இளவரசன் கண்டிப்பாக “தற்கொலை செய்து கொள்ளவில்லை” : பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி…

தருமபுரி மாவட்டத்தின் நத்தம் கிராமத்தை சேர்ந்த தலித் சமூக இளவரசனுக்கும், செல்லங்கோட்டையைச் சேர்ந்த வன்னிய சமூக திவ்யாவும், காதலித்துத் திருமணம் செய்ததால் ஏற்பட்ட கலவரமும், அதன் பின்னரான தொடர் போராட்டங்களும், இறுதியில் ரயில் தண்டவாளத்தில் இளவரசன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது வரையிலான சம்பவங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் கருப்புப் பக்கங்கள்.

இளவரசனின் மரணத்தில், இது வரையிலும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை என்றாலும், அது குறித்த சிபிசிஐடி அறிக்கையை ஏற்று, அது தற்கொலைதான் என்று சில வாரங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனிடையே, இளவரசனின் மரணம் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, பிரபல தடயவியல் நிபுணரும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வருமான சம்பத் குமார்  thewire.in இணையதளத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், தருமபுரி இளவரசனின் மரணம் என்பது தற்கொலை அல்ல என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து, தான் அளித்த அறிக்கையை சிபிசிஐடி போலீசார், குப்பையில் வீசிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மருத்துவரும், தடயவியல் துறை தலைவருமான சம்பத்குமாரின் பேட்டியில் இருந்து சில பகுதிகளை தமிழாக்கம் செய்திருக்கிறோம்..

*ஜூலை 11, 2013-ம் வருடம் இளவரசனின் உடலை ஆய்வு செய்த பின்,  உயர்நீதிமன்றத்திற்கு நீங்கள் அளித்த அறிக்கையில் பல விதமான சந்தேகங்களை எழுப்பி இருந்தீர்கள் அல்லவா ? உங்களைச் சந்தேகப்பட வைத்தது ஏது என்பதைப் பற்றிப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் ?

*இளவரசனின் மரணம் என்பது ரயிலினால் ஏற்பட்டது அல்ல என்பதற்கான அத்தனை அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இருக்கின்றன. இளவரசனின் உடலில் இருந்த காயங்கள், அவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்  என்ற கதைக்குச் சற்றும் பொருத்தமானதாக இல்லை.

60-100 கிலோமீட்டர் வேகத்தில், இளவரசனின் வலது பக்கமாக எக்ஸ்ப்ரெஸ் ரயில் வந்திருக்கக் கூடிய சூழலில், இளவரசனின் இடது தோற்பட்டையிலும், தலையின் இடப்பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டது எப்படி என்பது சந்தேகத்தை அதிகரிக்கும் முக்கியமான பகுதியாகும்.

தண்டவாளத்தின் அருகில் நின்று, ரயிலை எதிர்கொண்டிருந்தால் கூட, இளவரசனின் முன்புறம் முழுவதுமாக, சேதமடைந்திருக்கும். ஆகவே, இளவரசனின் உடலில் இருந்த காயங்கள் என்பது, ரயில் முன் பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவதை முற்றிலும் நிராகரித்து விடுகிறது.

Constructed-sketch-by-Dr-Sampath-Kumar-of-only-possible-position-of-train-hitting-Ilavarasan-but-not-corroborated-with-nature-of-injuries.jpg
தண்டவாளத்தின் ஓரத்தில், இளவரசன் நின்று கொண்டு, ரயிலை எதிர்கொள்வது போன்ற ஒரு படத்தை நாங்களே வரைந்தோம். அந்தப் படத்தின் மூலமாகக் கூட, அப்படி ஒரு சூழலில் இளவரசன் நின்றிருந்தால், அவருடைய முன்பகுதி முழுவதுமாகச் சேதமடைந்திருக்கும் என்பது தெரிய வருகிறது. 

அதிவேகத்தில் வரும் எக்ஸ்ப்ரெஸ் ரயிலில் அடிபட்டால் , கழுத்து எலும்பு பகுதிகள் கண்டிப்பாக,சேதமடையும் . ஆனால்  இளவரசன் உடலில் அப்படி எந்தக்காயமும் காணப்படவில்லை.

ஒருவேளை, எக்ஸ்ப்ரெஸ் ரயிலின் ஓரப்பகுதிகள் உரசி இருந்தாலும் கூட, இளவரசன் உடல், தண்டவாளம் அருகில் வீசப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ரயிலின் அந்த வேகத்திற்கு, அந்தபகுதியில் இருந்து வெகு தொலைவில் இளவரசன் உடல் வீசப்பட்டிருக்க வேண்டும். அப்படி தூக்கி வீசப்பட்டிருந்தால் கூட, அதன் மூலம் ஏற்படும் காயங்கள் எதுவும் இளவரசன் உடலில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

*ஒரு வேளை, பிற மருத்துவர்கள் சொல்வது போல், ‘crow catch’ நிலையில் இளவரசன் ரயில் முன் உட்கார்ந்திருந்தால்… ?

தண்டவாளத்தின் ஒராமாக குத்த வைத்து உட்கார்ந்து, தலையை மட்டும் ரயிலுக்கு முன் நீட்டி இருந்தால் (‘crow catch posture’) கூட, இளவரசனின் வலது புறமாக வந்து கொண்டிருந்த ரயிலினால், அவரின் தலையின் வலதுபுறம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், இளவரசனுக்கு மிக தெளிவாக, தலையின் இடதுபுறத்தில் மட்டுமே காயம் ஏற்பட்டு இருந்ததை நாம் கவனிக்க வேண்டும். ரயில் முன்பாக குத்தவைத்து அவர் உட்கார்ந்திருந்தால் கூட, அவருடைய மண்டையோடு முழுவதும் படுகாயங்கள் ஏற்பட்டிருக்கும்.

*உங்களின் பிரேதப் பரிசோதனையில், இளவரசனின் இடது முழங்கையில் ஏற்பட்டிருந்த காயத்திற்குக் காரணம் என்ன? என்று கண்டுபிடித்தீர்களா ?

அது அத்தனை ஆழமான காயமொன்றும் இல்லை. இடது கையின் முழங்கையின், பின்புறத்தில் அந்தக் காயம் இருந்தது. இளவரசனின் மரணதிற்கு ரயில் காரணமல்ல என்று முடிவெடுத்து விட்டால், முழங்கை காயத்திற்கு, அவரை, அவர் தற்காத்துக்கொள்ள முயன்றபோது ஏற்பட்ட காயமென்றே நான் கருதுகிறேன். அதாவது அவரை யாராவது தாக்க வந்து, அதை இளவரசன் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட காயம் என்றே நான் கருதினேன்.

*“இளவரசன் மதுவின் பிடியில் இருந்தார்” என்ற எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையை இறுதியாகக் கொண்டு, “இளவரசன் மரணம் என்பது தற்கொலையே” என்று சிபிசிஐடியும், சென்னை உயர்நீதிமன்றமும் முடிவுக்கு வந்து விட்டார்களே… ?

viscera அறிக்கையின்படி, இளவரசனின் மூளையில் 100 மில்லி லிட்டர் ரத்தத்திற்கு, 81 மில்லிகிராம் அளவில் மது இருந்ததாகக் கூறப்படுகிறது. சாதரணமாக 50 மில்லிகிராம் அளவில் இருந்ததாலே, “மதுவின் பிடியில் இருந்ததாக” கூறமுடியும்தான். ஆனால், சில காரணக் காரியங்களின் அடிப்படையில், 300 மில்லிகிராம் மது அளவு இருப்பவர்கள் கூட, இயல்பாக இருக்க முடியும்.

ஆனால்,எய்ம்ஸ் மருத்துவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மிகவும் நெருடலாக இருப்பது என்னவென்றால், இளவரசனின் நெஞ்சுப்பகுதி மற்றும் இடதுகை நடுவிரலில் காணப்பட்டதாகச் சொல்லப்படும் கிரீஸ் கறைகள் மட்டுமே.

ஜூலை 5-ம் தேதி தர்மபுரியில் வைத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபோது இளவரசனின் உடலில் இல்லாத கிரீஸ் கறை, ஜூலை 11-ம் தேதி நான் பிரேதப் பரிசோதனை செய்யும்போது இளவரசனின் உடலில் காணப்படாத கிரீஸ் கறை, ஜூலை 13-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்யும்போது மட்டும் இளவரசனின் உடலில் காணப்பட்டது எப்படி ?

Add-subheading-1.jpg

இளவரசனின் உடலை ஆராய்ந்த ஐந்து மருத்துவர்களால், கண்டுபிடிக்க முடியாத கிரீஸ் கரையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கண்டறிந்தது எப்படி என்பது மட்டும் தெரியவில்லை.

*இளவரசன் மரணம் தொடர்பான, அதிகாரிகளின் விசாரணையில் குளறுபடிகள் இருந்தனவா… ?

ஆமாம். நிறையவே. இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே, அந்த இடத்தை வெள்ளையடித்திருந்ததும், அங்கிருந்த கற்களுக்குப் பதிலாக, புதிய கற்கள் நிரப்பபட்டிருந்ததும் குறிப்பிடத்தகுந்தவை.

எந்தவித மண்ணும் இல்லாத, கிரீஸ் கறையும் இல்லாத, பளீர் வெண்மை மிளிரும் சட்டையணிந்து, தண்டவாளத்தில் அருகில் கிடந்த இளவரசனின் புகைப்படம்தான் என்னிடம் முதலில் காண்பிக்கப்பட்டது. ஆனால், இளவரசனின் உடலை நான் பரிசோதனை செய்யச் சென்றபோது, அந்தச் சட்டையைப் பார்க்க முடியவில்லை. விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்தச் சட்டை, இளவரசனின் ஷூ, வாட்ச், போன்றவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் என்னிடம் கூறினர்.

கரையில்லாத சட்டை அணிந்திருந்த இளவரசனைதான், தர்மபுரியில்,  டாக்டர் Thunder Chief, பிரேத பரிசோதனை செய்திருக்கிறார். ரயில் முன் விழுந்து தற்கொலை செய்திருப்பவனின் சட்டையில் சிறிதளவாவது, கறை இருந்திருக்க வேண்டுமல்லவா ?

அந்தச்சட்டை பற்றி டாக்டர் Thunder Chief-டம் கேட்டபோது, பிரேத பரிசோதனை முடிந்ததும், இளவரசனின் உடைமைகளை ரயில்வே போலீசாரிடம் அளித்ததாகக் கூறினார். ரயில்வே போலீசிடம் கேட்டபோது, உள்ளூர் போலீசிடம் அவற்றை ஒப்படைத்து விட்டதாகத் தெரிவித்தனர். உள்ளூர் போலீசாரோ, மீண்டும் ரயில்வே போலீசாரை கைகாட்டினார். கடைசிவரை, அந்தக் கறையில்லாத சட்டையைப் புகைப்படத்தில் மட்டுமே காட்டினர்.

இவற்றை எல்லாம், நீதிபதி சிங்காரவேலுவிடம் எடுத்து கூறி இருக்கிறேன். இளவரசனின் மரணம் கொலை என்று எங்களால் நிரூபிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அது தற்கொலை அல்ல என்பதை எங்களால் நிரூபிக்க முடியும். அதற்கான அத்தனை ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றன.

Source: https://thewire.in/116492/ilavarasan-death-not-suicide-says-doctor-who-conducted-autopsy/

 

One thought on “இளவரசன் கண்டிப்பாக “தற்கொலை செய்து கொள்ளவில்லை” : பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி…

 1. அவர்கள் உதைக்க உதைக்க, தலித் தலைவர்களுக்கு ஓட்டு அறுவடையாகிறது. அமோக விளைச்சல்.

  வெளியே நீலிக்கண்ணீர், பின் கதவு வழியே ரகசிய சந்திப்பு, அம்மா அய்யா காலில் விழுந்து “நான் நன்றியுள்ள நாய்ங்க” எனும் அடிமை சாசன உறுதி மொழி, பெட்டி, குட்டி, புட்டி, அடுத்த கொலை, இந்த கொலைக்கு ஆதாரமில்லை, பழச பத்தி பேசாதே, கேஸ் மூடியாச்சு…, அடுத்த கேச கவனி…
  ————

  தலித் சகோதரா, இவ்வளவு அடி உதை வாங்கியும் இன்னமும் ஏனிந்த ஜாதி சாக்கடையில் உழல்கிறாய்?. திருக்குரானை எடு, அல்லாஹு அக்பரென முழங்கு, பள்ளிவாசலுக்கு செல். எந்த ஜாதி வெறியனும் உன்னை நெருங்க மாட்டான்.

  அவன் அத்து மீறினால், ஜிஹாத் செய். பாப்பார தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை உதை. திராவிட நாட்டை உருவாக்கு.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.