகளுடன் வறுமையில் போராடும் பெண். மகளையும் பேரக் குழந்தைகளையும் வளர்த்தெடுக்க உறுதுணைபுரிகிறார் ஜீனத் பாட்டி. எந்த வேலைக்கும் உருப்படியாய் போகாத அபு, தனது மருமகன் சொத்தைக் கேட்டு மகளுடன் போடும் சண்டையில், அவனை தைரியமாய் துரத்தும்போதும், வீட்டு வேலை செய்யும் இடத்தில் முதலாளியால் அவமதிக்கப்படும் நேரத்திலும் வறுமைச் சூழலால் அதை பொறுத்துக்கொள்ளும்போதும், தனது பேரன் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும்போதும் ஜீனத் பாட்டியை என் சொந்தப் பாட்டியாகவே பார்த்தேன்.

பிள்ளைகளை படிக்கவைக்க முடியாத ஏழ்மை, உதவாக்கரை கணவன் என வாழ்க்கையை வெறுத்த பாத்திமா, ஆறுதலுக்காக கடவுளின் வார்த்தை கேட்க குரான் விளக்கக் கூட்டத்துக்குச் செல்வார், அப்படி ஒரு நாளில், அந்த உள்ளூர் மதத் தலைவர், “ஆண்கள் தவறு செய்யலாம். நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், பெண் கற்போடும் கணவனுக்கு உண்மையாக இல்லாமல் போனால், அவளை விவாகரத்து செய்யவேண்டும்’ என்று விளக்குவார். அப்போது, பாத்திமா தைரியமாய் எழுந்து “ஏன் இந்த பாகுபாடு?” என்று எதிர்த்துக் கேள்வி கேட்டதால், மொத்தக் குடும்பத்தையும் அவர்கள் சார்ந்த சமூகம் ஒதுக்கி வைக்கும்.

அதன்பின், ஊரில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளுக்கு பாத்திமாவின் குடும்பத்துக்கு அழைப்பு விடுக்கப்படாது. குட்டிப் பையன் ஆலிஃபுக்கு பிரியாணி சுவைக்க முடியாத நிலை. ஒருமுறை தனக்கு பிரியாணி சாப்பிட வேண்டும் போல் இருப்பதாக பாட்டி ஆசைப்பட, அவருக்காக பிரியாணி வாங்கிவர திருமண வீட்டுக்குச் செல்கிறான் ஆலிஃப். அங்கே அவன் விரட்டப்படுகிறான். பிரியாணியுடன் தப்பி ஓடிவரும்போது அந்த விபரீதம் நிகழ்கிறது. அது, பாத்திமா குடும்பத்தை இன்னும் அதிகமாக புரட்டிப் போடுகிறது.

தன் சிறு பிள்ளை ஆலிஃபுக்கு எதிர்பாராத நேரத்தில் நேர்ந்த சம்பவமும், அதன் விளைவாக தான் வாழும் சமூகத்தை முழுமையாகப் புரிந்துகொண்டதன் விளைவாகவும் துயரத்தில் இருந்து சிறுக சிறுக மீளத் தொடங்கியதும் பாத்திமாவின் போராட்டம் உத்வேகம் பெறுகிறது.

இதனிடையே, நம்மைச் சுற்றிலும் நல்ல மனிதர்களும் சூழ்ந்துள்ளனர் என்ற ஆறுதலையும் அடைவோம். பாத்திமா வீட்டில் ஒரு மரணம் நிகழ்கிறது. அவர்கள் வழக்கப்படி இறுதிச் சடங்கு செய்யவும் முடியாத அவலநிலை. அப்போது, பக்கத்து வீட்டுத் தமிழர் சந்திரன் (கலாபாவன் மணி) உடலை அடக்கம் செய்வதற்கு முன்வருவார். அதைப் பொறுக்காத சிலர், “இவன் சுத்தமில்லாதவன். இவன் இந்தக் காரியத்தை செய்யக் கூடாது” என்று பொதுபுத்தியை முன்வைத்து கூச்சலிடுவர். அதை ஜீனத் பாட்டியும் பாத்திமாவும் எதிர்கொள்ளும் விதம் அபாரம்.

துயரங்கள் வரிசைகட்டுவதால் அடுத்து என்ன துன்பம் நேருமோ என்று பரிதாபப்படுவோம். ஆனால், வயதால் தள்ளாடும் அந்தப் பாட்டி துணிச்சலாக எழுந்து நிற்கையில், நாமும் அந்தக் குடும்பத்தோடு போராடத் தயாராகிவிடுவோம்.

ஒரு கட்டத்தில் பக்கத்துக்கு வீட்டுப் பெண் வழிகாட்டுதலுடன், அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பாத்திமாவுக்கு கிடைக்கும் அரசு வேலையால், அந்தக் குடும்பம் வறுமையை விட்டு வெளயேவரப் போகிறது என்ற நம்பிக்கை பிறக்கும். தன்னை விவாகரத்துச் செய்து, வேறு பெண்ணை திருமணம் செய்த முன்னாள் கணவர், அரசு வேலை கிடைத்தவுடன் தன்னை மறுபடியும் சேர்த்துக்கொள்ள வருவார். அப்போது உக்கிரமாகும் பாத்திமா, “மனிதர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுப்பதற்குத்தான் மதங்களே தவிர, மனிதர்களை ஒதுக்குவதற்கு அல்ல” என்று கூறி, “ஒரு பெண்ணுக்கும் மனம் உண்டு என்பதை புரிந்துகொள்ளுங்கள்” என்று தனக்கு சுயமரியாதைதான் முக்கியம் என முடிவெடுப்பாள்.

பாத்திமா மிகக் குறைவாக பேசுவாள். மதம் தொடர்பான அவளது புரிதல்கள் தெளிவானவை. தாத்தா மூலம் கிடைத்த ஊக்கத்தைக் கொண்டு, தன்னை ஏளனமாகப் பார்க்கும் சமூகத்தை நிதானமாகவும் துணிவுடனும் எதிர்கொள்வாள். அவள் மட்டுமல்ல, வாழ்க்கையை அனுபவம் மூலம் படித்து போராட்ட வாழ்க்கைக்கு பக்கபலமாகத் திகழும் ஜீனத் பாட்டியும் நம் கவனத்தை ஈர்க்கும் நிழலழகிதான்.

ஆலிஃப் படத்தின் இறுதிக் காட்சி அற்புதமானது. எப்பேர்பட்ட சமூகத்திலும் ஒரு பெண் சுயமரியாதையுடன் நெஞ்சை நிமிர்த்தி வாழ முடியும் என்ற உத்வேகத்தை அளிக்கும்.

எங்கும் நேரில் காணக் கூடிய யதார்த்தமான கதை, நாமும் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், நம்மைச் சுற்றி நடக்கும் சமூக நிகழ்வுகள் முதலானவற்றை அடித்தளமாகக் கொண்டே ஆலிஃப் படத்தைத் தந்திருக்கிறார் முகமது கோயா. பெண்கள் தன்னம்பிக்கை பெறுவதற்கு ஜோன் ஆஃப் ஆர்க், ஜான்சி ராணி அளவுக்குப் போக வேண்டாம்; நம்மைச் சுற்றியிருக்கும் பாத்திமாக்களையும் ஜீனத் பாட்டிகளையும் கண்டுகொண்டாலே போதுமானது என்பதையும் உரைக்கவைத்தது ‘ஆலிஃப்’.

தொடர்வோம்…

3 thoughts on “நிழலழகி – 6: பாத்திமாவையும் ஜீனத்தையும் உங்களுக்குத் தெரியுமா?

 1. டெட்ராய்ட்: சிறுமிகளின் பிறப்புறுப்புகளை ஆபரேஷன் மூலம் சிதைத்ததாக கூறி, இந்திய வம்சவாளி முஸ்லீம் பெண் டாக்டர் ஜுமனா நகர்வாலா என்பவரை அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  டாக்டர் ஜுமனா, குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட தாவூதி போரா வகுப்பைச் சேந்தவர். தாவூதி போரா என்பது ஷியா முஸ்லீம் சமூகத்தின் ஒரு பிரிவாகும். இந்த சமூகத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பிறப்புறுப்பில் இதுபோன்ற ஆபரேஷன் செய்யப்படும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது சிறார்களுக்கு செய்யப்படும் “சுன்னத்” சடங்கு போலத்தான் இதுவும். ஆனால் அமெரிக்க சட்டப்படி இது குற்றமாகும்.
  ——————–

  இது திருக்குரானால் தடுக்கப்பட்ட காட்டுமிரண்டிகளின் செயல். லாக்கப்ல உட்டு இந்து முட்டாள் தேவ்டியாமுண்டையை உதை.

  Like

 2. // சில படங்களை பார்க்கும்போது திரையைக் கிழித்துக்கொண்டு உள்ளே போய் அந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்துக்கு நாமே உதவத் தோணும். //
  ———————-

  பார்ப்பன பெண்களை இழிவு செய்யும் இது போன்ற கோயில் சிலைகளை பார்த்தால், அந்த அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விட என் மனம் பதறுகிறது. இந்த பார்ப்பனருக்கு ஏன் கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரண வரமாட்டேங்குது?

  Like

 3. // இது திருக்குரானால் தடுக்கப்பட்ட காட்டுமிரண்டிகளின் செயல். லாக்கப்ல உட்டு இந்து முட்டாள் தேவ்டியாமுண்டையை உதை. //
  ———————-

  திருத்தம்:

  இது திருக்குரானால் தடுக்கப்பட்ட காட்டுமிரண்டிகளின் செயல். லாக்கப்ல உட்டு இந்த முட்டாள் தேவ்டியாமுண்டையை உதை.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.