நெட்டீசன்களே இளையராஜாவை விட்டுவிடுங்கள்..!

சரா சுப்ரமணியம்

சரா

விவரம் அறிந்தவர்கள் பலர் சரியான விளக்கங்களை அளித்த பின்னரும் இளையராஜாவை கலாய்ப்பதும், கடுமையாக விமர்சிப்பதும் நொந்துகொள்ளத்தக்கது. இளையராஜாவின் இயல்புத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் அவர் மீது தவறான கண்ணோட்டத்துக்கு வழிவகுத்துள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், காப்பிரைட் – ராயல்டி விவகாரத்தில் பலராலும் பல கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ள அவர் மீது வெறுப்புணர்வை வெவ்வேறு வடிவங்களில் கொட்டுவதை ஏற்க முடியவில்லை.

நம் காதல் உள்ளிட்ட உணர்வுகளை இசையால் வளர்த்தவர்; மன அழுத்தத்தில் இருந்தபோதெல்லாம் இனிய கீதத்தால் மீட்டவர்; வெற்று இரவுகளை இன்னிசையால் நிரப்பியவர்… இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், ராஜாவின் மேன்மைகளை. இவற்றை அனுபவித்தவர்கள் கூட இப்போது அவரைக் கழுவியூற்றுவது கவன ஈர்ப்புக் காலக் கொடுமை.

ஆம், ராஜா அப்டேட்டாக இல்லைதான். சமகால திரையிசையில் அவருக்கான இடம் இல்லைதான். (அந்த இடமும் தேவையில்லை. அவர் ஓய்வு எடுக்கட்டும்.) அந்த விரக்தி அவருக்கு இப்போது இருக்கத்தான் செய்யும். வாழ்ந்துகெட்ட ஜமீன் போல வாழும் அவருக்கு, தன் கலைச் சொத்துகள் கண்முன்னே சூறையாடப்படுவது இன்னும் விரக்தியைக் கூட்டும் என்பது தெளிவு. ஒருவேளை, தற்போதும் திரையிசையில் அவர் வேற லெவலில் இருந்திருந்தால், இந்த மேட்டர்களை சில்லறையாகக் கருதி கண்டுகொள்ளாமல் போயிருக்கலாம்.

சமூக வலைதளத்தில் நீண்ட நாட்களாகவே அப்டேட்டாய் இருக்கும் எஸ்.பி.பி. டீம், இந்த மேட்டரை எப்படி அணுகினால், எந்தெந்த வார்த்தையை – எப்படிப்பட்ட சொற்றொடரைப் பயன்படுத்தினால் நெட்டிசன்களின் ஆதரவைப் பெற முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. நெட்டிசன்களின் ஆதரவைப் பெறும் வகையில் சிம்ப்பதி கிரியேட் செய்யும் பாணியைப் பின்பற்றுவதோடு மட்டுமின்றி, இளையராஜாவை கழுவியூற்றுவதற்கான எல்லா ஸ்கோப்களையும் உருவாக்கிவிட்டு பம்மிக்கொண்டிருக்கிறது எஸ்.பி.பி. டீம்.

இளையராஜா மீதான கடந்த கால கசப்புகளை ஒன்றுதிரட்டி, இந்த விவகாரத்தில் அவரை காய்ச்சி எடுப்பது, நமக்கு கலை வடிவில் நன்மைகளையும் பெருமைகளையும் ஈட்டித் தந்த நம் வீட்டுப் பெரியவர் ஒருவரை நாமே பங்கம் செய்வதற்கு ஒப்பானது.

இந்த விவகாரம் ட்ரெண்ட் ஆனபோதே வேண்டினேன், உடனடியாக நம் நெட்டிசன்களின் கவனம் ஈர்க்கத்தக்க வேறு முக்கிய விவகாரங்கள் தலைதூக்க வேண்டும் என்று. ஆனால், வெச்சு செய்யத்தக்க வேறு எந்த மேட்டரும் சரியாக பிடிபடாததால் இளையராஜா இன்னமும் பலரால் வைத்துச் செய்யப்படுவது வருந்தத்தக்கது.

சரா சுப்ரமணியம், ஊடகவியலாளர்.

2 thoughts on “நெட்டீசன்களே இளையராஜாவை விட்டுவிடுங்கள்..!

  1. சைவக்குறவர் யார்?:

    பறையராக கீழ்ச்சாதியில் பிறந்தாலும், தனது திறமையால் தூய சைவ பார்ப்பனருக்கு நிகராக இளையராஜா உயர்ந்திருப்பதால், அவர் தொல்காப்பியம் போற்றும் ஒரு தூய சைவக்குறவர் ஆகிறார். அவருடைய சைவக்குறப்பணி மேன்மேலும் ஓங்குக.

    Like

  2. இயல், இசை, நாடமென்றால் அது ப்ராஹ்மின்ஸ்தான். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, வரம் தந்த சாமி தலையிலேயே கையை வைக்கிறார் இசைக்குறவர் இளையராஜா….

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே…

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.