
கே. ஏ. பத்மஜா
வளரும் பெண்பிள்ளைகளை அணுகும் முறைகள் ஒரு பெண்ணிற்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை முடிவு செய்வது ஆணின் விந்தணுக்களில் இருக்கும் குரோமோசோம்தான். ஆனால், ஏனோ இந்த சமூகம் பெண்பிள்ளை பிறந்தால் தாயை மட்டும் குறைசொல்லும் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அம்மா என்பவள் சுற்றி இருப்பவர்களின் ஆதரவும், வாழ்த்துகளும் பெரிதாய் இல்லாதபோதும் பெற்று எடுத்த பிள்ளைமேல் துளியும் பாசம் குறையாமல் வளர்க்கிறாள்.
இன்று பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் பருவ வயதை எட்டும்போது ஒருவித பதற்றத்துக்கு ஆளாகின்றனர். மாறிவரும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை என பல காரணங்களால் குழந்தைகள் பத்து வயதிலே பூப்பெய்துவிடுகின்றனர். பூப்பெய்துவிட்டால் பொறுப்பு வரவேண்டும் என்பதைத் தாண்டி, தன் குழந்தையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராக்க வேண்டியது தாயின் கடமை. உடலளவில் ஏற்படும் மாற்றங்கள், மாதம்தோறும் வரும் மாதவிடாய் முதலானவை குறித்து பேசவேண்டியது அவசியம்.
ஒரு குழந்தை பிறந்து மூன்று வயதில் இருந்து “குட் டச், பேட் டச்’ சொல்லிக்கொடுக்க வேண்டும். பருவ வயதை நெருங்கும் முன் உடல் ரிதியாக வளர்ச்சி அடைவதை வைத்து பூப்பெய்தல் நெருங்குவதை தாய்மார்கள் கண்டுகொள்ளலாம். மகளிடம் மாதவிடாய் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அப்போதே பேசத் தொடங்கலாம். பிறந்தநாள் வரும்போது ஒவ்வொரு வருடமும் குழந்தை வளர்வது போல், பற்கள் விழுந்து முளைப்பது போல் உடல் உள்ளுறுப்புகளும் வளரும். எனவே, குழந்தை உடலில் கர்ப்பப்பை எனும் உள்ளுறுப்பு வளர தொடங்கியதன் அறிகுறி பூப்பெய்தல் என்று சொல்லிக் கொடுக்கலாம்.
உடல் உறுப்புகள் பலம் பெற சத்தான உணவு உண்ணவேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். அப்படி சத்தான உணவை தினமும் எடுத்துக்கொள்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். முடிந்தவரை சிறு வயதில் பருவம் அடையும்போது உறவுகளை அழைத்து, கல்யாண மண்டபம் பிடித்து, புடவை கட்டி, மாலை போடுவது போன்ற சடங்குளை தவிர்ப்பது நல்லது.
பிள்ளைகள் புடவை கட்டி மேடை ஏறும்போது தாங்கள் பெரியவர்களா? சிறியவர்களா? என்ற மனரீதியான குழப்பம் அடைவர். காதல், ஈர்ப்பு போன்றவைக்கு தாங்கள் தாயார் என்றும் அவர்கள் நினைத்துகொள்ள வாய்ப்பு அதிகம். முன்பெல்லால் பதினாறு, பதினெட்டு வயதில் பூப்பெய்வதால் தங்கள் பெண் திருமணத்துக்கு தயார்; பெண் கேட்டு வரலாம் என உறவுகளுக்கு அழைப்பு விடுக்கும் நிமித்தமாகவே சடங்கு விழா வைப்பர். ஆனால் இன்றோ பத்து, பதினோரு வயதிலே வயதிற்கு வரும்போது இந்த ஆடம்பர சடங்குகள் அவசியமா என சிந்திக்க வேண்டும்.
மாதம்தோறும் வரும் மாதவிடாயின்போது உடல் உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய முறைகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். முடிந்தவரை துணி, பஞ்சுகளைத் தவிர்த்துவிட்டு சுகாதாரமான சானிடரி பேட்களை அறிமுகப்படுத்துங்கள். முதலில் மாதவிடாய் சுழற்சி சரியாக வராவிட்டால் பயப்பட வேண்டாம். எந்த மருந்தும், மருத்துவமும் அவசியமில்லை. ஒரு வருடம் வரை அடுத்த மாதவிடாய் வரவில்லை என்றாலும், அது நார்மல்தான்.
நாம் குழந்தைகளிடம் பேசத் தயக்கம் காட்டினால், குழந்தைகள் தானாகத் தவறானத் தகவல்களை தெரிந்துகொள்வர். இப்படி ஒவ்வொரு வயதிலும் பெண்பிள்ளைகளை வளர்க்க, அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் சொல்ல பெற்றோராகிய நாம் முதலில் தயாராக வேண்டும்.
கே. ஏ. பத்மஜா, பத்தியாளர்.
// பிள்ளைகள் புடவை கட்டி மேடை ஏறும்போது தாங்கள் பெரியவர்களா? சிறியவர்களா? என்ற மனரீதியான குழப்பம் அடைவர்.//
——————–
அது சரி…. மொதல்ல அந்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கு ஒரு சின்ன ஜட்டி போட்டு விடுங்கோ….
LikeLike