ஆடி கார் வைத்திருக்கும் விவசாயி அம்மணமாய் ஓடுவதும் அசிங்கம்தானே?

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்

கடைசியில் பாரதத்தின் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்துகிற நிலைக்கு வந்துவிட்டோம். இது உண்மையிலேயே தேசிய அவமானம். அங்கே போராடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் அய்யாக்கண்ணு ஆடிக் கார் வைத்திருக்கிறாரா? என்றெல்லாம் பேசிப் புரிய வைக்க வேண்டிய தேவையில் இருப்பது எவ்வளவு அவமானம் தெரியுமா? இருபது ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களை எல்லாம் வசதியான விவசாயியாக வரித்துக் கொண்டால் என்ன செய்வது? கடுமையான வறட்சி நிலவுகிறது. ஏற்கனவே சொன்ன மாதிரி பழங்கள், காய்கறிகள் எல்லாம் போதுமான நீரில்லாமல் செடியிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படி உதிர்கிறவற்றிற்கு சந்தையில் விலை கிடைப்பதில்லை. கிலோ அறுபது ரூபாய் போய்க் கொண்டிருந்த கொய்யா இப்போது 15 ரூபாய்க்கு விலை போனாலே அதிசயம். அதையும் எடுக்கவிடுவதில்லை.

தண்ணீர் இருந்தால் தப்பித்து விடலாம்? ஆனால் என்ன நடக்கிறது தெரியுமா? ஒரு இடத்தில் போர்வெல் தோண்டும் போது 800 அடியில்தான் தண்ணீர் வருகிறது. 800 அடி தோண்டுவதற்கு ஆகும் செலவு லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது. இவர்களின் கணக்குப்படி வைத்துக் கொண்டாலும்கூட பதினெட்டு ஏக்கர் வைத்திருக்கிற விவசாயி ஒருத்தர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய நிலத்தில் பதினைந்து போர் போட்டிருக்கிறார். அதில் ஒன்றில் மட்டுமே ஒன்றரை இஞ்ச் தண்ணீர் வந்திருக்கிறது. அதுவும்கூட அரைமணி நேரம் மட்டுமே ஓடுகிறது. போர் போட வசதி இருப்பவர்களின் நிலை இப்படி இருக்கையில், வசதி இல்லாதவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

அறிவியல் பூர்வமாக அடித்துச் சொல்ல முடியாது என்கிறார்கள். அண்ணா யுனிவர்சிட்டியில் போய்க் கேட்டால், அப்படி எங்களால் நிலத்தடி நீர் மட்டத்தை துல்லியமாகக் கணிக்க முடியாது. ஒரு ரேண்டமாகச் சொல்வோம் அவ்வளவுதான் என்று கைவிரிக்கிறார்கள். வெறும் ஐந்து ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்கிற விவசாயி ஒருத்தர் மனைவி மற்றும் உறவினர் நகைகளை எல்லாம் அடகு வைத்து (நகையிருந்தால் பணக்கார விவசாயி என்று சொல்வது குறித்து பேசுவதில் பயனில்லை) இப்படி பலபேர் சொன்னதைக் கேட்டுக் குத்துமதிப்பாக ஒரு இடத்தில் தோண்டினார். ஆயிரத்து நூறு அடி தோண்டியும் தண்ணீர் இல்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் கதை இதுதான். போர்வெல் போடுகிறவர்கள் அந்த ஊரில் இப்படி நடந்தது, இந்த ஊரில் இப்படி நடக்கிறது என கதைகதையாய்ச் சொல்கிறார்கள். அத்தனையும் ஆயிரம் அடிக்கு மேல் போயும் தண்ணீர் வராத கண்ணீர்க் கதைகள். இதுதான் உண்மையிலேயே பெரும்பாலான தமிழக விவசாய நிலங்களின் நிலைமை.

தண்ணீரும் இல்லை. தண்ணீர் கொண்டு வர முதலும் இல்லை. முதல் இருந்தாலும் தோண்டினாலும் தண்ணீர் வருமா என்கிற உத்தரவாதமும் இல்லை. பயிர்கள் கருகுகின்றன. இந்த அழிவு ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து இனி மீள்வதற்கு ஒரு குறிப்பிட்ட பகுதி நிலங்களை விற்றுத்தான் ஆகவேண்டும். ஏற்கனவே வாங்கிய கடனைக் கட்டுவதற்கும் வழியில்லை என்கிற நிலையில் அவர்களும் பாவம் என்னதான் செய்வார்கள்? அம்மணமாய் ஓடுகிற நிலை ஒரு மனிதனுக்கு வருகிறதென்றால், உள்ளுக்குள் எவ்வளவு புழுங்கிக் கொண்டிருப்பார்கள் தெரியுமா? ஒரு பேச்சுக்குச் சொல்வதென்றால்கூட ஆடி கார் வைத்திருப்பவன் அம்மணமாய் ஓடுவதும் அசிங்கம்தானே? ஆடி கார் வைத்திருப்பவர்கள் அப்படி ஓடுவார்களா என்ன? அல்லது ஓட விட்டு விடுவார்களா என்ன?

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர். சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

2 thoughts on “ஆடி கார் வைத்திருக்கும் விவசாயி அம்மணமாய் ஓடுவதும் அசிங்கம்தானே?

  1. கட்டுரைத் தலைப்பு எதிர்மறைப் பார்வையைத் தருகிறது. ஆனால் கட்டுரை அவ்விதமல்ல. “பணக்கார விவசாயி” எனும் பதம தவறான அரத்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதை புரியவைக்கின்றது. விவசாயப் புறக்கணிப்பு பொருளாதாரமானது உடமை விவசாயிகளின் விவசாய உடமைகளை பறித்தெடுக்கிறது. விவசாய மேட்டுக்குடி என்றோர் வர்க்கத்தட்டை இல்லாதொழித்து வருகிறது. இப் பொருளாதாரக் கட்டுமானத்தின் கோரப்பிடியிலிருந்து இவ்விசாயிகளால் தப்பமுடியாது. அவர்கள் தமது முகவரிகளை இனியும் பயன்படுத்தமுடியாது. அம்முகவரிகள் தொலைந்துபோய்வருகின்றன. அரசியல் அரங்கினில் அவர்கள் தனித்துப்போனார்கள் என்பதை இபோராட்டம் அவர்களுக்கு துல்லியமாக விளக்கிவிட்டது. இனி அடுத்த கட்டத்திற்கு அவர்கள் முன்னேறுவார்களென எதிர்பார்ப்போம். முன்னேற வாழ்த்துவோம். “பணக்காரவிவசாய்களுக்கு” எதிர்மறை ஆசிரியராக இருந்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம். ஆளுவோர்கள் தமது வர்க்க எதிரிகளுக்கு எதிராகக் கற்களைத் தூக்குவது தமது சொந்தக்காலில் போட்டுக்கொள்ளத்தான என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    Like

  2. கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்.

    மாட்டு மூத்திரம் குடிக்கும் பாப்பானையும் நாத்தம் புடிச்ச பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவையும் நாட்டை விட்டு அடித்து விரட்டினால், நாடு தூய்மையாகி விடும். உலகமே காறித்துப்புகிறது. சொரண கெட்ட ஜென்மங்கள்.

    மானங்கெட்ட பாப்பார பயலுக. நாட்டையே நாறடித்துவிட்டு பெரிய யோக்கியன் மாதிரி பேசறானுக. “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என தந்தை பெரியார் ஏன் போதித்தார் என்பது இப்பொழுது நன்றாகவே புரிகிறது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.